அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

செவ்வாய், 13 டிசம்பர், 2011

புற்றுநோய் முன் கண்டறியும் சோதனை திட்டம்: மத்திய அரசு அறிவிப்பு

புற்றுநோய், நீரிழிவு நோய், வாத நோய் ஆகியவற்றை முன் கண்டறிந்து சிகிச்சையளிக்கும் முன்னோடித் திட்டம் நாட்டின் 100 மாவட்டங்களில் செயல்பட தொடங்கியுள்ளதாக மத்திய குடும்ப நலம் மற்றும் மக்கள் நலத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

மாநிலங்களவையில் இன்று எழுப்பப்பட்ட வினா ஒன்றிற்கு பதிலளித்த அமைச்சர் குலாம் நபி ஆசாத், அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் உள்ள அனைவருக்கும் இந்த சோதனை நடத்தி முடிக்கப்பட்டிருக்கும் என்றும், இப்படிப்பட்ட ஒரு மருத்துவத் திட்டத்தை நிறைவேற்றிய முதல் நாடாக இந்தியா இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

முன்னோடித் திட்டமாக தற்போது செயல்படத் தொடங்கியிருக்கும் இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு ரூ.1 இலட்சம் செலவில் கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் 27 இலட்சம் பேருக்கு புற்று நோய் உள்ளது என்றும் ஒவ்வொரு ஆண்டும் 11 இலட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்படுவது கண்டு பிடிக்கப்படுகிறது என்றும் கூறிய அமைச்சர் குலாம் நபி ஆசாத், இந்த புள்ளி விவரம் நம்பகத்தன்மை வாய்ந்ததல்ல என்றும் கூறியுள்ளார்.

நன்றி: webdunia

0 கருத்துகள்:

கருத்துரையிடுக