அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வெள்ளி, 23 மார்ச், 2012

தாடி வளர்ப்பதினால் ஏற்படும் ஆன்மீக, அறிவியல் நன்மைகள்.

                                                                                   பாத்திமா ஷஹானா (கொழும்பு)
 
இன்று தாடி வைக்கும் ஆண்களின் எண்ணிக்கை முஸ்லிம்கள் மத்தியிலும் குறைந்து வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. இன்றைய இளைய சமுதாயத்தினர் உலக நடைமுறைக்கு அமையவே (fashion) தாடி வைக்கின்றனர். ஒவ்வொரு விதமான நவீன வடிவங்களில் (styles) தலை முடிகளை வெட்டுவது போல் தாடிகளையும் ஒவ்வொரு நவீன வடிவங்களில் வடிவமைத்து அந்நிய கலாசாரத்திற்கு ஒப்பாக நடந்து கொள்கின்றனர். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர். 

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) ஆதாரம்: அபூதாவூத் 3512

இஸ்லாத்தின் பார்வையில் தாடி. 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள், தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரழி) , ஆதாரம்: புஹாரி 5892

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மீசையை ஒட்ட கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கிகளுக்கு)களுக்கு மாறு செய்யுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), ஆதாரம்: முஸ்லிம் 435

மேற்கண்ட செய்திகளில் இருந்து இஸ்லாம் தாடி வளர்ப்பதைக் வலியுறுத்திப் பேசுவதையும், அந்நிய கலாச்சாரத்திற்கு ஒப்பாக விதவிதமாக ஒவ்வொரு வடிவங்களில் தாடி வளர்ப்பதை தடை செய்வதையும் நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. 

அல்லாஹ்வின் படைப்பில் அவன் எந்த ஒன்றையும் வீணாக படைக்கவில்லை.

வானத்தையும், பூமியையும் அவற்றுக்கு இடைப்பட்டதையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (ஏக இறைவனை) மறுப்போரின் எண்ணம். மறுப்போருக்கு நரகம் எனும் கேடு உள்ளது. (அல்குர்ஆன் 38:27)

ஆண்களுக்கு மட்டும் விசேஷமாக முகத்தில் தாடி வளரும் வன்னம் அல்லாஹ் படைத்திருக்கின்றான் என்றால் அதை முழுவதுமாக மழித்துக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. தாடி மழித்துக் கொள்வதற்குறிய ஒன்றாக இருந்திருந்தால் இறைவன் மனிதனைப் படைக்கும் போதே பெண்களைப் போல் ஆண்களுக்கும் தாடி வளராத வன்னம் படைத்திருப்பான். 

தாடி வைப்பதில் ஏராளமான நன்மைகள் இருப்பதனால் தான் இஸ்லாம் தாடி வைப்பதை வலியுறுத்துகின்றது. விஞ்ஞான, மருத்துவ ஆய்வுகளும் இதை ஊர்ஜிதம் செய்கின்றன. 

விஞ்ஞான ஆய்வுகளின் படி தாடி வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்.

சமூக மனோ தத்துவவியலாளர் Dr.Freedman என்பவரால் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி

செவ்வாய், 6 மார்ச், 2012

செஷல்ஸில் நடந்த மாரத்தான் போட்டியில் தமிழக இளைஞர் 3வது இடம்

செஷல்ஸ்:  செஷல்ஸ் தீவில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் தமிழக இளைஞர் பதூர் சுலைமான் மூன்றாவது இடத்தை பிடித்தார்.

செஷல்ஸ் தீவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் ஈக்கோ பிரெண்ட்லி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து 5வது ஆண்டாக நடத்தப்பட்ட போட்டி கடந்த மாதம் 26ம் தேதி நடந்தது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதில் ஆண்கள் பிரிவில் தமிழகத்தின் காயல்பட்டினத்தைச் சேர்ந்த பதூர் சுலைமான்(31) மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

அவர் இப்போட்டியின் 42.165 கிலோமீட்டர் தூரத்தை 3 மணி நேரம் 48 நிமிடம் 12 வினாடிகளில் கடந்தார்.
 

சிறுபான்மை கல்விக்காக 5 துணைக் குழுக்கள்!

புதுடெல்லி:சிறுபான்மை கல்விக்காக 5 துணைக் குழுக்களை உருவாக்க மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தீர்மானித்துள்ளது.

சிறுபான்மையினருக்கு தொழில் அடிப்படையிலான கல்வி திட்டத்தை அமுல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களை முன்னிறுத்தி துணைக்குழுக்கள் உருவாக்கப்படும். சிறுபான்மையினருக்கான பல்வேறு கல்வித் திட்டங்களை கண்காணிக்க நியமிக்கப்பட்ட தேசிய கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தில் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபல் இதனை தெரிவித்தார்.

தேசிய கண்காணிப்புக் குழுவின் முஹ்டல் கூட்டம் நேற்று கபில் சிபலின் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. சிறுபான்மையினருக்கு தொழில் அடிப்படையிலான கல்வி திட்டத்தை அமுல்படுத்துதல், உருது-ஆங்கில மொழிகளை பரப்புதல், சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த பெண்களின் கல்வி, தகவல் சேகரிப்பு உள்ளிட்ட தேவைகளுக்காக ஐந்து கமிட்டிகள் உருவாக்கப்படும்.

மதரஸாக்கள் உள்பட சிறுபான்மை சமூகத்தினர் நடத்தும் கல்வி நிலையங்களில் கூடுதல் தொழில் அடிப்படையிலான கல்வி பாடங்களை

திங்கள், 5 மார்ச், 2012

அழியும் நிலையில் மாண்புமிகு மனிதனின் மனிதாபிமானம்

 பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
 சகோதர, சகோதரிகளே மனிதர்களாகிய நாம் அல்லாஹ் படைத்த படைப்பினங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த படைப்பாக இருக்கிறோம். தன்னிச்சையாக முடிவு எடுக்கிறோம், சில தவறுகளும் செய்கிறோம், தவறை உணர்கிறோம், செய்த தவறுக்கு இறைவனிடமும் சம்பந்தப்பட்ட மக்களிடமும் மன்னிப்பு கோருகிறோம், மீண்டும் தவறுகள் நேராத வண்ணம் நமக்கு நாமே ஒரு வேலியை போட்டுக் கொள்கிறோம். நாம் சிந்திக்கின்றோம், உணர்கிறோம், சிரிக்கிறோம், அழுகிறோம், பேசுகிறோம், ஆடுகிறோம், பாடுகிறோம், ஆனந்தமாகவும் சுதந்திரமாகவும் சுற்றித்திரிகிறோம். அல்லாஹ் படைத்த ஒவ்வொரு பொருளையும் அது அணுவாக இருந்த போதும் ஆராய்ச்சி செய்துபார்க்கிறோம் சிந்தித்துப்பாருங்கள் இந்த அறிவுத் திறமைகளை எல்லாம் யார் வழங்கியது அல்லாஹ் தானே இதோ!
  
வானங்கள் மற்றும் பூமியின் படைப்பிலும் இரவு பகலின் மாற்றத்திலும் அறிவுடையோருக்கு நிச்சயமாக அத்தாட்சிகள் இருக்கின்றன. இத்தகையோர் நின்ற நிலையிலும் அமர்ந்திருக்கும் போதும்,படுத்திருக்கும்போதும் அல்லாஹ்வை நினைந்து வானங்கள் மற்றும் பூமியின் படைப்பைப் பற்றிச் சிந்தித்தவர்களாக, “எங்கள் இறைவா!இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை. நீ மிகத் தூயவன்; நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக என்று பிரார்த்திப்பார்கள். (அல்குர்ஆன் 3:191,192)

மனிதனின் விடாமுயற்சிக்கு அல்லாஹ் கொடுத்த வெற்றிகள் 

வானத்தில் பறக்கும் பறவையைக் கண்டோம் ஆனால் நமக்கு பறக்க இறக்கைகள் இல்லை என்று கவலைப்பட்டதில்லை மாறாக அறிவைக்கொண்டு ஆகாய விமானங்களைப் படைத்து பறவையின் வழித்தடங்களை விட உயரமான வழித்தடங்களில் பறந்து செல்கிறோம்.
நீர் நிலைகளில் சுற்றித்திரியும் மீன்களை கண்டு நாம் அவ்வாறு