அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

செவ்வாய், 26 ஜூன், 2012

சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி


அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்தமதத்தினர், சீக்கீயர் மற்றும் பார்சி வகுப்பைச்சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2012-13 ஆம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவிகளின் பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு இலட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாணவ, மாணவிகள் இந்த ஆண்டின் இறுதித் தேர்வில் [1 ஆம் வகுப்பு நீங்கலாக] 50 விழுக்காடு மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்று தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் இதர துறைகள், நல வாரியங்கள் மூலம் 2012-13 ம் ஆண்டில் கல்வி உதவித்தொகை பெறுதல் கூடாது. குடும்பத்தில் அதிகபட்சம் 2 பேருக்கு மட்டும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தில் உள்ள மாணவ மாணவியருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


மாணவ, மாணவிகள் புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வித்தொகை விண்ணப்பங்களை தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களில் சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் 15.08.2012 ஆகும். கல்வி நிலையங்கள் மாணவ, மாணவிகளிடம் இருந்து பெற்ற கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை சரிபார்த்து அதற்கான கேட்பு பட்டிலை உரிய வடிவத்தில் பதிவு செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் இந்த கல்வி உதவித்தொகை பெற உரிய காலத்தில் விண்ணப்பித்து பயன் அடையலாம். 

www.minorityaffairs.gov.in
www.tn.gov.in.bcmbcmw/welfschemes_minorities.htm

என்ற இணையதள முகவரியில் படிவங்களையும் மேலதிக தகவல்களையும் பெற்றுக் கொள்ளலாம். 

அரசு மற்றும் அரசு உதவி பெறும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் தகுதியுள்ள சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 11, 12ம் வகுப்பு, வாழ்க்கை தொழிற்கல்வி, ஐடிஐ, ஐடிசி, பாலிடெக்னிக், பட்டயப்படிப்புகள், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள், எம்பில், ஆராய்ச்சி படிப்பு ஆகிய பிரிவுகளில் பயிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்தம், சீக்கியர் மற்றும் பார்சீய மதத்தைச் சார்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2012-13ம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

தகுதி மற்றும் நிபந்தனைகள்: இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவியரின் பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.  மாணவ, மாணவிகள் முந்தைய ஆண்டின் இறுதித் தேர்வில் 50 விழுக்காடு மதிப்பெண்களுக்கு குறையாமல் எடுத்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, இதர அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகள், நலவாரியங்கள் மூலம் 2012-13ம் ஆண்டில் கல்வி உதவித்தொகை பெறுதல் கூடாது. குடும்பத்தில் அதிகபட்சம் இருவருக்கு மட்டும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: மேல்நிலைப்பள்ளி கல்வி பயில்பவரகள்http://www.tn.gov.in/bcmbcmw/welfschemes_minorities.htm என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிமேற்படிப்பு கல்வி உதவித்தொகை புதியது புதுப்பித்தல் விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்து அத்துடன் தேவையான சான்றுகளுடன் கல்வி நிலையத்தில் விண்ணப்பத்தை 31.7.2012க்குள் தவறாது சமர்ப்பிக்க வேண்டும்.

ஐடிஐ, ஐடிசி, என்சிவிடி, பாலிடெக்னிக் பட்டயப்படிப்புகள், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள், எம்பில், ஆராய்ச்சி படிப்பு பயில்பவர்கள் புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களைwww.momascholarship.gov.in  என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை புதியது, புதுப்பித்தல் விண்ணப்பங்களில் உரிய காலங்களில் பூர்த்தி செய்தல் வேண்டும்.  இதை அடுத்து பதிவு செய்த விவரங்களை ஆன்லைன் மூலம் கல்வி நிலையங்களுக்கு தவறாது அனுப்புதல் வேண்டும்.

மேலும், ஆன்லைன் மூலம் பதிவு செய்த விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து அத்துடன் தேவையான சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் விண்ணப்ப படிவத்தை 30.9.2012க்குள் தவறாது சமர்ப்பிக்க வேண்டும்.  அப்போது தான் ஆன்லைன் மூலம் கல்வி நிலையங்களுக்கு அனுப்பிய விவரங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

கல்வி நிலையங்கள் சிறுபான்மை மாணவ, மாணவிகளால் சமர்ப்பிக்கப்பட்ட மேற்படி கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை பரிசீலித்து மேல்நிலை பள்ளிக் கல்வி விண்ணப்பங்களுக்குரிய புதியது மற்றும் புதுப்பித்தல் கேட்புப் பட்டியல்களை 15.8.2012த்திற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த விண்ணப்பங்களில் புதியது மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றிற்குரிய கேட்புப்பட்டியலை 15.10.2012க்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் மேற் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் குறுந்தகட்டுடன்(CD) தவறாது சமர்ப்பிக்க வேண்டும்.

கல்வி உதவித்தொகைகள் மாணவ-மாணவிகளின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிமாற்றம் மூலம் வழங்கப்படுவதால் மாணவ மாணவிகள் வங்கி கணக்கு எண் (core bank service account number) மற்றும் வங்கி கிளை குறியீடு 11 இலக்க code எண்களை தவறாது விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். சிறுபான்மையின மாணவ, மாணவிகள் மேற்படி கல்வி உதவித்தொகை பெற உரிய காலத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவிக்ப்பட்டுள்ளது.


நன்றி : mpmpages

0 கருத்துகள்:

கருத்துரையிடுக