இந்த மாதம் 31ம் தேதி உலக மக்கள் தொகை 700 கோடியை தொடும் என ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.
அன்றைய தினம் பிறக்கும் 700 கோடியாவது குழந்தையை வரவேற்க உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கிறது.
தினமும் சராசரியாக குழந்தை பிறக்கும் அளவை கருத்தில் கொண்டு இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த குழந்தை எங்கு பிறக்கும் என்பது தெரியாது. எனினும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறக்க வாய்ப்பு உள்ளதாக பிளான் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
பெண் சிசுக் கொலையை தடுக்கும் நோக்கத்தில் 31ம் தேதி பிறக்கும் ஒரு பெண் குழந்தைக்கு 700 கோடியாவது குழந்தை என்று பிறப்பு சான்றிதழ் வழங்க பிளான் இன்டர்நேஷனல் திட்டமிட்டுள்ளது.
உலக மக்கள் தொகை கடந்த 1805ம் ஆண்டு 100 கோடியை எட்டியது.
அதாவது முதல் 100 கோடியை எட்ட பல ஆயிரம் ஆண்டுகள் ஆனது. ஆனால் அடுத்த 122 ஆண்டில் அதாவது 1927ல் 200 கோடியை எட்டியது.
அதன்பிறகு 1959ல் 300 கோடியையும், 1974ல் 400 கோடியையும், 1987ல் 500 கோடியையும், 1999ல் 600 கோடியையும் எட்டியது. சமீப காலமாக ஒவ்வொரு 12 முதல் 13 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை 100 கோடி அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மக்கள் தொகை பெருக்கத்தைக் குறைக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதால் இனி மக்கள் தொகை வளர்ச்சி வேகம் குறையும் என ஐ.நா. சபை மதிப்பீடு செய்துள்ளது.
இந்த வகையில் உலக மக்கள் தொகை 2025ல் 800 கோடியையும், 2050ல் 900 கோடியையும், 2100ல் 1000 கோடியையும் தொடும் என கணிக்கப்பட்டுள்ளது.
நன்றி : newsonews

0 கருத்துகள்:
கருத்துரையிடுக