விரல் ரேகை ஒருவரின் முக்கிய அடையாளமாக இருக்கிறது. ஒருவருக்கு உள்ளது போல
விரல் ரேகை இன்னொருவருக்கு இருக்காது. அதனால்தான் மனிதர்களை அடையாளம் காண
எல்லா நாடுகளும் விரல் ரேகைகளை ஆதாரமாக எடுத்துக் கொள்கின்றன. விரல்
ரேகையே இல்லாமலும் சிலர் இருக்கின்றனர். மிகமிக அரிதாக அப்படி
நடப்பதுண்டு. ரேகை இல்லாமல் இருப்பது ஒருவகை தோல் நோய் என்கின்றனர் டாக்டர்கள். விரல்
ரேகை பற்றிய ஆராய்ச்சியை டெர்மடோகிளிபியா என்று அழைக்கின்றனர். இஸ்ரேலின்
டெல் அவிவ் நகரை சேர்ந்த தோல்நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் இலி
ஸ்பீரிச்சர் தலைமையிலான குழுவினர், விரல் ரேகை இல்லாமல் இருப்பதற்கு
காரணமான மரபணு மாற்றத்தை கண்டுபிடித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பிறந்ததில் இருந்தே விரல் ரேகைகள் இல்லை. அனைவரும் டெர்மடோகிளிபியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களை டாக்டர் இலி ஸ்பீரிச்சர் குழுவினர் ஆய்வு செய்து சில மருத்துவ உண்மைகளை கண்டறிந்துள்ளனர். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உள்ளங்கை, விரல், கால் விரல்கள், பாதம் எல்லாமே வழுவழுவென இருக்கின்றன. விரல் ரேகை பதிவு செய்தால், கோடுகள், வட்டங்கள் எதுவும் இல்லாமல் இருக்கும். குறிப்பிட்ட ஒரு மரபணு மாற்றம், தோல் பகுதியை மட்டும் பாதிக்கிறது.
மற்ற உறுப்புகளை பாதிக்காது. அதுபோல் விரல் ரேகைகளை மட்டும் பாதிக்கும் புரோட்டீன் எது என்று இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார் டாக்டர் இலி. சுவிஸ் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் அமெரிக்காவுக்கு சென்ற போது விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் பிடித்துக் கொண்டனர். அவருக்கு விரல் ரேகை இல்லாததால், தீவிரவாதி என நினைத்து அவரிடம் கேள்விகள் கேட்டு துளைத்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி:sinthikkavum.net

0 கருத்துகள்:
கருத்துரையிடுக