ஏகஇறைவனின் திருப்பெயரால்....
நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்போது
அவன் மகிழ்ச்சியடைகின்றான். தன் இறைவனைச் சந்திக்கும் போது
நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகின்றான் என்று நபிகள்
நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1904

ரமளான் மாதத்தை பெருமானார்(ஸல்) அவர்கள் அருள்வளம் மிக்க மாதம்
என்று வர்ணித்துக் கூறினார்கள்.

ஒருவருக்கு இவ்வுலகில் ஏராளமான பொருட் செல்வங்கள் கிடைக்கப்
பெறுவது அருள்வளம் அல்ல, மாறாக மறுமையின் வெற்றிக்கான
வாய்ப்புகள் கிடைப்பதே அருள்வளமாகும். அதற்கான வாய்ப்புகள்
ஏராளமாக கிடைப்பது இந்த ரமளான் மாதத்தில் தான். 

மனிதர்கள் செய்யும் நற்செயலுக்கான கூலி பத்திலிருந்து எழுநூறு
மடங்காக பல்கிப் பெருகுகின்றன நோன்பைத் தவிற, நோன்பு எனக்குரியது
அதற்கு நானே கூலி கொடுக்கிறேன், எனது அடியான் எனக்காக தனது
உணவையும், இச்சiயையும் விட்டு விடுகிறான், என்று இறைவன்
கூறுவதாக பெருமானார்(ஸல்)அவர்கள்கூறுகின்றார்கள். புகாரி, முஸ்லீம்.

நோன்பு எனக்குரியது என்றும், எனக்காக என் அடியான் உணவையும்,
ஆசைகளையும் விட்டு விடுவதால் அவனுக்கு நானே கூலி வழங்குகிறேன்
என்று அல்லாஹ் கூறுவதால், அல்லாஹ்வுக்காக நோன்பை
நோற்றிருக்கின்றோம், அல்லாஹ்விடமிருந்து ஏராளமான நற்கூலிகளை
அடைய வேண்டும், என்ற நல்ல நோக்கத்துடன் ரமளானில் நற்செயல்கள்
செய்ய வேண்டும்.