பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
இஸ்லாமிய மார்க்கம் அது கடவுளுடைய மார்க்கம் என்று சொல்கிறோம் இஸ்லாம் கடவுளுடைய மார்க்கம் என்பதற்கு நிறைய சான்றுகள் இருக்கிறது.
இஸ்லாம் விதித்திருக்கிற ஒவ்வொரு கடமையான வணக்கங்கள் கடமையில்லாத வணக்கங்கள் இவற்றில் கூட இஸ்லாம் கடவுளுடைய மார்க்கம் என்பதற்கு சான்றுகள் இருக்கிறது.
முஸ்ம்கள் கடைபிடிக்க கூடிய நோன்பு கூட இஸ்லாம் கடவுளுடைய மார்க்கம் என்பதற்கு நிறைய சான்றுகள் இருக்கிறது.இஸ்லாம் இந்த இஸ்லாமிய சமுதாயத்திற்கு தொழுகை நோன்பு ஹஜ் போன்ற கடமைகளை விதித்திருக்கிறது விதித்தது மட்டுமில்லாமல் இந்த சமுதாயத்தினுடைய பலவீனம் அவர்களுடைய உணர்வு போன்றவற்றை அறிந்து இந்த சமுதாயம் பின்பற்ற தகுந்தார்போல் மிக எளிமையாக விதித்திருக்கிறது.
எளிமையான சட்டங்களை மனித சமுதாயம் அப்படியே பின்பற்றக்கூடிய சட்டத்தை விதித்ததின் காரணமாகத்தான் இஸ்லாம் கடவுளுடைய மார்க்கம் என்று சொல்கிறோம்.
இஸ்லாம் நோன்பு எனும் கடமையை எல்லோருக்கும் விதித்தாலும் சிலருக்கு விதிவிலக்கு அளித்திருக்கிறது.
தள்ளாத வயதினர்.
இவர்கள் நிரந்தரமான விதிவிலக்கு பெற்றவர்கள் முதுமையின் காரணமாக நோன்பு நோற்க இயலாத நிலையில் உள்ளதால் எதிர்காலத்தில் நோன்பை களாச் செய்ய இவர்களால் இயலாது ஏனெனில் எதிர்காலத்திலும் மேலும் அதிகம் முதுமையில் இருப்பார்கள்.இதை கவனித்து இவர்கள் நோன்பை
விட்டு விடும்படி இஸ்லாம் சலுகையளிக்கிறது.
நோன்பு நோற்க சக்தி பெற்ற வர்கள் ஒரு ஏழைக்கு உணவளிப்பது அவசியம் என்ற (2:184) வது வசனம் முழுமையாக மாற்றப்பட வில்லை நோன்பு நோற்க சக்தியற்ற கிழவர்கள் மற்றும் கிழவிகள் ஒரு நாள் நோன்புக்கு பதிலாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளனர் நூல்: புகாரி
இஸ்லாம் மனிதர்களின் பலவீனத்தை கருத்தில் கொண்டு எவ்வளவு மிக எளிமையான கடமைகளை விதித்திருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று.
நோயாளிகள்.
நோய்களை பொருத்த வரையில் இரண்டு நோய்கள் இருக்கின்றன ஒன்று தீரக்கூடிய நோய் மற்றோன்று தீராத நோய் தீரக்கூடிய நோயாக இருந்தால் இவர்கள் அந்நாளில் நோன்பை விட்டு விட்டு வேறொரு நாளில் அதை கடைபிடிக்க வேண்டும்.
தீராத நோயாக இருந்தால் அவர்கள் எப்போதும் நோன்பு நோற்க இயலாது இவர்கள் இதற்காக ஏழைக்கு உணவளிக்கும் படி எந்த ஆதாரமும் இல்லை ஆனாலும் பேனுதல் அடிப்படையில் இவர்கள் ஏழைக்கு உணவளிக்கலாம்.
இப்படி தீராத நோய் உள்ளவர்களுக்கும் இஸ்லாம் நோன்பு நோற்பதிருந்து விதிவிலக்கு அளிதிருக்கிறது.
உங்களில் யாரேனும் பயணத்திலோ அல்லது நோயாளியாகவோ இருந்தால் வேறு நாட்களில் அதை நோற்கட்டும் (2:184)
என்று இறை வசனம் கூறுகிறது.
இஸ்லாம் மிக எளிமையான மார்க்கம் என்பதற்கு இது ஒரு சான்று.
பயணிகள்.
பயணிகளுக்கும் இஸ்லாம் சலுகை வழங்ஙகியிருக்கிறது
உங்களில் யாரேனும் பயனத்திலோ அல்லது நோயாளியாகவோ இருந்தால் வேறு நாட்களில் அதை நோற்கட்டும் 2:184
என்று இறை வசனம் கூறுகிறது.
ஒரு பயணி நோன்பு இல்லாத காலகட்டத்தில் பிராயானம் செய்தால் அவர்களுக்கு பயணத்தின் இடையில் பல்வேறு கஷ்டங்கள் இருப்பதை நாம் பார்க்கமுடிகிறது சில பயனிகளுக்கு அதிகமான வாந்தி மயக்கம் கிரக்கம் ஏற்படுவதையும் சிலருக்கு தாகம் ஏற்படுவதையும் சிலருக்கு உடல் சேர்வு ஏற்படுதையும் பார்க்கிறோம் இந்த பலவீனம் மனிதர்களிடத்தில் இருக்கிறது என்பதை அறிந்துததான் இஸ்லாம் இவர்களுக்கு நோன்பு நோற்பதிருந்து விதிவிலக்கு அறித்திருக்கிறது.
பயணிகள் நோயாளிகள் நோன்பு நோற்க வேண்டிய அவசியமில்லை என்று கூறிவிட்டு அல்லாஹ் உங்களுக்கு லேசாக்காத்தான் விரும்புகிறான் என்று சொல்கிறான்.

மாத விடாய் ஏற்பட்ட பெண்கள்.
மாத விடாய் காலகட்டத்தில் பெண்கள் நோன்பை விட்டு விட இஸ்லாம் அனுமதியளித்திருக்கிறது ஏனென்று சொன்னால் அது பெண்களுக்கு ஏற்படும் ஒரு தொல்லையாகும் இதை திருக்குர்ஆனே குறிப்பிட்டு காட்டுகிறது.
மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். ”அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! அல்லாஹ் திருந்திக் கொள்வோரை விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்” எனக் கூறுவீராக! அல்குர்ஆன் (2:222)
எனவே இதை அறிந்துதான் தொழுகை நோன்பு கடமைகளை அவர்களுக்கு விதியாக்க வில்லை ஆனாலும் இவர்கள் விட்ட நோன்பை களாச் செய்யும் படி கட்டளையிடப்பட்டுள்ளார்கள்.
நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டு தூய்மை அடைவோம் அப்போது விடுபட்டு இருந்த நோன்பை களாச் செய்யுமாறு எங்களுக்கு கட்டளையிடுவர்கள் விடுபட்ட தொழுகைகளை செய்யுமாறு கட்டளையிடமாட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (321) முஸ்லிம் (506)
மாத விடாய் கால கட்டத்தில் நோன்பை விடச்சொன்னது ஒரு கருனை இரண்டாவது நோன்பை மட்டும் களாச் செய்ய கட்டளையிட்டு தொழுகைக்கு இந்த கட்டளையிடவில்லை காரணம் நோன்பை பொருத்த வரையில் இரண்டு அல்லது மூன்று நோன்புகள்தான் தவறிஇருக்கும் ஆனால் தொழுகையை பொருத்த வரையில் ஒரு நாளைக்கு ஐந்து நேரத்தெழுகைகள் இப்படியோ மூன்று நான்கு நாட்கள் தொழுகை தவறி இருக்கும் இந்த அனைத்தையும் எடுத்து மீண்டும் தொழ வேண்டும் என்பது மிகச்சிறமமான காரியமாகும் குறிப்பாக அதிகம் வேலையுள்ள பொருப்புள்ள தாய்மார்கள் இதை எடுத்து செய்வது மிகச்சிரமமாகும் இதனால்தான் விடுபட்ட தொழுகைபயை கூட தொழவேண்டியதில்லை என்று இஸ்லாம் அனுமதியளித்திருக்கிறது.

நன்றி : கடையநல்லூர் அக்ஸா
தொடரும் இன்ஷாஅல்லாஹ்.....
0 கருத்துகள்:
கருத்துரையிடுக