அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

திங்கள், 13 பிப்ரவரி, 2012

விமானபடைக்கு ஆட்கள் தேர்வு

இந்திய விமான படையின் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்கிறார்கள். இதற்கான தேர்வு முகாம் தஞ்சாவூரில் 12 ஆம் தேதி முதல் 14- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

விமானப்படையின் தொழில்நுட்ப பிரிவுகளுக்கும், தொழில்நுட்பம் அல்லாத பிரிவுகளுக்கும் ஆட்களை தேர்வு செய்வதற்கான முகாம் தஞ்சாவூர் அன்னை சத்யா ஸ்டேடியத்தில் 12- ஆம் தேதி தொடங்கி 14- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த முகாமில், தமிழ்நாடு, புதுவை, அந்தமான் நிக்கோபார் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்ளலாம். 1.1.1991 முதல் 31.3.1995-க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். திருமணம் ஆகியிருக்கக் கூடாது.

தொழில்நுட்ப பணிகளைப் பொறுத்தமட்டில், பிளஸ்-2 முதல் குரூப் (கணிதம், அறிவியல் பாடங்கள்) அல்லது டிப்ளமோ பொறியியல் (மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன், அய்.டி.) முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண் அவசியம்.

தொழில்நுட்பம் அல்லாத பிரிவுகளுக்கு பிளஸ்-2 கலை அறிவியல் அல்லது வணிகவியல் அல்லது அறிவியல் எது வேண்டுமானாலும் படித்திருக்கலாம். அல்லது பாலிடெக்னிக்கில் ஏதாவது ஒரு பொறியியல் படிப்பில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுமுகாம் நடக்கும் நாட்களில் காலை 6 முதல் 10 மணிக்குள் வந்துவிட வேண்டும். அசல் கல்விச்சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவுள்ள 8 புகைப்படங்கள், எழுதுபொருள்கள் ஆகியவற்றை தவறாமல் கொண்டுவர வேண்டும்.

இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் அறிய 044-22390561 என்ற தொலைபேசி எண்ணிலோ, 94452-99128 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இந்திய விமானப்படையின் இணையதளத்திலும்  விவரங்களை அறியலாம்.

நன்றி : sangaionline

0 கருத்துகள்:

கருத்துரையிடுக