அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

புதன், 6 ஜூன், 2012

ஜிப்மரில், ஒன்பது புதிய மருத்துவ சிறப்பு படிப்புகள்

புதுச்சேரி ஜிப்மரில், ஒன்பது புதிய மருத்துவ சிறப்பு படிப்புகள், இந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

ஜிப்மரில் எம்.பி.பி.எஸ்., இடங்கள், இந்தாண்டு, 75லிருந்து 145 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த அதிகரிப்பால், 20 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்த புதுச்சேரிக்கு, தற்போது, 40 இடங்கள் கிடைத்துள்ளன. இதேபோல் முதுநிலை மருத்துவ படிப்பு இடங்கள், 88லிருந்து 124 ஆக உயர்த்தப்பட்டுள்ளன.

டி.எம்., நெப்ரோலஜி, டி.எம்., மெடிக்கல் ஆங்காலஜி, எம்.சி.எச்., பிளாஸ்டிக் சர்ஜரி, எம்.சி.எச்., குழந்தை மருத்துவ அறுவை சிகிச்சை, இதயம் மற்றும் நரம்பு உணர்வு அகற்றியல், எம்.எஸ்.சி., எம்.எல்.டி., எம்.எஸ்.சி., மெடிக்கல் சைகாலஜி உட்பட, ஒன்பது புதிய மருத்துவ சிறப்பு படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

படிப்பு கால ஆராய்ச்சி நிதியாக, 20011-12 ஆண்டில், இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு, 33.67 லட்சமும், முதுநிலை மருத்துவர்களுக்கு, 52.61 லட்சமும் ஒதுக்கப்பட்டது. இந்தாண்டு, இத்திட்டத்திற்கான தொகை, 3.25 கோடி ரூபாயாக ஒதுக்கிடப்பட்டுள்ளது.

நன்றி : Thaalamnews


0 கருத்துகள்:

கருத்துரையிடுக