அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

சனி, 17 டிசம்பர், 2011

சென்னை பாஸ்போர்ட் சேவை மையத்தில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய வசதி

வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் பாஸ்போர்ட்டுக்கு நேரடியாக விண்ணப்பிக்கும் வகையில் சென்னை பாஸ்போர்ட் சேவை மையத்தில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு

             முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் பாஸ்போர்ட் அலுவலகத்தில் நேரடியாக பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வகையில் சென்னை சாலிகிராமம் பானுமதி ராமகிருஷ்ணா சாலையில் இயங்கி வரும் பாஸ்போர்ட் சேவை மையத்தில் புதிய வசதி செய்யப்பட்டு உள்ளது. இங்கு பாஸ்போர்ட் தொடர்பான அனைத்து சேவைகளையும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெற முடியும்.

            பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள்  இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்து, விண்ணப்ப எண்ணை பெற்று அசல் சான்றிதழ்களுடன் சாலிகிராமம் பாஸ்போர்ட் சேவை மையத்தை அணுகலாம். இந்த புதிய சேவை இங்கு மட்டுமே செய்யப்பட்டு உள்ளது. அலுவலக வேலைநாட்களில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

           இதேபோல், அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட்டுக்கு நேரடியாக விண்ணப்பிப்பதற்காக சிறப்பு வசதி ஏற்கனவே தாம்பரம் பாஸ்போர்ட் சேவை மையத்தில் ஏற்படுத்தப்பளட்டு உள்ளது. எனவே, அரசு ஊழியர்கள் தங்கள் வாழ்க்கை துணை, 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆகியோருக்கு பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். புதுப்பிக்கவும், தாம்பரம் துரைசாமி ரெட்டி சாலையில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் முன்பதிவு எதுவும் இல்லாமல் நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம்.


            பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வருவோர் காவல்துறை சான்று (பி.சி.சி.), இ.சி.என்.ஆர். மனைவி அல்லது கணவன் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம், திருமணத்திற்குப் பிறகு பெயர் சேர்ப்பு, கூடுதல் பக்கங்கள் இணைப்பு, 3 வயதுக்கு குறைவானவர்களுக்கு பாஸ்போர்ட்டு (பெற்றோர் முறையான இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும்) ஆகிய சேவைகளுக்கு நேரடியாக அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
நன்றி :  cuddalore-news

0 கருத்துகள்:

கருத்துரையிடுக