அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வெள்ளி, 6 ஜனவரி, 2012

இஸ்லாமிய மார்க்கம் அது கடவுளுடைய மார்க்கம் (பகுதி - 2)

கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்மார்களும்.

குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்களும் கர்ப்பமாக இருக்கும் பெண்களும் தற்காலிக­மாக நோன்பை விட்டு விட இஸ்லாம் இவர்களுக்கும் அனுமதியளித்திருக்கிறது.

கர்ப்பிணிகளும் பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பி­லிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சலுகையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி­)
நூல்: திர்மிதி (649) அபூதாவூத் (2056) நஸயீ (2237) அஹ்மத் (18270) இப்னுமாஜா.(1657)

கர்ப்பமான காலகட்டத்தில் தாய்மார்கள் எவ்வளவு சிரமப்படுவார்கள் என்பதை நாம் வர்னிக்க முடியாது.கர்ப்பம் தரித்த தாய்மார்கள் சரியாக உணவு உட்கொள்ள முடியாது சாதரண காலத்தில் அவர்கள் படுத்து ஓய்வெடுத்தது மாதிரி கர்ப்பம் தரித்த காலத்தில் ஓய்வெடுக்க முடியாது அளவற்ற அருளாளன் இதை அறிந்து தான் இவர்களுக்கு இந்த சலுகையை வளங்கியிருக்கிறான்.இஸ்லாம் மிக எளிமையான மார்க்கம்
என்பதற்கு இது ஒரு சான்று.

இஸ்லாம் ஒரு எளிமையான மார்க்கம் எனபதற்கு மற்றொரு சான்றை பாருங்கள், இஸ்லாம் மிக எளிமையான மார்க்கம் என்பதற்கு இந்த ஒரு சான்றே போதுமாதாகும்.

(ஆரம்ப காலத்தில்) நபித்தோழர்கள் நோன்பு நோற்று, நோன்பை நிறைவு செய்யும் நேரம் வந்து, அதற்கு முன்பே உறங்கி விட்டிருந்தால் அன்றைய இரவிலும் (தொடர்ந்து) பகலிலும் மாலை வரை எதையும் உண்ண மாட்டார்கள். (ஒரு முறை) கைஸ் இப்னு ஸிர்மா(ரலி) நோன்பு நோற்றிருந்தார்; நோன்பு நிறைவு செய்யும் நேரம் வந்ததும் தம் மனைவியிடம் வந்து, 'உன்னிடம் உணவு ஏதும் உள்ளதா?' என்று கேட்டார்; அவரின் மனைவி, 'இல்லை! எனினும் நான் சென்று உமக்காக (உணவைத்) தேடி வருகிறேன்!" என்றார். கைஸ் இப்னு ஸிர்மா(ரலி) அன்றைய தினம் கூலி வேலை செய்துவிட்டு வந்ததால் அவருக்கு உறக்கம் மேலிட்டுவிட்டது. அவரின் மனைவி வந்து அவரைக் கண்டபோது, 'உமக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டது' என்றார் நண்பகலானதும் கைஸ்(ரலி) மூர்ச்சையுற்றார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டபோது,
நோன்பு கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற வசனமும் இன்னும் பஜ்ரு (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் இரவு என்ற கருப்பு நூ­ருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள் பருகுங்கள் என்ற வசனமும் இறங்கின இதனால் நபித்தோழர்கள் அதிக மகிழ்ச்சி அடைந்தனர்.
அறிவிப்பவர்:பராவு (ரலி­)
நூல்: புகாரி (1915)

நோன்பு கால இரவில் ஒரு மாதமும் மனைவியிடம் கூடக்கூடாது என்பதும் நோன்பின் இரவில் சிறிது நேரத்தை தவிர இரவிலும் உண்ணக்கூடாது பருகக்கூடாது என்ற தடையும் இஸ்லாத்தின் ஆரம்ப நேரத்தில் இருந்தது என்ற செய்தியை நாம் இதிலி­ருந்து அறிய முடிகிறது பின்னர் ஸஹாபாக்களின் நிலையை அறிந்து நோன்பு இரவு ஆரம்பத்திலி­ருந்து பஜ்ரு அதிகாலை வரை மனைவியிடம் கூடலாம், அதிகாலை வரை சாப்பிடலாம் குடிக்கலாம் என்று சலுகை அளிக்கப்பட்டது.
இஸ்லாம் ஒரு எளிமையான மார்க்கம் என்பதற்கு இது மற்றொரு சான்று.

இன்னொரு சான்றையும் பாருங்கள்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் அழிந்து விட்டேன் என்றார் நபி (ஸல்) அவர்கள் உமக்கு என்ன நேர்ந்தது என்று கேட்டார்கள் நான் நோன்பு வைத்துக்கொண்டு என் மனைவியுடன் கூடி விட்டேன் என்று அவர் சொன்னார் நபி (ஸல்) அவர்கள் விடுதலை செய்வதற்கு ஒரு அடிமை உம்மிடம் இருக்கிறதா? என்று கேட்டார்கள், அவர் இல்லை என்றார். தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க சக்தி இருக்கிறதா? என்று கேட்டார்கள், அவர் இல்லை என்றார்.அறுபது ஏழைக்கு உணவளிக்க உமக்கு சக்தி இருக்கிறதா? என்று கேட்டார்கள் அதற்கும் அவர் இல்லை என்றார்.நபி (ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள் நாங்கள் இவ்வாறு இருக்கும் போது நபி (ஸல்) அவர்களிடம் பேரிச்சம் பழம் நிறைந்த அரக் எனும் அளவை கொண்டு வரப்பட்டது அப்போது நபி (ஸல்) அவர்கள் கேள்வி கேட்டவர் எங்கே? என்றார்கள் நான்தான் என்று அவர் கூறினார்.இதைப்பெற்று தர்மம் செய்வீராக என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அப்போது அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதரே என்னை விட ஏழையாக இருப்போருக்கா நான் தர்மம் செய்ய வேண்டும், மதினாவின் இரண்டு மலைக்கும் இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தினரை விட பரம ஏழைகள் யாருமில்லை என்று கூறினார்.அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது கடவாய் பற்கள் தெரியும் அளவுக்கு சிரித்தார்கள் பிறகு இதை குடும்பத்தாருக்கே உண்ணக்கொடுத்து விடுவீராக என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஹீரைரா (ரலி­)
நூல்: புகாரி (1936)

நாம் ஒரு கடை நடத்துகிறோம் அந்த கடையில் ஒரு கூலி­த்தொழுலாளி வேலை செய்கிறார் வேலை செய்யக்கூடியவர் தவறு செய்து விட்டார் என்றால் நாம் அவருக்கு தண்டனை கொடுப்போம்.இல்லை இல்லை தண்டனையை நான் நிறைவேற்ற முடியாது என்று கூலி­த்தொழிலாளி சொன்னால் நாம் என்ன செய்வோம் செய்யக்கூடாத தவறையும் செய்து விட்டு தண்டனையை நிறைவேற்ற முடியாது என்று சொல்கிறாயா? என்று கூடுதல் தயண்டனையை கொடுப்போம்.ஆனால் இஸ்லாம் தரண்டனை நிறைவேற்ற முடியவில்லை என்று சொன்னால் அதிலும் தண்டனையை குறைத்து இதை நிறைவேற்ற முடியுமா என்று கேட்கிறது அதையும் நிறைவேற்ற முடியவில்லை என்றால் அதிலும் தண்டனையை குறைத்து இதை நிறைவேற்ற முடியுமா என்று கேடகிறது இப்படி சலுகை காட்டி எதிலும் முடியாது என்று போகவே கடைசியாக பைத்துல் மாலுக்கு சொந்தமான பொருளிருந்து கொடுத்து நிறைவேற்ற சொல்கிறது.
இஸ்லாம் எளிமையான மார்க்கம் என்பதற்கு இது ஒரு சான்று.

நன்றி : கடையநல்லூர் அக்ஸா  
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக