அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

மருத்துவ படிப்பிற்கான AIPMT தேர்வுகள்

அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தும் முயற்சியை மத்திய அரசு இந்த ஆண்டு நிறுத்தி வைத்து உள்ளது. இதையடுத்து ஆந்திராகாஷ்மீர் தவிர்த்து உள்ள மற்ற அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப் படிப்புகளில் 15 சதவீத இடங்களை நிரப்புவதற்காக அனைத்திந்திய மருத்துவ / பல்மருத்துவ நுழைவுத் தேர்வு (ஏ.ஐ.பி.எம்.டி.)  நடைபெறும் தேதி  தற்போது  அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்த ஆண்டு (2012) முதல் நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புக்கு, இனி பொது நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு தமிழக அரசு உள்பட பல்வேறு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.மத்திய அரசின் பொது நுழைவுத்தேர்வு 
அமுல்படுத்தப்பட்டால் கிரமாமப்புறமாணவர்கள் பாதிக்கபடுவார்கள் என தமிழக அரசின் சார்பாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து 2012நடத்துவதாக இருந்த பொது மருத்துவ நுழைவுத் தேர்வை 2013 கல்வி ஆண்டிலிருந்து நடத்தப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆந்திரா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களை தவிர்த்து நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும், 15 சதவீத இடங்கள்மத்திய செகண்டரி கல்வி வாரியம் (CBSCநடத்தும் AIPMT நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த நுழைவுத் தேர்வு மூலம்  தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் குறைந்த கல்விக் கட்டணத்தில் சேர்ந்து படிக்க முடியும்இதனால்இந்த தேர்வை எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும்  அதிகரித்து வருகிறது.

இந்த நுழைவு தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதன்மை தேர்வு ஏப்ரல் மாதம் முதல் தேதியும், மெயின் தேர்வு வரும் மே மாதம் 13-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள்  டிசம்பர் 31 ஆம் தேதி 17 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். அதிகபட்சமாக  டிசம்பர் 31 ஆம் தேதி 25 வயது வரை இருக்கலாம். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மற்றும் ஓ.பி.சி. மாணவர்களுக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள்  தளர்வு உண்டு. எந்தப் பிரிவு மாணவர்களாக இருந்தாலும், இந்த நுழைவுத் தேர்வை மூன்று முறை மட்டுமே எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல் , உயிரியல்மற்றும் ஆங்கிலப் பாடங்களில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்டோர் பிரிவு மாணவர்களாக இருக்கும் பட்சத்தில் 15 சதவீத இடங்களும், பழங்குடியின பிரிவுமாணவர்களாக இருக்கும்பட்சத்தில் 7.5 சதவீத இடங்களும், மத்திய கல்வி நிலையங்களில் மட்டும் 27சதவீதம் Non-creamy layer ஓபிசி மாணவர்களுக்கும் (அதாவது  பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.5லட்சத்திற்கு குறைவாக உள்ள மாணவர்கள்), 3 சதவீதம் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் ஒதுக்கப்படும்.
முதன்மை தேர்வானது மூன்று மணிநேரம் நடைபெறும். இந்தக் கேள்வித்தாள் அப்ஜெக்ட்டிவ் முறையில் அமைந்திருக்கும். மொத்தம் 200 கேள்விகள். இந்தக் கேள்விகள் வேதியியல், உயிரியல், இயற்பியல் பாடங்களில் இருந்து கேட்கப்படும். இந்த முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மெயின்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். மெயின் தேர்வு மொத்தம் 3 மணி நேரம். இத்தேர்வு மொத்தம் இரண்டு தாள்கள் இருக்கும். முதல் தாள் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். இரண்டாம் தாளில் கேட்கப்படும் கேள்விகள் தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களில் இருந்து கேட்கப்படும். மெயின்  தேர்வு முற்றிலும் கட்டுரை வடிவில் எழுதும் தேர்வாக இருக்கும். விடைகள் எழுதுவதற்கு தனியாக தாள்கள் கொடுக்கப்படும். இத்தேர்வு கேள்வித்தாள் முற்றிலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் அமைந்திருக்கும்.

Introduction and Measurement, Description of Motion in One Dimension, Description of Motion in Two and Three Dimensions, Laws of Motion, Work, Energy and Power, Rotational Motion, Gravitation, Heat and Thermodynamics, Oscillations, Waves, Electrostatics, Current Electricity ஆகிய  பாடங்களில் இருந்து இயற்பியல் பாடத்தில் கேள்விகள் கேட்கப்படும்.

வேதியியல் பாடத்தைப் பொருத்தவரை Atomic structure, Chemical energetics, Chemical bonding, Equilibrium, Redox reactions, Solid state Chemistry, Chemical thermodynamics ஆகிய பாடங்களில் இருந்து வேதியியல் பாடத்திற்கான கேள்விகள் கேட்கப்படும்.

Diversity in Living World, Genetics and Evolution, Structure and Function - Animals, Structure and Function – Plants, Reproduction, Growth and Movement in Plants, Ecology and Environment, Biotechnology and its Applications உள்ளிட்ட பாடங்களில் இருந்து உயிரியல்(BOTANY AND ZOOLOGY) பாட கேள்விகள் கேட்கப்படுகின்றன.

கடந்த ஆண்டைப் போல அல்லாமல் விண்ணப்பங்கள் பெறுவதிலும், விண்ணப்பக் கட்டணங்கள் செலுத்துவதிலும்  சில மாறுதல்களை CBSC செய்துள்ளது. இந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். வேறு எந்த வங்கிக் கிளைகளிலும் விண்ணப்பங்களை பெற முடியாது. ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அதை The Deputy Secretary (AIPMT),Central Board of Secondary Education, 2, Community Centre, Vihar, Delhi - 301 என்ற முகவரிக்கு பதிவுத் தபால் மற்றும் ஸ்பீடு போஸ்ட் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக்கூடிய மாணவர்கள்  கிரெடிட் கார்டு மூலமாகவோ அல்லது டிமாண்ட் டிராப்ட் மூலமாகவோ விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தலாம்.

ஜனவரி 25ஆம் தேதிக்கு முன்னதாக செலுத்தினால்  பொதுப்பிரிவு மற்றும் ஓ.பி.சி. மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1,000. எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.550.

பிப்ரவரி 8 ஆம் தேதிக்கு முன்பாக செலுத்தும் பொதுப்பிரிவு மற்றும் ஓபிசி மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1,500. அதே தேதிக்கு எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1,050.

பிப்ரவரி எட்டாம் தேதிக்குப் பிறகு, பிப்ரவரி 24ஆம் தேதிக்கு முன்பாக தேர்வுக் கட்டணம் செலுத்தும் பொதுப்பிரிவு மற்றும் ஓ.பி.சி. மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.2,000. அதே தேதிக்கு எஸ்.சி.,எஸ்.டி., மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1,550 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தேதிகள்:

AIPMT முதன்மை நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள் : ஏப்ரல் 1, 2012.
AIPMT மெயின் தேர்வு நடைபெறும் நாள் : மே 13, 2012.

விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான கடைசி தேதி

இந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: பிப்ரவரி 2.
முதல் கட்ட தாமதக் கட்டணம் செலுத்துவோர் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: பிப்ரவரி 15.
இரண்டாம் கட்ட தாமதக் கட்டணம் செலுத்துவோர் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: மார்ச் 2.

கூடுதல் விவரங்களுக்கு AIPMT இணையதளத்தை பார்வையிடவும்.  http://www.aipmt.nic.in/


- அஜ்மல், கோவை
நன்றி : tntjsw.net

0 கருத்துகள்:

கருத்துரையிடுக