அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

சனி, 4 ஜூன், 2011

அகத்தி கீரை

1. அகத்திகீரையை பருப்பு சேர்த்து வேகவைத்து கடைந்து தேங்காய் சேர்த்து சாப்பிட தலைசூடு மற்றும் ரத்த கொதிப்பை கட்டுப்படுத்துகிறது.

2. அகத்திகீரையுடன் தேங்காய் சேர்த்து செய்த பதார்த்தங்களை சாப்பிட்டால் வாய்ப்புண், குடல்புண், தொண்டைப்புண் நீங்கும்.

3. அகத்திகீரை தொடர்ந்து சாப்பிட்டு வர மூளைக் கோளாறு உள்ளவர்களுக்கு பூரண குணம் அடையும்.

4. அகத்திப்பூவையும், மொட்டுக்களையும் உணவாகப் பயன்படுத்திவர உடல் உஷ்ணத்தை போக்கும். பித்தம் சம்பந்தமான அனைத்து பிணிகளும் நீங்கும்.

5. அகத்திப்பூவை கண்ணில் வைத்து கட்டிக்கொண்டால் கண் எரிச்சல், கண் வலி, கண்ணில் நீர் வடிதல் போன்றவை நீங்கும்.

6. அகத்தி பட்டையை தண்ணீரில் காய்ச்சி வடித்துக் குடிநீராகப் பயன்படுத்தினால் வைசூரி போன்ற நோய் கட்டுப்படுத்தும்.

7. இளந்தாய்மார்கள் அகத்தி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள அதிகம் பால் சுரக்கும். மூளையைச் சுத்திகரிக்கும். குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்.

8. அகத்தி கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால் இதனை உணவில் சேர்த்து கொள்ள எலும்புகளும், பற்களும் உறுதி பெறுகின்றன.

9. அகத்தி கீரையை உலர்த்தி பொடி செய்து கொண்டு தினசரி காலை, மாலை இரண்டு வேலையும் வெந்நீர் அல்லது பாலில் கலந்து குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும்.

நன்றி : ரோஜா, படுகை

0 கருத்துகள்:

கருத்துரையிடுக