நம் அனைவர் மீதும் இறைவனின்
சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
உலகின் பிரசித்திப்பெற்ற கால்பந்தாட்ட போட்டிகளில் (tournament) இதுவும் ஒன்று. முக்கிய ஆட்டம். 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற அணியில் அந்த இரண்டு கோல்களையும்
போட்டதால் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்படுகின்றார் ஒருவர். ஆனால் பரிசாக
கொடுக்கப்பட்ட பெரிய ஷாம்பைன் (மது) பாட்டிலை ஏற்க மறுத்துவிடுகின்றார்.இது எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை சற்றே
சிந்தித்து பாருங்கள். இன்று உலக ஊடகங்கள் பலவும் இந்த செய்தியை பெரிய அளவில்
பேசுகின்றன. கால்பந்தாட்ட உலகின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவராக கருதப்படும் இந்த
வீரர்,
தன்னுடைய இந்த செயலால்
பலரது பாராட்டுகளையும் பெற்று மக்கள் மனதில் சூப்பர்ஸ்டாராக உட்கார்ந்துவிட்டார்.
யார் இவர்?
எந்த போட்டி அது?
என்ன காரணம் கூறி பரிசை நிராகரித்தார்?
கடந்த மே மாதம் நடந்த இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் (EPL) போட்டிகளில் தான் இந்த சம்பவம் நடந்தேறியது. இந்த வீரரின்
பெயர் யாயா டோரே (Yaya toure). ஐவரி
கோஸ்ட் நாட்டை சேர்ந்த இவர் தற்போது மான்செஸ்டர் சிட்டி அணிக்காக ப்ரீமியர்
லீக்கில் விளையாடி வருகின்றார். கடந்த 44 வருடங்களாக எந்தவொரு முக்கிய tournament-டையும் வென்றதில்லை மான்செஸ்டர் சிட்டி. தற்போது யாயா டோரே போன்றவர்களின்
சிறப்பான ஆட்டத்தால் மகுடம் கிடைக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது..
யாயா டோரே - இந்த மனிதர்
கால்பந்தாட்ட ஹீரோக்களில் ஒருவராக பார்க்கப்படுகின்றார். மிகச் சிறந்த மத்தியகள
ஆட்டக்காரரான இவர் பந்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும், நீண்ட
தூரம் லாவகமாக பாஸ் செய்வதிலும்,
போட்டியில் ஆதிக்கம் செலுத்துவதிலும்
கில்லாடி.
ஆப்பிரிக்காவின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட
வீரர் என்று விருதை (African Footballer of the Year) 2011-ஆம் ஆண்டு பெற்ற இவர், தேவைப்பட்டால் முன்னேறிச்சென்று
தாக்குவதிலும் வல்லவர். இதனாலேயே இவருக்கு box-to-box player என்ற செல்லப்பெயரும் உண்டு.
கடந்த மே மாதம் newcastle அணியுடன் நடந்த முக்கிய போட்டியில் தன் அணிக்காக இரண்டு
கோல்களை போட்டு வெற்றி தேடித்தந்தார் டோரே. இதற்காக ஆட்டநாயகனாக தேந்தேடுக்கப்பட்ட
அவருக்கு பெரிய ஷாம்பைன் (champagne)
பாட்டில் பரிசாக கொடுக்கப்பட்டது. இதனை
ஏற்றுக்கொள்ள மறுத்து தன் பக்கத்தில் இருந்த சக வீரரிடம் கொடுத்துவிட்டார் டோரே.
என்ன காரணம்?
இதற்கு அவர் கூறிய காரணம், "நான் குடிப்பதில்லை. ஏனென்றால் நான் ஒரு முஸ்லிம்”.
(I don't drink
because I am a Muslim)"
அல்ஹம்துலில்லாஹ்........!
நன்றி : எதிர்க்குரல்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக