(நபியின் மனைவியரே!) உங்கள் வீடுகளில்
ஓதிக் காட்டப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும் ஹிக்மத்தையும் நினைவு கூருங்கள். (அல்குர்ஆன்
33 : 34)
ஹிக்மத்
என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்கப் பட்ட ஞானம் தான் என்பது முற்றிலும் தவறானது
என்பதை இவ்வசனம் விளக்குகிறது. இவ்வசனத்தில் அல்லாஹ்வின் வசனங்கள் எவ்வாறு ஓதிக்
காட்டப்படுகிறதோ அதுபோலவே ஹிக்மத்தும் ஓதிக் காட்டப்படுவதாக அல்லாஹ் கூறுகிறான். நபியின்
மனைவியர் வீட்டில் ஓதிக் காட்டப்படுகிறது என்றால் ஓதிக் காட்டியவர் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் தான். நபி (ஸல்) அவர்கள் தமக்கு அருளப்பட்ட அல்லாஹ்வின் வசனங்களையும்
ஓதிக் காட்டியுள்ளார்கள். மேலும் ஹிக்மத்தையும் ஓதிக் காட்டியுள்ளார்கள் என்பது
தெளிவாகிறது.
திலாவத் – ‘ஓதிக் காட்டுதல்’ என்பது பிறரது வார்த்தையை ஒருவர்
எடுத்துக் கூறுவதைக் குறிக்கும் சொல்லாகும். எனவே அல்லாஹ்வின் வசனங்கள் எப்படி
நபியின் சொந்த வார்த்தை இல்லையோ அது போலவே ஹிக்மத்தும் அவரது சொந்தக் கருத்தல்ல. இரண்டுமே
அல்லாஹ்வுக்குச் சொந்தமாகவுள்ளதால் தான் இரண்டையும் நபி (ஸல்) ஓதிக்
காட்டியுள்ளார்கள் என்று அல்லாஹ் இங்கே கூறுகிறான்.
குர்ஆன்
அல்லாத வஹீ உள்ளது என்பதற்கு இன்னும் ஏராளமான ஆதாரங்கள் குர்ஆனிலேயே உள்ளன. அவற்றை
மேலும் பார்ப்போம்.
அல்லாஹ்
எந்த நபியை அனுப்பினாலும் அவருக்கு வேதப்புத்தகத்தை மட்டும் கொடுத்து இதை மட்டும்
மக்களுக்குப் படித்துக் காட்டுங்கள் என்று கூறி அனுப்புவதில்லை. மாறாக வேதத்தில்
எழுகின்ற சந்தேகங்களுக்கு
விளக்கமளிக்கவும், கூடுதல் விளக்கம் தேவைப்படும் இடங்களில் அதை அளிக்கவும் தேவையான
ஞானத்தையும் சேர்த்தே கொடுத்து அனுப்பியுள்ளான்.
உங்களுக்கு
கிதாபையும் ஹிக்மத்தையும் நான் வழங்கியபின் உங்களிடம் இருப்பதை மெய்ப்பிக்கும் ஒரு
தூதர் உங்களிடம் வந்தால் அவரை நிச்சயமாக நம்புவீர்களா? நிச்சயமாக அவருக்கு உதவுவீர்களா? என்று அல்லாஹ் நபிமார்களிடம் உறுதி
மொழி எடுத்ததை நினைவு கூர்வீராக! (அல்குர்ஆன் 3 : 81)
எல்லா
நபிமார்களிடமும் அல்லாஹ் ஓர் உறுதிமொழி எடுத்ததை இங்கே நினைவு படுத்துகிறான். (நபிகள்
நாயகத்துக்குப் பின் தூதர் யாரும் வரமுடியுமா? என்பதைக் கூறும் இவ்வசனத்துக்குத் தலைகீழாக விளக்கம் கூறி நபிகள்
நாயகத்துக்குப் பின் தூதர் வர முடியும் என்று ஒரு மன நோயாளி உளறியிருப்பதைப்
பின்னர் நாம் விளக்குவோம்)
அவ்வுறுதி
மொழியைக் குறிப்பிடும் போது ”நபிமார்களே!
உங்களுக்கு வேதத்தையும் ஹிக்மத்தையும் நான் வழங்கிய பின்” என்று இறைவன் குறிப்பிடுகிறான். நபிமார்களுக்கு
வேதம் எவ்வாறு வழங்கப்பட்டதோ அவ்வாறே ஹிக்மத்தும் வழங்கப்பட்டது. இரண்டுமே
இறைவனால் தான் வழங்கப்பட்டது என்பதை இவ்வசனம் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது.
நாம்
அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும்
(சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள்
அனைவரையும் நாம் நேர் வழியில் செலுத்தினோம். இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய
சந்ததியிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுப், மூஸா, ஹாரூன்
ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம். இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம். இன்னும், ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் – இவர்கள் யாவரும் (நேர் வழி சார்ந்த) ஸாஹானவர்களில்
நின்றுமுள்ளவர்களே. இன்னும் இஸ்மாயீல், அல்யஸஉ, யூனுஸ், லூத் – இவர்கள் யாவரையும் உலகத்திலுள்ள அனைவரிலும் மேன்மையாக்கினோம். இவர்களுடைய
மூதாதையர்களிருந்தும், இவர்களுடைய
சந்ததிகளிருந்தும், இவர்களுடைய
சகோதரர்களிருந்தும் (பலரை) நாம் தேர்ந்தெடுத்து, அவர்களை நேர் வழியில் செலுத்தினோம். இதுவே அல்லாஹ்வின் நேர்
வழியகும். தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன் மூலம் நேர்வழி
காட்டுகிறான் (பின்னர்) அவர்கள் இணை வைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்து விடும். இவர்களுக்குத்தான்
நாம் வேதத்தையும், அதிகாரத்தையும், நபித்துவத்தையும் கொடுத்தோம். ஆகவே
இவற்றை இவர்கள் நிராகரித்தால் இதனை நிராகரிக்காத ஒரு சமுதாயத்தினரை இதற்கு நாம்
நிச்சயமாக பொறுப்பாக்குவோம். (அல்குர்ஆன் 6 : 84 – 89)
இவ்வசனங்களில்
1. இப்றாஹீம் 2. இஸ்ஹாக் 3. யஃகூப் 4. நூஹ் 5. தாவூத் 6. சுலைமான் 7. அய்யூப் 8. யூசுப் 9. மூஸா 10. ஹாரூன் 11. ஸக்கரிய்யா 12. யஹ்யா 13. ஈஸா 14. இல்யாஸ் 15. இஸ்மாயீல் 16. அல்யஸவு 17. யூனுஸ் 18. லூத் ஆகிய நபிமார்களின் பெயர்களைக்
குறிப்பிட்டு விட்டு 87 ஆம்
வசனத்தில் இவர்களது முன்னோர்கள், இவர்களின்
சந்ததிகள் இவர்களது சகோதரர்களில் தோன்றிய நபிமார்களைப் பொதுவாகவும் கூறுகிறான்.
அதாவது
நபிமார்கள் எனப்படும் அனைவரையும் பொதுவாகவும் சிலரைக் குறிப்பாகவும் கூறிவிட்டு ”இவர்களுக்கு கிதாபையும் வழங்கினோம். ஹுக்மையும்
வழங்கினோம். நுபுவ்வத்தையும் வழங்கினோம்” என்று அல்லாஹ் 89வது
வசனத்தில் கூறுகிறான்.கிதாபு என்பதன் பொருள் நமக்கு விளங்குகிறது. நுபுவ்வத்
என்பதன் (நபி எனும் தகுதி) பொருளும் விளங்குகிறது. இவ்விரண்டை மட்டுமின்றி
மூன்றாவதாக ‘ஹுக்மை’ வழங்கியதாகக் கூறுகிறானே அது என்ன?
ஹுக்மு
என்பதற்கு அதிகாரம் என்பது பொருள். இவர்களில் தாவூத், சுலைமான், யூசுப், மூஸா போன்ற சிலருக்கு ஆட்சியதிகாரம் வழங்கப்பட்டது என்றாலும்
அனைத்து நபிமார்களும் ஆட்சியதிகாரம் வழங்கப்பட்டவர்களாக இருக்கவில்லை. எனவே ஹுக்மு
என்பதற்கு ஆட்சியதிகாரம் என்று பொருள் கொள்ள முடியாது. மாறாக மார்க்க ரீதியிலான
சட்ட திட்டங்கள் குறித்த அதிகாரமே இங்கே குறிப்பிடப்படுகிறது.
அவர்களுக்கு
வழங்கப்பட்டிருந்த ஹிக்மத் என்னும் ஞானத்தின் மூலம் ஹுக்மு எனும் சட்டமியற்றும்
அதிகாரத்தையும் நபிமார்கள் பெற்றார்கள். அல்லாஹ்வே அதை நபிமார்களுக்கு
வழங்கியிருந்தான் என்பதை இதிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.வேதம் தவிர வேறு
எதுவும் நபிமார்களுக்கு வழங்கப் படவில்லை என்றிருந்தால் வேதத்தையும்
நுபுவத்தையும் ஹுக்மையும் என்று அல்லாஹ் கூறியிருக்க மாட்டான்.
இறுதியாக
இவ்வசனத்தில் அல்லாஹ் கூறும் செய்தி முக்கியமாகக் கவனிக்கப் படவேண்டியதாகும். ”இந்த நபிமார்கள் இம்மூன்றையும்
மறுப்பார்களானால் மறுக்காத – காஃபிர்களாக
இல்லாத – ஒரு கூட்டத்தாரிடம் இவற்றை
ஒப்படைப்போம்”
என்பது தான் அந்தப் பகுதி. வேதம்
மட்டும் தான் நமக்கு அருளப்பட்டது. ஹுக்மு என்ற அதிகாரமோ, ஹிக்மத் என்ற ஞானமோ தமக்குத்
தேவையில்லை என்று அந்த நபிமார்கள் கருதுவார்களானால் இம்மூன்றையும் ஏற்கக் கூடிய
மற்றவர்களுக்கு அதைக் கொடுத்து அனுப்புவேன் என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.
”இந்த நபிமார்கள் இம்மூன்றையும் மறுப்பார்களானால் மறுக்காத (காபிராக
இல்லாத) வேறு கூட்டத்தாரிடம் இவற்றை ஒப்படைப்பேன்” என்று அல்லாஹ் கூறுவது மூன்றுமே சமமானவை என்பதற்கும் மூன்றில்
எதையும் நபிமார்களே மறுக்கக் கூடாது என்பதற்கும் மிகத் தெளிவான சான்றாக உள்ளது. மூன்றையும்
சேர்த்து வாங்குவதாக இருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள். மூன்றில் ஒன்றோ இரண்டோ தான்
வேண்டும் எனக் கூறினால் வேறு யாருக்காவது மூன்றையும் தந்து விடுவேன் என்ற
தோரணையில் இவ்வசனம் அமைந்துள்ளது.
குர்ஆன் மட்டும் போதும் என்போர்
காபிர்கள் தான் என்று திட்டவட்டமாக குர்ஆனே அறிவிக்கிறது.
நன்றி : tntj.net
தொடரும் இன்ஷாஅல்லாஹ்.....
0 கருத்துகள்:
கருத்துரையிடுக