அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

சனி, 11 ஆகஸ்ட், 2012

அஸ்ஸாம் கலவரம் கொன்று குவிக்கப்படும் முஸ்லிம்கள்!‎


கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அஸ்ஸாமில் முஸ்லிம்களின் மீதான ‎தாக்குதல் கொடூரமாக நடந்து வருகின்றது. போடா லேண்ட் ‎பகுதியிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியே தீருவோம் என ‎திட்டமிட்டு முஸ்லிம்களை கொன்றொழித்துக் கொண்டிருக்கின்றனர், ‎தனி நாடு கேட்டு ஆயுதம் ஏந்தி போராடும் போடோ தீவிரவாதிகள். ‎இதுவரை பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சத்திற்கும் ‎மேற்பட்ட முஸ்லிம்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். 
போடோ ‎தீவிரவாதிகளின் இந்த வெறிச்செயலை வேடிக்கை பார்க்கின்றது மத்திய, மாநில அரசுகள். இவர்களின் இந்த தீவிரவாதத் தாக்குதல் ஒடுக்கப்படவில்லை என்றால் போடோ லேண்ட் பகுதில் வசிக்கும் ‎லட்சக்கணக்கான முஸ்லிம்களின் நிலைமை மிகவும் ‎மோசமாகிவிடும்.

கலவரத்தின் பின்னணி :‎
போடோ லேண்ட் சிறுபான்மை மாணவர் பேரவையின் தலைவர் ‎முஹிப்புல் இஸ்லாம் மற்றும் அஸ்ஸாம் சிறுபான்மை மாணவர் ‎பேரவையைச் சேர்ந்த அப்துல் சித்தீக் சேக் ஆகியோர் போடோ ‎தீவிரவாதிகளால் ஜூலை 20 அன்று கொல்லப்படுகின்றனர். இந்த ‎போடோ தீவிரவாதிகள்தான் முஸ்லிம்களைக் கொலை செய்து ‎கலவரத்திற்கு வித்திட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக போடோ ‎தீவிரவாத குழுவைச் சேர்ந்தவர்கள் மறுநாள் கொல்லப்படுகின்றனர். ‎இதனால் இரு சமூகங்களுக்கிடையே பயங்கர கலவரம் ஏற்படுகின்றது.‎
போடா லேண்ட் பகுதியின் கொக்ரஜ்ஹர், சிராங், பக்ஸா ‎மாவட்டத்திலும் மற்றும் துப்ரி மாவட்டத்திலும் கலவரம் காட்டுத்தீ ‎போல் பரவுகின்றது. இதுவரை இந்த கலவரத்திற்கு 58க்கும் ‎மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.‎
1,70,000 பேர் தங்களுடைய இருப்பிடங்களை விட்டுவிட்டு அகதிகளாக ‎அண்டை மாவட்டங்களிலும், அண்டை மாநிலமான மேற்கு ‎வங்கத்திலும் குடிபெயர்ந்துள்ளனர்.‎


யார் இந்த போடோ தீவிரவாதிகள்?‎
போடோ லிப்ரேஷன் டைகர் போர்ஸ் (Bodo Liberation Tigers Force) என்று ‎அழைக்கப்படும் இந்த போடோ தீவிரவாதிகள் அஸ்ஸாமில் உள்ள ‎போடோ லேண்ட் பகுதியை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என ‎போராடக்கூடிய தீவிரவாத குழு ஆவார்கள். இவர்களில் ‎பெரும்பாலானோர் கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள்.‎
AK 47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் என தனி போர்ப்படையை ‎வைத்துக் கொண்டு இந்திய அரசிற்கு சவால்விடும் வகையில் ‎அஸ்ஸாமின் போடோ லேண்ட் பகுதியில் தனி இராஜ்யம் நடத்திக் ‎கொண்டிருப் பவர்கள்தான் இந்த போடோ தீவிரவாதிகள். ‎இந்தியாவிற்கு ஆதரவாக செயல்படுபவர்கள் இவர்களைப் ‎பொருத்தவரை தீவிரவாதிகள். சற்றும் யோசிக்காமல் கொன்று ‎குவித்துவிடுவார்கள்.‎
மொண்டல் என்பவர் கோக்ராஜ்ஹர் பகுதியில் பல இடங்களுக்கு உரிமையாளர். முஸ்லிம்களுக்கு எதிரான போடோ தீவிரவாதிகளின் ‎தாக்குதலைப் பற்றி மொண்டல் குறிப்பிடுகையில், “கடந்த 20 ‎ஆண்டுகளில் போடோ தீவிரவாதிகள் இதுபோன்ற ஒரு தாக்குதலை ‎நடத்தியதில்லை. அந்த அளவிற்கு கொடூரமாக முஸ்லிம்கள் மீது ‎இந்த போடோ தீவிரவாதிகள் தற்போது தாக்குதல் நடத்தியுள்ளனர்” ‎என்றார்.‎
இந்தக் கலவரத்தில் போடோ தீவிரவாதிகளிடமிருந்து தனது ‎சகோதரரை மயிரிழையில் காப்பாற்றிய மொய்னுல் ஹக் என்பவர் ‎கூறுகையில்…‎
இந்த போடோ தீவிரவாதிகளின் அட்டூழியங்கள் 1987-ல் இருந்து ‎நடந்து வருகின்றது. இவர்களின் நோக்கம் தனி நாடு. போடோ ‎இனத்தைத் தவிர பிற மக்களை போடோ லேண்ட் பகுதியிலிருந்து ‎துரத்துவதுதான் இவர்களின் குறிக்கோள். இந்தப் பகுதியில் 25 ‎சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் முஸ்லிம்கள். எனவே இவர்களின் ‎தனி நாடு கோரிக்கைக்கு இடையூறாக இருக்கும் முஸ்லிம்களைக் ‎கொல்வதை இவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர் எனத் ‎தெரிவித்தார்.‎

உண்மையை மறைக்கும் தமிழக ஊடகங்கள்:‎

ஆங்கில ஊடகங்கள் இந்த பயங்கர நிகழ்வை சரியாக படம்பிடித்துக் ‎காட்டி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தமிழக ‎ஊடகங்களோ இப்படி ஒரு கலவரமே நடக்காததுபோல் ஒரு துணுக்குச் ‎செய்தியைக்கூட வெளியிடாமல் இருட்டடிப்பு செய்கின்றது. தமிழக ‎ஊடகங்களின் இந்த முஸ்லிம் விரோதப்போக்கு கண்டிக்கத்தக்கது.‎

செயலிழந்த மாநில அரசு; வேடிக்கை பார்த்த மத்திய அரசு:‎

அஸ்ஸாம் மாநிலத்தின் போடா லேண்ட் பகுதியே பற்றி எரிகின்றது. ‎மாநில முதல்வரோ பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு டீ ‎பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றார்.அஸ்ஸாமில் ஒன்றுமே ‎நடக்கவில்லை எனவும் பத்திரிகைகள் பெரிதுபடுத்தி எழுதுகின்றன ‎எனவும் உளறிக் கொட்டி கேவலப்பட்டுக் கொண்டு இருகின்றார்.‎
அஸ்ஸாம் மாநில முதல்வர் தரூன் கோகாய் மத்திய அரசு போதிய ‎உதவி செய்யவில்லை. இராணுவத்தை அனுப்பவில்லை என மத்திய ‎அரசை குறை சொல்கின்றார்.‎
மத்திய அரசோ மாநில அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை ‎எனக் குறை சொல்கின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் மாநில ‎அரசும் காங்கிரஸ்தான்; மத்திய அரசும் காங்கிரஸ்தான். இவர்களின் ‎இந்த பூச்சாண்டி விளையாட்டால் பலியாவது முஸ்லிம்கள்தான். ‎இத்தனைக்கும் இந்த மன்மோகன்சிங் அஸ்ஸாம் ‎மாநிலத்திலிருந்துதான் மேல்சபை எம்.பி.யாக ‎தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது இன்னும் கேவலமான விஷயம்.‎
முஸ்லிம்கள் என்றாலே இரண்டாந்தர குடிமக்களாக பார்க்கும் ‎காங்கிரஸ் அரசின் பச்சைத்துரோகம் மிகவும் கண்டிக்கத்தக்கது.‎
கலவரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு நடவடிக்கை எடுக்காத ‎மாநில முதல்வர் தரூன் கோகாய் உடனடியாக பதவி நீக்கம் ‎செய்யப்பட வேண்டும்.‎

அரசுகள் செய்ய வேண்டியது என்ன?:‎

லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தற்போது அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்கள் மீண்டும் அவர்களின் வசிப்பிடங்களுக்குச் செல்லவிடாமல் ஆயுதமேந்திய போடோ தீவிரவாதிகளால் ‎தடுக்கப்படுகின்றனர்.‎
1. மத்திய அரசு தனது இராணுவ பலத்தை பயன்படுத்தி முஸ்லிம்கள் ‎வசிக்கும் பகுதியில் ஆயுதங்களுடன் ஆக்கிரமித்துள்ள போடோ ‎தீவிரவாதிகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும். முஸ்லிம்கள் ‎அவர்களின் இருப்பிடங்களில் பாதுகாப்புடன் வசிக்க வழிவகை செய்ய ‎வேண்டும்.‎
2. மீண்டும் இது போல கலவரம் நடக்காமல் இருக்க சட்ட ‎விரோதமாக போடா தீவிரவாதிகள் வைத்திருக்கும் ஆயுதங்களை ‎பறிமுதல் செய்ய வேண்டும்.‎
3.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் அகதிகளாக உள்ள ‎குடும்பங்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.‎

மேற்கண்ட விஷயங்களை கவனத்தில் கொண்டு காங்கிரஸ் அரசு ‎தனது தவறை சரிசெய்யாவிட்டால் காங்கிரஸுக்கு முஸ்லிம்கள் தக்க ‎பாடம் புகட்டத் தயங்கமாட்டார்கள்.‎
கட்டுப்படுத்தத் தவறிய மத்திய, மாநில அரசுகளுக்கு டிஎன்டிஜே ‎கண்டனம்!‎
நாட்டின் அமைதியை சீர் குலைக்கும் போடோ தீவிரவாதிகள் மீது ‎இராணுவத் தாக்குதல் நடத்த வேண்டும்!!‎
அஸ்ஸாம் மாநிலத்தில் முஸ்லிம்களின் மீது முதலில் கலவரத்தைத் துவக்கிய போடோ தீவிரவாதிகள் அப்பாவி முஸ்லிம்களைக் கடந்த 20 ஜூலை 2012 அன்று கொலை செய்தனர். இதற்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் போடோ தீவிரவாதிகள் மீது எதிர்த் தாக்குதல் ‎தொடுத்தார்கள். பல நாட்கள் ஆகியும் கலவரம் கட்டுக்குள் ‎அடங்கவில்லை. இதுவரை சுமார் 1,70,000 முஸ்லிம்கள் தங்களின் ‎வீடு வாசல்களை விட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து ‎வருகின்றார்கள்.‎
மத்தியிலும், அஸ்ஸாம் மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பது ‎காங்கிரஸ் கட்சிதான்! மத்திய அரசு மாநில அரசு மீது குற்றம் ‎சாட்டுகிறது. மாநில அரசோ மத்திய அரசும் உள்துறை அமைச்சகமும் ‎போதிய அளவுக்கு ஒத்துழைப்புத் தரவில்லை;உடனடியாக ‎இராணுவத்தையும் அனுப்பவில்லை என்று குற்றம் சாட்டுகிறது.‎
இவர்களின் கையாலாகாத தன்மையின் காரணமாக முஸ்லிம்கள் ‎பெரிய அளவில் இழப்பிற்குள்ளாகி உள்ளனர். இந்தக் கலவரம் ‎இதுவரை 48 உயிர்களைப் பலி வாங்கியுள்ளது. மேலும் போடோ ‎தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களை வைத்துக்கொண்டு முஸ்லிம்கள் ‎சொந்த ஊருக்குள் திரும்ப விடாமல் அச்சுறுத்துகின்றனர்.‎
முஸ்லிம்கள் நோன்பு நோற்று இறைவனை வழிபடும் இந்தப் புனித ‎மாதத்தில் முஸ்லிம்களைக் கொன்றொழித்துக் கொண்டிருக்கும் ‎போடோ தீவிரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காத ‎அஸ்ஸாம் மாநில அரசையும், வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ‎மத்திய அரசையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் ‎கண்டிக்கின்றது.‎
சட்ட விரோதமாக ஆயுதங்களை வைத்திருக்கும் போடோ தீவிரவாதிகளிடமிருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்து ‎முஸ்லிம்கள் மீண்டும் அவர்களின் சொந்த ஊருக்குத் திரும்ப ‎வழிவகை செய்ய வேண்டும் எனவும், நாட்டின் இறையான்மைக்கு ‎எதிராகவும், அமைதியை குலைக்கும் விதமாகவும் ஆயுதம் ஏந்திப் ‎போராடும் இந்த போடோ தீவிரவாதிகள் மீது உடனடியாக மத்திய ‎அரசு இந்திய இராணுவத்தின் மூலம் தரை வழியாகவும், வான் ‎வழியாகவும் தாக்குதல் நடத்த வேண்டும் எனவும் மத்திய அரசை தமிழ்நாடு தவ்ஹீத ஜமாஅத் கேட்டுகொள்கின்றது என்று மாநிலப் பொதுச்செயலாளர் ஆர்.ரஹ்மதுல்லாஹ் அவர்கள் தனது கண்டன ‎அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.‎

நன்றி : dubaitntj

0 கருத்துகள்:

கருத்துரையிடுக