அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

செவ்வாய், 25 ஜூன், 2013

2003 முதல் 7 இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராகக் குண்டு வெடிப்பு மூளையாக செயல்பட்டவர் இந்துத்துவாவாதி

2003-ஆம் ஆண்டிலிருந்து 7 இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக குண்டு வைத்துத் தாக்கியத்தில் மூளையாக இருந்தவன் இந்துத்துவா வெறியன் என்று தேசிய புலனாய்வு நிறுவனம் அம்பலப்படுத்தியுள்ளது.சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட் டுள்ள ஹமீத் சவ்கான் என்ற ஹக்லா என்பவரின் உண்மையான அடையாளம் என்ன என்பது தேசிய புலனாய்வு அமைப்பு சமீபத்தில் தாக்கல் செய்துள்ள துணை குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவரது உண்மை பெயர் ரமேஷ் வெங்கட் மஹால்கர் என்று தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.மத்தியப்பிரதேச மகாராஷ்டிரா ஆகிய மாநில இந்துத்துவ தீவிரவாத ஆசாமிகளுக்கு இவர் இணைப்பாளராக செயல்பட்டுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் மாலேகான், அஜ்மீர் தர்கா மற்றும் சம்ஜவ்தா வெடிகுண்டு தாக்குதல் 2006-லிருந்து நிகழ்ந்தன. மகாராஷ்டிர மாநிலத்தில் பார்ப்பனி, பூர்ணா, ஜல்னா மற்றும் நந்தால் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்கள் 2003-லிருந்து 2006 வரை நிகழ்ந்துள்ளன. இந்த குண்டுவெடிப்பு செயல்பட்டவிதம் இந்துத்துவ வலதுசாரி அமைப்பை சேர்ந்த ஒரு நபரின் தலைமையின் கீழ் இணைக்கப்பட்டு நிகழ்த்தப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. ஹக்லாவின் உண்மையான அடையாளம் வெளிப்படுவதற்குமுன் அவர் இமான்சுபான்சி என்பவரின் சொந்த ஊரான நந்தால் என்ற இடத்தைச் சேர்ந்தவர் என்றும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 2006-லிருந்து 2008 வரை நிகழ்ந்த குண்டு வெடிப்புகளுக்கு மூளையாக இருந்தார் என்று கண்டு பிடிக்கப் பட்டது.
இமான்சு பான்சி 2006 ஏப்ரல் மாதத்தில் இந்த நந்தால் என்ற இடத்தில் வெடிகுண்டு தயாரித்துக் கொண் டிருக்கும் போது இறந்து விட்டார். அவுரங்கா பாத்தில் உள்ள ஒரு மஸ்ஜிதை தகர்க்க அந்த வெடி குண்டு தயாரிக்கப்பட்டது.
தேசிய புலனாய்வு நிறுவன வட்டார தகவல் படி ஹக்லா வி.எச்.பி.யில் ஒரு உறுப்பினர் ஆவார். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த அவர் ஒரு அரசு ஊழியரின் மகன் ஆவார். இந்துத்துவ கொள்கைகளால் கவர்ந்திழுக்கப்பட்டு அவர் தனது 20-ஆவது வயதில் 2003-ஆம் ஆண்டில் வீட்டை விட்டு வெளியேறினார்.
2003-ஆம் ஆண்டில் தான் மகாராஷ்டிரா மாநிலம், பார்ப்பானி மாவட்டத்தில் இந்துத்துவ தீவிரவாத ஆசாமி களின் முதல் குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. காலமான இமான்சு பான்சியும் அவரது கூட்டாளிகளும் நிகழ்த்திய குண்டு வெடிப்பில் ஹக்லாவுக்கு தொடர்பு இருக்கிறதா என்று தேசிய புலனாய்வு அமைப்பினர் புலன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2003-இல் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவான ஹக்லா 2005-ஆம் ஆண்டில் ஜம்மு நகரில் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர் சுனில் ஜோஷி மறைந்திருந்த இடத்தை சென்றடைந்தது தெரியவந்துள்ளது. அதே ஆண்டில் சுனில் ஜோஷி ஹக்லாவை மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள தேவாஸ் என்ற இடத்துக்கு அழைத்து வந்தார் அங்கே ஹக்லாவுக்கு சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடி குண்டு வைக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
ராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் அந்த பயிற்சி முகாமில் பயிற்சியளித்ததாக சந்தேகிகப்படுகிறது. இமான்சு பான்சி தன்னை வழி நடத்துபவர்களுக்கு தெரியாமல் சில குறைந்த சக்தி வாய்ந்த குண்டுகளை, தானாகவே வெடிக்கச் செய்தார். சக்தியில்லாத அந்த குண்டுகளை வெடிக்கச் செய்து அதன் மூலம் எந்த சேதமும் ஏற்படாததால் இமான்சு பான்சியை அவரது தலைவர்கள் கண்டித்ததாகவும் தேசியப் புலனாய்வுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி  :viduthalai.in

0 கருத்துகள்:

கருத்துரையிடுக