2012ம் காலாண்டில் கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பத்துறைகளில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று ஆய்வு தெரிவிக்கிறது. வேலை வாய்ப்புகளை பெற்றுத் தரும் இணையதள நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வின் முடிவில் இத்தகவல் வெளியாகியுள்ளது.வேலை வாய்ப்பு பெறுவதில் 29 விழுக்காடு அளவிற்கு ஜனவரி முதல் மார்ச் வரை கணிசமான உயர்வு ஏற்படும். இந்த உயர்வு அடுத்தடுத்த காலாண்டுகளில் 11 விழுக்காடு அளவிற்கு தொடரும் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் வேலை வாய்ப்புச் சந்தையில், ஒருவர் பல்வேறு பணி வாய்ப்புகளைப் பெற்று அதில் சிறந்ததை தேர்வு செய்யும் வகையில் புதிதா நிறுவனங்களும், மிகப் பெரிய நிறுவனங்களில் பல புதிய பதவிகளும் உருவாக உள்ளன.வரும் 2012ம் ஆண்டில் தங்கள் நிறுவனத்திற்கு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பணியாளர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளன. இதில் கட்டமைப்பு நிறுவனங்கள் முன்னிலையில் உள்ளன. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களது ஊழியர்களின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டுள்ளன என்று ஆய்வு தெரிவிக்கிறது.2012ம் ஆண்டு இளைஞர்களுக்கு ஒரு பொற்காலமாக இருக்கும் என்று இந்த ஆய்வின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது

நன்றி: தாளம்நியூஸ்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக