அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...
இந்நிகழ்கால நிகழ்வுகளில்
கிரிகெட் பற்றிய உண்மைத் தகவல்களையும், அதனால் ஏற்படும், தற்போது
ஏற்பட்டுக் கொண்டிருக்கும் விபரீதங்களையும் பற்றி தெளிவாக உணர்த்துவதற்காக
இந்த கட்டுரை வரையப் படுகிறது.
கிரிகெட் என்ற கிறுக்கு விளையாட்டு.
ஒரு விளையாட்டாக இருந்தால் அந்த
விளையாட்டை விளையாடுவதின் மூலம் உடலுக்கு ஒரு பயிற்சி கிடைக்க வேண்டும்.
ஏதாவது ஒரு விதத்தில் நமக்கு அந்த விளையாட்டு ஒரு நன்மையைத் தர வேண்டும்
எந்த நன்மையும் இல்லாத விளையாட்டை விளையாட்டுக்கள் பட்டியலில் சேர்பதே ஒரு
சிறந்த சிந்தனையாளரின் பண்பாக இருக்க முடியாது.11 பேர்கள் விளையாட பல கோடி
மக்கள் அந்த விளையாட்டை பார்க்கிறார்கள். ரசிக்கிறார்கள்(?) விளையாடுவது 11
பேர்தான் அதிலும் அவர்களுக்குக் கூட அந்த விளையாட்டினால் எந்த நன்மையும்
இல்லை.இதே நேரத்தில் அதைப் பார்க்கும் பல கோடி மக்களும் தங்கள் நேர காலத்தை
வீனாக்கி தீமையை சம்பாதிப்பதுதான் கவலையான விஷயம்.
வாழ்க்கையாகிவிட்ட கிரிகெட் விளையாட்டு(?)
ஒரு விளையாட்டென்ரால் அது ஒரு
நாளைக்கு ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரமாக இருக்கலாம். அதனால்
உடலுக்கும் உள வளத்திற்கும் நிறைய நன்மைகள் கிடைக்கலாம்.வியர்வை வெளியாகுதல், ஓடி ஆடித்
திரிவதின் மூலம் இரத்த ஓட்டம் சீராக அமைதல் போன்றவற்றால் மிகப் பெரிய
உடலியல் நன்மைகள் அதிகமதிகம் கிடைக்கலாம்.ஆனால் இந்த கிரிகெட் விளையாட்டைப்
பொருத்த வரையில் வாழ்க்கையில் விளையாட்டும் ஒரு பகுதி என்பது போய்
வாழ்க்கையே விளையாட்டாகிவிட்டதுதான் கவலையான செய்தியாகும்.
நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். 'இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்' என்று (எனக்குள்) கூறிக்கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்' என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் '(எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ?' எனக் கேட்டார்கள். 'மாட்டேன்' என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஆம்; அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்யிருப்பேன்' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : கைஸ் பின் ஸஅத் (ரலி) நூல் : அபூதாவூத் 1828
தமது காலில் விழுவதற்கு அனுமதி கேட்கப்பட்ட போது 'எந்த மனிதரும் எந்த மனிதரின் காலும் விழக் கூடாது' என்று பொதுவான விதியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காரணம் காட்டுகிறார்கள். காலில் விழுபவரும், விழப்படுபவரும் இருவருமே மனிதர்கள் தான் என்று கூறி சிரம் பணிதல் கடவுளுக்கு மட்டுமே உரியது எனக் கூறுகிறார்கள். உலகம் முழுவதும் கணவர் காலில் மனைவியர் விழுவது அன்றைக்கு வழக்கமாக இருந்தது. அதையே நான் அனுமதிக்காத போது என் காலில் எப்படி விழலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.ஆன்மீகத் தலைவர்கள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவோரைக் கண்டித்து எத்தனையோ சீர்திருத்த வாதிகள் இங்கே போராடியதுண்டு. ஆன்மீகவாதிகளின் முகத்திரையைக் கிழித்துக் காட்டியதுண்டு. ஆனால், அது போன்ற மரியாதை தங்கள் அபிமானிகளால் தங்களுக்குச் செய்யப்படும் போது அதை அவர்கள் இன்முகத்துடன் ஏற்றுக் கொள்வதை நாம் பார்க்கிறோம்.வாழும் போதே தமக்குச் சிலை அமைத்த சீர்திருத்தவாதிகளையும், அறியாத மக்கள் தமக்குச் சிலை வைக்கும் போது அதைத் தடுக்காமல் மகிழ்ச்சியடைந்த தலைவர்களையும், தமது மரணத்திற்குப் பின் தமக்குச் சிலை அமைக்க வலியுறுத்திச் சென்றவர்களையும் பார்க்கிறோம். இவர்கள் எதை எதிர்த்தார்களோ அதே காரியம் தமக்குச் செய்யப்படும் போது ஏற்றுக் கொண்டனர். நம்பகத் தன்மையை இதனால் இழந்தனர். ஆனால் ஆன்மீகத் தலைவராக இருந்து கொண்டே இந்தச் சீர்திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்திய ஒரே தலைவர் நபிகள் நாயகமே.
உங்கள் கால்களில் நாங்கள் விழுகிறோமே என்று மக்கள் கேட்கும் போது தமது மரணத்திற்குப் பிறகு தனது அடக்கத் தலத்தில் விழுந்து பணிவார்களோ என்று அஞ்சி அதையும் தடுக்கிறார்கள். எனது மரணத்திற்குப் பின் எனது அடக்கத் தலத்தில் கும்பிடாதீர்கள் என்று வாழும் போதே எச்சரித்துச் சென்றனர்.
எனது அடக்கத்தலத்தை வணக்கத் தலமாக ஆக்கி விடாதே என்று (மக்களுக்குத் தெரியும் வகையில்) இறைவனிடம் நபிகள் நாயகம் (ஸல்) பிரார்த்தனை செய்தார்கள். நூல் : அஹ்மத்: 7054
எனது அடக்கத்தலத்தில் எந்த நினைவு விழாவும் நடத்தாதீர்கள்! நூல்கள் : அபூதாவூத்: 1746 அஹ்மத் 8449
யூதர்களும், கிறித்தவர்களும் தங்கள் இறைத் தூதர்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கி விட்டனர். இதனால் அவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் ஏற்படும் என்று தமது மரணப் படுக்கை யில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தனர். நூல் : புகாரி 436, 1330, 1390, 3454,
4441, 4444, 5816
நீங்களும் குடிநீர் குப்பி
(mineral water bottle ) பயன் படுத்துபவராகத்தான் இருக்க வேண்டும்! இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. கடைகளில்
வாங்கிப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர்ப்
பாட்டில்களில் ஒட்டியுள்ள லேபிளில் ''
பாட்டில்களை மீண்டும் பயன்படுத்தாதீர்கள் " (Crush the
bottle after use) என்று
எழுதியிருக்கும் வாசகத்தைப் பார்த்துக்கூட இருக்க மாட்டோம்.அவ்வளவு அஜாக்கிரதை! அப்புறம் எங்கே படித்திருக்க முடியும்.அவ்வாறு படித்ததைச் செயல்படுத்தி இருக்கமுடியும். பிரிட்ஜ்ஜில் வைக்க பலவண்ணங்களில் அழகாக பலவகை வடிவங்களில் பாட்டில்களை வாங்கி சேமித்து வைத்திருப்போம்.ஆனால்
அது பற்றிய எச்சரிக்கை விழிப்புணர்வு இருக்க வாய்ப்பில்லை. இதோ படியுங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.
இன்றைய காலகட்டத்தில் ஆங்காங்கு கடைகளில் பிளாஸ்டிக் பாட்டில்களை வாங்கி பயன்படுத்தும் வழக்கம்தான் நாகரிகமாக கருதப்பட்டு அதனை பின்பற்றியும் வருகிறோம்.பாட்டில் நாகரிகத்தைப் பின்பற்றும் எவரும் அந்தப் பாட்டிலில் குறிப்பிட்டுள்ள
அறிவுரைகளைப் படிப்பதும் இல்லை. படித்தாலும் பின்பற்றுவதும் இல்லை.
இந்த பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து வைத்து சிறுவர் முதல் பெரியவர் வரை பள்ளிக்கும, அலுவலகத்துக்கும் குடிநீர் கொண்டு செல்லப் பயன்படுத்துகின்றோம். ஏன் பிரிட்ஜில்
குளிர் நீர்
சேமிப்பதற்கும் இவற்றைப் பயன் படுத்துகின்றோம். இன்னும் கூறப்போனால் வீடுகள் உட்பட - விசேசங்கள் மற்றும் திருவிழாக்காலங்களில் பல இடங்களில் தண்ணீர் அருந்த பிளாஸ்டிக் டம்ளர்களையே பயன்படுத்துகிறோம்.எல்லா பிளாஸ்டிக் (நெகிழியினால்) ஆனபாட்டில்களையும் பெட் (pet ) என்பர்.
இன்று உலகெங்கிலும் கொலைகள், கொள்ளைகள், கடத்தல்கள்,
கற்பழிப்புக்கள் அன்றாடம் நடந்துகொண்டிருக்கின்றன.
அத்துடன்
உலக நாடுகள் புரட்சிகளையும் போராட்டங்களையும் சந்தித்துக்
கொண்டிருக்கின்றன.அதிலும் குறிப்பாக, டிசம்பர் 2010-ல் துனிசியாவில் ஒரு
முஸ்லிம் வியாபாரி தற்கொலை செய்துகொண்டது அந்நாட்டில் ஒரு
புரட்சியைத்
தோற்றுவித்தது.
அந்தப்
புரட்சி அக்கம்பக்கத்து நாடுகளான
எகிப்து, சிரியா, யமன், லிபியா என்று
பற்றிக் கொண்டது.அந்தக் கொடிய,
கோரத் தீயில் ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சி
இரையானது.
லிபியாவில்கதாபியையும் அவரது ஆட்சியையும் பலியாக்கியது. இப்போது
சிரியாவும் சீக்கிரத்தில் பலியாகஉள்ளது. ஏற்கனவே இராக் எரிந்து
கொண்டிருக்கின்றது. பஹ்ரைனும் இதன் பாதிப்புக்குள்ளாகிஇருக்கின்றது.
சுற்றியும் சூழவும் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது.ஆனால் மக்கா நகரம்
மட்டும் அமைதி, அபயநகரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றது. ஏன்?
இதற்கு அல்லாஹ்வே பதிலளிக்கின்றான்.
இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் (இவர்களுக்கு)அபயமளிக்கும்புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? வீணானதை நம்பி, அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி மறக்கிறார்களா? [அல்குர்ஆன் 29:67]
இந்த அற்புத உண்மையை உற்று நோக்குமாறு உலக மக்களை
அல்குர்ஆன் கூறுகின்றது. இதன் மூலம் தன்னை ஓர் இறைவேதம் என்றும்,
தன்னையே வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்ளுமாறும் மக்களுக்கு
இந்தக் குர்ஆன் அறிவுறுத்துகின்றது.
விரல் ரேகை ஒருவரின் முக்கிய அடையாளமாக இருக்கிறது. ஒருவருக்கு உள்ளது போல
விரல் ரேகை இன்னொருவருக்கு இருக்காது. அதனால்தான் மனிதர்களை அடையாளம் காண
எல்லா நாடுகளும் விரல் ரேகைகளை ஆதாரமாக எடுத்துக் கொள்கின்றன. விரல்
ரேகையே இல்லாமலும் சிலர் இருக்கின்றனர். மிகமிக அரிதாக அப்படி
நடப்பதுண்டு. ரேகை இல்லாமல் இருப்பது ஒருவகை தோல் நோய் என்கின்றனர் டாக்டர்கள். விரல்
ரேகை பற்றிய ஆராய்ச்சியை டெர்மடோகிளிபியா என்று அழைக்கின்றனர். இஸ்ரேலின்
டெல் அவிவ் நகரை சேர்ந்த தோல்நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் இலி
ஸ்பீரிச்சர் தலைமையிலான குழுவினர், விரல் ரேகை இல்லாமல் இருப்பதற்கு
காரணமான மரபணு மாற்றத்தை கண்டுபிடித்துள்ளனர்.
புதுடில்லி,
மே 14- ஏழைகளுக்கு வீடு கட்டுவதற்கு அளிக்கப்படும் உதவித் தொகையை, மத்திய
அரசு அதிகரித்து உள்ளது. கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர், ஜெய்ராம்
ரமேஷ் கூறியதாவது: பழங்குடியினர், தலித் மற்றும் சிறுபான்மை வகுப்புகளைச்
சேர்ந்த ஏழைகளுக்கு, "இந்திரா அவாஸ் யோஜனா' திட்டத்தின் மூலம், வீடு
கட்டுவதற்கு, மத்திய அரசு சார்பில் நிதி உதவி அளிக்கப்படுகிறது. ஏற்கனவே,
45 ஆயிரம் ரூபாய் வழங் கப்பட்டது. தற்போது இந்த தொகை, 70 ஆயிரம் ரூபாயாக
அதிகரிக்கப் பட்டுள்ளது.
நக்சலைட் வன்முறைகளால் பாதிக் கப்பட்ட
பகுதிகள், மலைப் பிரதேசங் கள் ஆகியவற்றில் வீடு கட்டுவதற்கு, 48,500 ரூபாய்
வழங்கப்பட்டது. இந்த தொகை, 75 ஆயிரம் ரூபாயாக உயர்த் தப்பட்டுள்ளது.
வீடில்லாத ஏழை களுக்கு, வீடு கட்டுவதற்கு இடம் வாங்குவதற்காக, ஒரு
நபருக்கு, 10 ஆயிரம் ரூபாய் வீதம், மாநில அரசு கள் மூலம், வழங்கப்பட்டு
வருகிறது. இந்த தொகை, 20 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. - இவ்வாறு,
ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
நன்றி :viduthalai
ஆலந்தூர், மே.15-
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பை சேர்ந்தவர் கந்தசாமி செல்வராஜ் (34).
இவருக்கு குருலட்சுமி என்ற மனைவியும், செல்வபாரத், செல்வநாயகி, செல்வி ஆகிய
3 குழந்தைகள் உள்ளனர்.
இவர் கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவில் உள்ள ரியாத்
நகருக்கு கட்டிட தொழிலாளியாக சென்றார்.
இந்நிலையில் அங்கு கடந்த மார்ச் 17-ந்தேதி மாரடைப்பால் இறந்தார்.
எனவே அவரது உடலை இந்தியா கொண்டுவர சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரக
அதிகாரிகளிடம் குடும்பத்தினர் முறையிட்டனர். ஆனால் அவர்கள் நடவடிக்கை
எடுக்கவில்லை. எனவே ரியாத்தில் உள்ள வளைகுடா வெளிநாட்டு வாழ் இந்தியர்
தமிழர் நல அமைப்பிடம் முறையிட்டனர்.
இவர்கள் அதற்குரிய நடவடிக்கை எடுத்து உடலை மீட்க சவுதி அரேபியாவில் இருந்து
நேற்று இரவு சென்னைக்கு விமானத்தில் அனுப்பி வைத்தனர்.
இந்த விமானம் நேற்று(15.05.13) காலை 8.30 மணிக்கு சென்னை வந்தது.
அதில் இருந்து இறக்கப்பட்ட உடல் உறவினர் சேரனிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை அவர் ஆம்புலன்ஸ் மூலம் சேத்தியாதோப்பு எடுத்து சென்றார்.
சென்னை: பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தேதி ஜூன் 17முதல்
தொடங்குகிறது. முதலில் விளையாட்டு பிரிவினருக்கு ஜுன் 17 முதல் ஜூன் 19 வரை
கலந்தாய்வு நடைபெறும், மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு ஜூன் 20-ம்
தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ஜீனியரிங் எனப்படும் பொறியியல் படிப்பிற்கான விண்ணப்ப மனுக்கள் தற்போது
வழங்கப்பட்டு வருகிறது. வரும் 20-ம் தேதி கடைசி நாளாகும். சி.பி.எஸ்.இ
மாணவர்கள் மே 30-ம் தேதிக்குள் மதிப்பெண் பட்டியல் தர வேண்டும்.
மறுகூட்டல், மறுமதிப்பீடு அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் ஜுன் 12-ல்
வெளியிடப்படும் எனவும், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பொறியியல் வகுப்புகள்
தொடங்கும் எனவும், எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 11 சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ அங்கீகாரம்
கிடைத்துள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் அரசு பொறியியல் கல்லூரி புதிதாக
உறுப்பு கல்லூரியாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) காளிராஜ் தெரிவித்துள்ளனர்.
நன்றி:thatstamil