அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வெள்ளி, 6 மே, 2011

பரிணாமக் கோட்பாடு(Evolution Theory)-5

ஏக இறைவனின் திருப்பெயரால்......

இதற்கு முன் ஒட்டகத்தினுடைய இரத்தத்தின் சிகப்பனுக்கள் தண்ணீரை அதிகம் உறிஞ்சிக் கொள்வதால் அது இரத்தத்தை உறைய விடாமல் பாதுகாத்துக் கொள்கிறது அதனால் பயணிகளையும், அவர்களுடைய சுமைகளையும் சுமந்து கொண்டு பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் தங்கு தடையின்றி ஓடிக் கொண்டே இருக்கிறது என்பதைப் பார்த்தோம்.

ஆனாலும், ஒட்டகம் ஓர் உயிர் பிராணி என்பதால் தாகம் ஏற்பட்டு நாக்கு வறண்டு விடாதா ?  நாக்கு வறண்டு சுமை இழுக்க முடியாமல் நமது ஊர் மாடுகள் போன்று அப்படியே உட்கார்ந்து விடாதா ? என்ற சந்தேகம் ஏற்படலாம்.

அப்படியே உட்கார்ந்து விடும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.
ஒட்டகம் என்ன ?
மனிதனுடைய நிலையே அது தான் !

மனிதனுக்குப் பசியும் தாகமும் ஏற்பட்டு விட்டால் தனது அடுத்த வேலைகளை எல்லாம் ஓரங்கட்டி விட்டு முதலில் பசியையும், தாகத்தையும் முடித்துக் கொள்வான் இல்லை என்றால் மொத்த இயக்கமும் நின்று விடும் மற்ற அனைத்து உயிரினங்களுடைய நிலையும் இது தான்.

இதே நிலை ஒட்டகத்திற்கும் ஏற்பட்டால் அதன் மீது அமர்ந்து பயணிக்கும் பயணியுடைய நிலை என்னாவது ?

ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? 88:17.

என்று இறைவன் கூறுவதில் அர்த்தமில்லாமல் போய்விடும்
( நவூது பில்லாஹ் - அல்லாஹ் நம்மை காக்க வேண்டும் )

அல்லது ஒட்டகம் வயிற்றில் சேமித்து வைத்திருந்த தண்ணீரை கக்கி மீண்டும் குடிக்க முடியுமா ?
அவ்வாறு கக்குவதாக இருந்தால் கக்கிய அனைத்து நீரையும் அசுர வேகத்தில் வறண்ட பூமி உறிஞ்சி விடும்.

எல்லாம் அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மனிதர்கள் வியக்கத்தக்க வகையில் அதற்கான ஏற்பாடு ஒன்றையும் அதனுடைய உடலின் உட்புறத்திலேயே அமைத்து வைத்தான்.

ஒட்டகம் நீரை பம்பிங் செய்து கொண்டப் பொழுது அதில் குறிப்பிட்ட அளவு தன்னீரை இரத்தத்தின் சிகப்பணுக்கள் உறிஞ்சிக் கொள்வதைப் போல் குறிப்பிட்ட அளவு தண்ணீர் ஒட்டகத்தின் திமிலுக்கு செல்கிறது திமிலுக்குச் சென்றதும் அது கொழுப்பாக மாறுகிறது ( அதனுடைய திமில் சுமார் 45 kg எடை இருக்கும், அதில் அதிகமாக கொழுப்பு இருக்கும்) உணவோ> நீரோ கிடைக்காத வறட்சியான நேரத்தில் அதற்கு தாகமும் பசியும் ஏற்பட்டால் அதன் திமிலின் கொழுப்பிலிருக்கும் 'ஹைட்ரஜனோடு' அது சுவாசிக்கும் காற்றில் உள்ள 'ஆக்ஸிஜனை' கலந்து நீராகவும், உணவாகவும் மாற்றிக் கொள்கிறது.

நமது புதிய இல்லத்திற்கு பால்கனியில் வாட்டர் டாங்க் அமைப்பது போல் ஒட்டகத்தின் உடலின் மேல்மட்டத்தின் மையப்பகுதியில் திமிலை இறைவன் அமைத்தான் அதனால் ஒட்டகத்தின் மூளை அதற்கு பசியையும் தாகத்தையும் தூண்டியதும் அசுர வேகத்தில் திமிலின் கொழுப்பிலிருக்கும் 'ஹைட்ரஜனோடு' அது சுவாசிக்கும் காற்றில் உள்ள 'ஆக்ஸிஜனை' கலந்து நீராகவும், உணவாகவும் மாற்றியதும் உணவையும், நீரையும் இழுத்துச் சென்று உரிய இடத்தில் சேர்த்து பசியையும், தாகத்தையும் கட்டுப்படுத்தக் கூடிய வேகஸ் நரம்புகள் தனது வேலையை சுறு சுறுப்பாகச் செய்து ஒட்டகத்தின் தாகத்தையும், பசியையும் கட்டுப்படுத்தி விடுகிறது.

வேகஸ் நரம்புகளின் பணிகளில் சில: இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துவது, உணவு உடலில் பல் வேறு பகுதிகளில் நகர்வதற்குத் துணை செய்யும் சுற்றிழுப்பசைவுக்கு (peristalsis) துணை செய்வது, வாயில் உள்ள பல தசைகளை இயக்குவது, பேசுவதற்குத் துணை செய்யும் குரல்வளை தசைகளை இயக்குவது, மூச்சு விடுவதற்குத் துணை செய்வது, காதின் புற செவி மடல்களில் இருந்து உணர்வு பெறுவது, மண்டை ஓட்டின் தசைகள் சிலவற்றைக் கட்டுறுத்துவது, பெருங்குடலின் சில பகுதிகளை கட்டுப்படுத்துவது என்று பல பணிகளைக் கட்டுறுத்தும் நரம்புகள் ஆகும் .

(வேகஸ் நரம்பு - தமிழ் விக்கிபீடியா)

இது சாத்தியப்படுமா ?

வாய் வழியாக அருந்தி நாக்கு அதனுடைய சுவையை உணர்ந்து இறப்பைக்கு அனுப்பினால் தான் பசியும்> தாகமும் அடங்கியதாக உணர்வுகள் ஏற்படும் என்ற ஞாயமான சிந்தனை எழலாம்.

சூழ்நிலைக்கொப்ப மாற்றங்கள் செய்தே ஆகவேண்டும் உதாரணத்திற்கு உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கும் ஒருவருக்கு வாய் திறந்து உணவு உண்ண முடியாத நிலை ஏற்பட்டால் வாய் திறந்து அவரால் உணவு உண்ண முடியாது என்பதற்காக அவரை அப்படியே வைத்து சிகிச்சை அளிப்பதில்லை அவர் பூரண குணம் அடையும் வரை டியூப் மூலம் மூக்கின் வழியாக திறவ உணவுகள் நேரடியாக இரைப்பைக்கு அனுப்பப்படுகிறது.அவ்வாறு அனுப்பப் பட்டால் தான் அவரால் முழு சிகச்சைப் பெற மடியும்.மருத்துவர் அளிக்கின்ற ஹெவி டோஸ்களுக்கு வயிறு காலியாக இருந்தால் சிகிச்சைக்காக அளிக்கப்படுகின்ற மருந்துகளே நோயாளிகளுக்கு மரணமாக மாறிவிடும்.

டியூப் மூலம் மூக்கின் வழியாக உணவேற்ற முடியும் என்று மனிதனே சிந்தித்தால் ?
மனிதனைப் படைத்த இறைவன் எப்படி எல்லாம் சிந்தித்திருப்பான் ?

இறைவன் ஓட்டகத்தை வறண்ட பூமிக்கு ஒரு வாகனமாக வடிவமைத்தக் காரணத்தால் அது பயணிக்கும் வழிகளில் உணவும், நீரும் எளிதில் கிடைக்காது என்பதால் அதனுடைய உடலின் உட்புறத்தில் மெகா ஏற்பாடு ஒன்றை செய்து அது தாமாக இயங்கிக் கொள்ளும் நிலையில் அதனுடைய அமைப்பை ஏற்படுத்தினான்.

இறைவனின் இந்த மெகா செட்டப் காரணத்தால் ஒட்டகம் உணவு மட்டும் கிடைத்தால்> நீரின் தேவையில்லாமல் ஒரு மாதம் பயணம் செய்யும். உணவோ> நீரோ கிடைக்காத பட்சத்தில் கூட எந்த தேவையுமில்லாமல் ஒரு மாதம் பயணம் செய்யும். குளிர்காலங்களில் ஆறு மாதம் வரை கூட நீர் குடிக்காமல் பயணிக்கும்.

இன்று மனிதன் கண்டுபிடிக்கும் எலக்ட்ரானிக் உபகரணங்களில் எந்தெந்த இடங்களில் எந்தெந்த ஒயர்களைப் பொருத்த வேண்டும், அவைகளை சீராக இயக்குவதற்கான ஸ்விட்சை எந்த இடத்தில் அமைக்க வேண்டும் என்பனவற்றை துல்லியமாக கண்டுப் பிடித்து அமைக்கிறான்.

மனிதனே இப்படி என்றால் ?
அவனைப் படைத்த படைப்பாளன் எப்படி எல்லாம் சிந்தித்திருப்பான் ?

உயிரிணங்களின் உடலுக்குள் எந்தெந்த இடத்தில் எவ்வாறான உறுப்புக்களைப் பொருத்தி அந்தந்த உறுப்புகள் இயங்குவதற்கான நரம்புகளை அமைத்து எந்தெந்த நரம்புகளுக்கு எந்தெந்த உறுப்புக்கள் என்பனவற்றை இயக்குவதற்கு மூளை என்ற ஒரே ஸ்விட்சை இறைவன் அமைத்தான் சுப்ஹானல்லாஹ்.

மனித மூளை என்பது மனிதரின் மையநரம்புத் தொகுதியினுடைய மையமும், சுற்றயல் நரம்புத்தொகுதியினுடைய அடிப்படை கட்டுப்பாட்டு நிலையமுமாகும். மனிதமூளை, சிக்கல் தன்மை குறைந்ததும் பிரக்ஞை இன்றியும் நிகழும், மனிதரின் இச்சை இன்றிய செயற்பாடுகளான சுவாசம், சமிபாடு, இதயத்துடிப்பு போன்ற செயற்பாடுகளையும், பிரக்ஞையுடன் நிகழும் சிந்தனை, புரிதல், தர்க்கம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. மற்றைய எல்லா உயிரிகளையும் விட இத்தகைய சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளை சிறப்பாக கையாளும் திறனை மனித மூளை பெற்றிருக்கிறது.
(மனித மூளை - தமிழ் விக்கிபீடியா)

கோவேறு கழுதைகள், மாடுகள் போன்ற பாரம் சுமந்துப் பயணிக்கும் வனவிலங்குகளில் மற்ற விலங்குகளிலிருந்து மலைக்கும் முகடுக்கும் உள்ள அளவு ஒட்டகம் வித்தியாசப்படுகிறது.
வித்தியாசப்படுவதால் தான் இறைவன்

ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? 88:17.

என்றுக் கூறி அதை ஆய்வு செய்யக் கூறுகிறான்.
எங்கெல்லாம் வித்தியாசம் இருக்கின்றதோ அங்கெல்லாம் இறைவனின் அத்தாட்சிகள் இருப்பதைக காணலாம் என்று இறைவனேக் கூறுகிறான்.

3:190. வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன.   
உதாரணத்திற்கு ஒட்டகமும், ஒட்டகச்சிவிங்கியும் ஒன்றுப்போல் காட்சி அளித்தாலும் அதனுடைய உட்புற உறுப்புக்களில் வித்தியாசத்தை ஏற்படுத்தி அதனுடைய செயல்பாடுகளில் பாரிய மாற்றத்தை இறைவன் ஏற்படுத்தினான். பாரப்பதற்கு ஒன்றுப் போல் இருப்பவைகள் குணநலன்களில், நடைமுறைகளில் மாறுபடும்பொழுது தான் படைப்பாளன் ஒருவன் இருக்கின்றான் என்பது ஊர்ஜிதமாகும். இல்லை என்றால் எல்லாம் தாமாகத் தோன்றியவைகளே, ஒன்ற மற்றொன்றிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவைகள் என்ற டார்வினிஸக் கொள்கையை பெரும்பாலான மக்கள் ஏற்றிருப்பார்கள்.
அல்லாஹ் நாடினால் அல்லாஹ்வின் அற்புதப படைப்பாகிய ஒட்டக அதிசயத்தை இன்னும் எழுதுவோம்.

தொடரும் இன்ஷா அல்லாஹ்....

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நன்றி : அதிரை ஏ.எம்.பாரூக்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக