குடற் காய்ச்சல்; குடற் புண் காய்ச்சல்; நச்சுக் காய்ச்சல் (TYPHOID FEVER) சால்மோனல்லா டைஃபி (SALMONELLA TYPHI) என்ற நுண் உயிரியால் ஏற்படும் ஒரு வியாதி ஆகும் . இது மனிதர்களை மட்டுமே தாக்கும் . எங்கு எல்லாம் சுத்தம் குறைவாக உள்ளதோ அங்கு எல்லாம் இந்த வியாதி வரும் .
குழந்தைகளுக்கு பொதுவாக 1 -5 வயது வரை எதிர்ப்பு சக்தி குறைவதால் வர வாய்ப்பு அதிகம் . அதாவது அசுத்தமான நீர் , உணவு ( பால் , ஐஸ் கிரீம் , அரை வேக்காடு முட்டை , சாலட், மோர் ,சாப்பிட்ட பின் ஒரு வாரத்தில் இருந்து இரண்டு வாரங்களுக்குள்(INCUBATION PERIOD OF TYPHOID IS 7-14 DAYS ) இதன் அறிகுறி தெரிய ஆரம்பிக்கும் .
அறிகுறிகள் :
ஒரு வாரத்திற்கு மேல்பட்ட ஜுரம் . வைத்தியம் செய்யவில்லை என்றால் ஒரு மாதம் வரை ஜுரம் இருக்கும் .
முதல் வாரம்:
ஜுரம் , உடல் வலி , குளிர் நடுக்கம் , மலசிக்கல் அல்லது வயிற்று போக்கு . குறைந்த இருதய துடிப்பு
( சாதாரணமாக சுரம் வந்தால் இருதய துடிப்பு அதிகமாகும் , ஆனால் TYPHOID FEVER வந்தால் அந்த அளவு அதிகரிக்காது-RELATIVE BRADYCARDIA ) நாக்கின் மேலே வெள்ளை நிறத்தில் படிந்து இருக்கும் (TONGUE COATING)
சிகப்பு புள்ளிகள் (ROSE SPOTS) :சுரம் வந்த ஆறாவது நாள் உடலில் சிறு சிறு சிகப்பு புள்ளிகள் தோன்றும்
இரண்டாம் வாரம் :
மிகவும் சோர்ந்த நிலை , வயிறு வலி , வயிறு உப்புதல் ,
மண் ஈரல் வீக்கம்
WIDAL TEST POSITIVE .
WIDAL TEST என்பது டைபாய்டு சுரத்தை கண்டுபிடிக்க உதவும் ஆய்வக பரிசோதனை . இதனை சுரம் ஆரம்பித்த ஏழு நாட்களுக்கு பிறகே செய்ய வேண்டும் . ஏழு நாட்களுக்கு முன்பே செய்தால் நெகடிவ் என்றே வரும்.
மூன்றாம் வாரம் :
மிகவும் மோசமான நிலை ,
எடை குறைவு , வேகமாக மூச்சு விடுதல் ,
வயிற்று வலி அதிகமாதல், வயிற்றில் இரத்த கசிவு ,
குழப்பமான மன நிலை
நாலாவது வாரம் :
சிறுது சிறிதாக உடல் நிலை தேறும் . உடலில் போதுமான எதிர்ப்பு சக்தி இருந்தால் பழையபடி குணமாகலாம் .
மோச விளைவுகள் (COMPLICATIONS OF TYPHOID)
சரியான நேரத்தில் கண்டுபிடித் வைத்தியம் செய்ய வில்லை என்றால் கீழே காணும் மோச விளைவுகள் ஏற்படலாம்
குடலில் ஓட்டை கணைய அழற்சி
நிமோனியா
எலும்புகளில் அழற்சி
விரை அழற்சி
உணவு முறை :
காரம் இல்லாத எளிதில் செரிக்க கூடிய உணவை மட்டுமே தரவேண்டும்
பட்டினி போடவே கூடாது , வயிற்றில் உணவு இருந்தால் மட்டுமே குடல் புண் சீக்கிரம் ஆறும் . நீர் சத்து உடலில் குறையாமல் பார்த்துகொள வேண்டும் . சரியாக கண்டுபிடித்து மருந்து சாப்பிட ஆரம்பித்தால் நாலு முதல் ஆறு நாட்களுக்குள் சுரம் குறைய ஆரம்பிக்கும் . ஆனாலும் சுரம் விட்ட பிறகு அய்ந்து நாட்களுக்கு ANTIBIOTIC மருந்தை சாப்பிட்டு வர வேண்டும் . வயிறு வலி வந்தால் உடனே மருத்துவரை பார்க்க வேண்டும்
தடுப்பு முறை :
கை சுத்தம் ,நீர் சுத்தம் ,உணவு சுத்தம்
தடுப்பு ஊசி :
இரண்டு வயதிற்கு மேல் தடுப்பு ஊசி உள்ளது . இதை மூன்று வருடங்களுக்கு ஒரு முறை போடவேண்டும் .
ஆறு வயதிற்கு மேல் பட்ட குழந்தைகளுக்கு வாய் வழியே தரும் மாத்திரை (CAPSULE) உள்ளது .
நன்றி : லினோஜ்

1 கருத்துகள்:
thanks its very useful for me
கருத்துரையிடுக