அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வெள்ளி, 25 மே, 2012

அடாவடித்தனமான நாடு இஸ்ரேல்: ஜெர்மனி கருத்து

யூத தேசமான இஸ்ரேல் குறித்து ஜேர்மனியில் பலருக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. இஸ்ரேல் வலியச் சென்று பாலஸ்தீனத்துடன் மோதுவதாகப் ஜெர்மனி அரசாங்க பிரதிநிதிகள் உட்பட பலரும் கருதுகின்றனர்.

இஸ்ரேல் குறித்த புதிய கருத்துக்கணிப்பு:

கடந்த 2009ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பை விட 10 சதவீதம் பேர் இஸ்ரேலை அதிகமாகவே வெறுக்கத் தொடங்கியுள்ளனர்.

ஃபோர்ஸா என்ற நிறுவனம் சமீபத்தில் எடுத்த கருத்துக்கணிப்பில் 59 சதவீதம் பேர் இஸ்ரேலை வம்புச் சண்டைக்கு இழுக்கும் நாடாகத்தான் காண்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

70சதவீதம் பேர், மற்ற நாடுகளைப் பற்றி அக்கறைப்படாமல் இஸ்ரேல் தன்னலத்தோடு இருப்பதாகக் கருதுகின்றனர்.

60சதவீதம் பேர் ஜேர்மனிக்கு இஸ்ரேல் மீது தனிப்பட்ட ஆர்வமோ, அக்கறையோ இல்லை என்றனர்.
மே 15, 16 திகதிகளில் 1002 பேரிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் இவ்விபரங்கள் கிடைத்துள்ளன.

ஜெர்மனின் புதிய ஜனாதிபதி ஜோவாக்கிம் கவக், மே 28 முதல் 31 வரை இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளில் சுற்றுப்பயணம் நடத்தத் திட்டமிட்டுள்ளார்.ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல், கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக்கரையில் அரசு பின்பற்றும் குடியிருப்புக் கொள்கை, பாலஸ்தீனிய ரோடு சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இடையூறாக இருக்கிறது என்றார்.

நோபல் பரிசு பெற்ற கவிஞர் கூண்டர் கிராஸ், இஸ்ரேலின் அணு ஆயுதப் பரிசோதனை ஈரானிய மக்களை முதல் தாக்குலிலேயே மொத்தமாக அழித்துவிடும் என்றார். மேலும் இஸ்ரேல் நாடு அந்தப் பகுதிக்கே அச்சுறுத்தலாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

நன்றி : newsonews

0 கருத்துகள்:

கருத்துரையிடுக