இன்னும் நாம் பாதிக்கப்பட்டவர்களை நலம் விசாரிப்பதில் கவனிக்க வேண்டியதில் தேவையானது , அன்பு தான் இந்த அன்பு எனும் அரவணைப்பினால் அவர்கள் மன ஆறுதல் அடைவார்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு புது தெம்பும் பிறக்கும் முழுமையாக மன நிறைவு இருக்கும்.நீண்டதாக வாழவும் அது வித்திடும்.ஆனால் இன்றைக்கு ஒருவனுக்கு நோய் ஏற்பட்டால் அவனை பிற மனிதர்கள் கண்டு கொள்ளமல் அவனை புறக்கணிக்கின்றனர்.
இப்படியிருந்தால், இறைவனின் திருப்தி நமக்கு இம்மையில் உண்டா? மறுமையிலும் உண்டா? என்றால் நிச்சியமாக இருக்காது.அவனின் கோபம் தான் இருக்கும் என்பதை நாம் உணர வேண்டும்.அடுத்து,நாம் அவர்களை புறக்கணிப்பதால் அவர்கள் நிலை என்ன தெரியுமா? நோயாளிகளின் மனநிலைகள் கடுமையாக பாதிக்கப்படுகிறது.சில பேர் தற்கொலையும் செய்து கொள்ளுகிறார்கள்.அவன் நிரந்தரமான நரகத்திற்க்கு போவதற்க்கு நாம் காரணமாக அமையக் கூடாது
இது எப்படி ஏற்படுகிறது என்றால் அவனை யாரும் பார்க்காமாலும், அன்பைக் கொண்டு அரவணைக்காமலும் இருந்தால் அவன் மனம் பாதிக்கபடுகிறான், தவறான முடிவையும் எடுக்கிறான்.என் அருமை முஸ்லிம்களே! நேரில் சென்று அவர்களை மனமுவந்து உடல் நலம் விசாரியுங்கள்.அதனால் அவரும் மனநிம்மதி அடைவார், இறைவன் நாடினால் உங்களுக்கும் மறுமையில் நன்மை உண்டு என்பதை மறந்து விட வேண்டாம்.இன்றைக்கு நாம் காணுகின்றோம் எத்தனையோ மருத்துவமனைகளில் பல எண்ணிக்கையில் நோயாளிகள் இருக்கிறார்கள். அதில் அனாதைகளும் நிறைந்திருக்கிறார்கள்.இந்த சூழலில் நாம் இறைவனின் திருப்தி பெற வேண்டும் என்றால் நோயாளிகளை நாம் கனிவுடன் நலம் விசாரிக்க வேண்டும்.
இதில் யாரையும் குறைவைத்து விடதீர்கள்.தன் அருகமையில் உள்ள நணபர்களைக் கூட இன்று பலர் புறக்கணிக்கின்றனர்.அவ்வளவு அலட்சியமாக இன்று முஸலிம்கள் இக்கடமைகளை செய்வதில்லை.
இதைப் பற்றி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்
அல்லாஹ் மறுமை நாளில் (ஒருமனிதரிடம்) ஆதமின் மகனே ! நான் நோயுற்றிருந்த போது என்னை உடல் நலம் விசாரிக்க நீ வரவில்லையே ஏன் என்று கேட்பான், அதற்கு மனிதன் என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க உன்னை நான் எவ்வாறு உடல் நலம் விசாரிப்பேன் என்ற கேட்பான், அதற்க்கு அல்லாஹ் உனக்கு தெரியுமா? என் அடியானான இன்ன மனிதன் நோய்வாய்பட்டியிருந்த போது அவனிடம் சென்று அவனை உடல்நலம் விசாரிக்க சென்றிந்தால் அவனிடம் என்னை கண்டிருப்பாய் என்று அல்லாஹ் கூறுவான்.
நலம் விசாரித்தல் என்பது எவ்வளவு முக்கிய கடமை என்று மேலே உள்ள செய்தி கண்டு உணர்ந்திருப்பிர்கள்.நோயவாய்ப்பட்டிருக்கும் மனிதனை நலம் விசாரித்தால் எத்தனை நன்மைகள்?இதற்க்கு பெரிய சிரமம் இல்லை இதையும் மீறி செய்யாமல் இருக்கிறோம் என்றால் மறுமை விசாரணையில் பிடிப்பட்டு கொள்வீர்கள் என்பதில் மாற்றம் இல்லை.
நன்றி :தவ்ஹீத் வெளிச்சம்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக