அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

புதன், 30 மார்ச், 2011

தொழுகை முறை (விளக்கப்படங்களுடன்): பாகம் - 2

ருகூவுக்குப் பின்னர் கைகளைக் கட்டலாமா?

சிலர் ருகூவுக்குப் பின்னர் எழுந்தவுடன் மீண்டும் கைகளைக் கட்டிக் கொண்டு பின்னர் ஸஜ்தாச் செய்கின்றனர். இது நபி வழிக்கு மாற்றமானதாகும்.கைகளை நேராக தொங்க விடுவதே சரியான முறையாகும்.



(தவறான முறை)



ஸஜ்தா செய்தல்

கைகளை முத­லில் வைக்க வேண்டும்.

ரப்பனா லக்கல் ஹம்து என்று கூறிய பின்னர் அல்லாஹு அக்பர் என்று
கூறி ஸஜ்தாச் செய்ய வேண்டும். ஸஜ்தாவிற்குச் செல்லும் போது
முதலி­ல் இரு உள்ளங்கைகளையும் தரையில் வைத்த பின்னர் தமது மூட்டுக்களை வைக்க வேண்டும்.

''உங்களில் ஒருவர் ஸஜ்தாச் செய்யும் போது தனது மூட்டுக் கால்களை வைப்பதற்கு முன் தனது கைகளை வைக்கட்டும். ஒட்டகம் அமர்வது போல் அமர வேண்டாம்.'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.    அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி­), நூல்: நஸயீ (1079)






ஸஜ்தாச் செய்யும் போது நெற்றி,மூக்கு,இரு உள்ளங்கைகள்,இரு மூட்டுக்கள், இரு பாதங்களின் நுனி விரல்கள் ஆகியவை தரையில் படுமாறு வைக்க வேண்டும்.

கால் விரல்களை வளைத்து கிப்லாத் திசையை முன்னோக்கும் விதமாக வைக்க வேண்டும். இரண்டு கால்களையும் சேர்த்து வைக்க வேண்டும்.

ஆடையோ, முடியோ தரையில் படாதவாறு தடுக்கக் கூடாது. மேலும் ஸஜ்தாவில் இரு கைகளையும் காதுகளுக்கு நேராகவோ அல்லது தோள் புஜங்களுக்கு நேராகவோ வைக்க வேண்டும். இரு கைகளைத் தொடையில் படாமலும் முழங்கை தரையில் படாமலும் உயர்த்தி வைக்க வேண்டும். மேலும் தொடையும் வயிறும் சேராமல் இருக்குமாறு வைக்க வேண்டும்.







தொடைகளை வயிறுடன் ஒட்டாமல் அகற்றி வைக்க வேண்டும். நாய் அமர்வது போன்று முன்கைகளைத் தரையில் பரப்பி வைக்கக் கூடாது.



                                                            (இரண்டுமே தவறான முறை)
ஸஜ்தாவில் ஓத வேண்டியவை

ஸஜ்தாவில் பின் வரும் துஆக்களில் அனைத்தையுமோ அல்லது ஒன்றையோ ஓதிக் கொள்ளலாம். குர்ஆன் வசனங்களை ஓதக் கூடாது.

சுப்ஹான ரப்பியல் அஃலா (மகத்துவமிக்க என் இறைவன் பரிசுத்தமானவன்) மூன்று தடவை கூற வேண்டும்.

ஸுப்ஹானக்கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக்க அல்லாஹும்மக்ஃபிர்லி­ (இறைவா! நீ தூயவன்; எங்கள் இறைவா உன்னைப் புகழ்கிறேன்; என்னை மன்னித்து விடு)

ஸுப்பூஹுன் குத்தூஸுன் வரப்புல் மலாயிகதி வர்ரூஹ் (வானவர்களுக்கும், ரூஹ்-ஜிப்ரீலுக்கும் இறைவன் பரிசுத்தமானவன், தூய்மையானவன்)

ஸஜ்தாவில் ஓதும் துஆக்களை மூன்று முறை தான் ஓத வேண்டும் என்பதில்லை. நாம் விரும்பி அளவு கூடுதலாக எவ்வளவு முறையும் ஓதிக் கொள்ளலாம்.

ஒருவர் ஸஜ்தாவில் இருக்கும் போது தான் விரும்பிய துஆவை தாய்மொழியிலேயே கேட்கலாம்.

ஸஜ்தாவில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள்! உங்கள் பிரார்த்தனை ஏற்கப்பட அது மிகவும் தகுதியானதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி­), நூல் : முஸ்லி­ம் (824)

இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடையில்

முதல் ஸஜ்தாச் செய்த பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறி எழுந்து அமர வேண்டும். அதில் ''ரப்பிக் ஃபிர்லீ ரப்பிக் ஃபிர்லீ'' என்ற துஆவை ஓத வேண்டும்.

இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையே அமரும் முறை





இந்த துஆவை ஓதி முடித்த பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறி மீண்டும் ஸஜ்தாச் செய்ய வேண்டும். முதல் ஸஜ்தாவில் செய்தவாறு அனைத்தையும் இரண்டாம் ஸஜ்தாவிலும் கடைப்பிடிக்க வேண்டும்.

இரண்டாம் ரக்அத்
முதல் ரக்அத்தை முடித்த பின்னர் மீண்டும் இரண்டாம் ரக்அத்திற்காக எழ வேண்டும். எழும் போது இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையில் அமர்ந்ததைப் போல் அமர்ந்து இரு கைகளையும் தரையில் ஊன்றி நிலைக்கு எழ வேண்டும். பின்னர் கைகளை நெஞ்சில் கட்டிக் கொள்ள வேண்டும். ஸஜ்தாவி­ருந்து எழும் போது இரு கைகளையும் மாவு குழைப்பதைப் போல் மடக்கி தரையில் ஊன்றி எழுவது கூடாது.

கைகளை தரையில் ஊன்றி எழும் முறை


                                        (சரியான முறை)                                            (தவறான முறை)


இரண்டாம் ரக்அத்தில் முதல் ரக்அத்தில் ஓதியதைப் போலவே அனைத்தையும் ஓத வேண்டும். எனினும் முதல் ரக்அத்தில் சூரத்துல் பாத்திஹாவிற்கு முன் ஓதிய ஆரம்ப துஆக்கள் இரண்டாம் ரக்அத்தில் கிடையாது.

இரண்டாம் ரத்அத்தில் முதலாவதாக சூரத்துல் பாத்திஹாவை ஓத வேண்டும். அத்துடன் துணை சூராவையும் ஓத வேண்டும்.

பின்னர் முதல் ரக்அத்தில் செய்ததைப் போன்றே ருகூவு, ஸஜ்தாக்கள் செய்ய வேண்டும். அதில் ஓதவேண்டிய துஆக்களையும் ஓத வேண்டும்.

அத்தஹிய்யாத் இருப்பு

இரண்டாவது ரக்அத்தில் இரண்டாம் ஸஜ்தாவை முடித்தவுடன் இருப்பில் அமரும் போது அதற்குத் தனியான முறை இருக்கிறது.

கடைசி இருப்பாக இருந்தால் ஒரு விதமாகவும், இருப்பிற்குப் பிறகு தொழுகை தொடர்ந்தால் வேறு விதமாகவும் அமர வேண்டும்.

மூன்று, நான்கு ரக்அத் தொழுகைகளின் போது முதலாம் இருப்பில் இடது கால் மீது அமர்ந்து வலது காலை நாட்டி வைத்து அதன் விரல்களை கஅபாவை நோக்கி மடக்கி வைக்க வேண்டும். பார்க்க படம்




கடைசி இருப்பில் மண்டியிட்டுத் தரையில் இருப்பிடம் படியுமாறு அமர்ந்து இடது காலை, வலது காலுக்குக் கீழ் வெளிப்படுத்தி வலது காலை நாட்டி அதன் விரல்களை கஅபாவை நோக்கி வைக்க வேண்டும். பார்க்க படம்
                                  


                                    (சரியான முறை)                        (தவறான முறை) (தவறான முறை)

இருப்பின் போது அமரும் முறைகள்

இருப்பின் போது வலது கையை வலது தொடையின் மீது வைக்க வேண்டும். இடது கையை இடது தொடை மற்றும் மூட்டின் மீதும் இருக்குமாறு வைத்து முழங்கையை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

வலது கையை வலது தொடையின் மீதும் இடது கையை இடது தொடையின் மீதும் வைக்க வேண்டும்.

வலது கையை வலது மூட்டின் மீதும், இடது கையை இடது மூட்டின் மீதும் வைக்க வேண்டும்.


விரலசைத்தல்

ஆட்காட்டி விரலைத் தவிர மற்ற எல்லா விரல்களையும் மடக்கி ஆட்காட்டி விரலை மட்டும் நீட்டி அசைத்துக் கொண்டு இருக்க வேண்டும். அப்போது, பார்வை ஆட்காட்டி விரலையே நோக்கி இருக்க வேண்டும்.

அத்தஹிய்யாத் துஆ

''அத்தஹிய்யா(த்)து ­லில்லாஹி வஸ்ஸலவா(த்)து வத்தய்யிபா(த்)து அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு வரஹ்ம(த்)துல்லாஹி வபரகாதுஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸா­ஹீன் அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு

அல்லாஹும்ம ஸல்­ அலா முஹம்மதின் வஅலா ஆ­லி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி­ இப்ராஹீம இன்னக ஹமீது(ன்)ம் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆ­லி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி ­ இப்ராஹீம இன்னக ஹமீது(ன்)ம் மஜீத்.

''அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் அதாபி ஜஹன்னம் வமின் அதாபில் கப்ரீ வமின் ஃபித்னதில் மஹ்யா வல் மமாத், வமின் ஷர்ரி பித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால்.

''அல்லாஹும்ம இன்னீ ளலம்து நஃப்ஸீ ளுல்மன் கஸீரன் வலா யக்ஃபிருத் துனூப இல்லா அன்த ஃபக்ஃபிர்லீ மக்ஃபிர(த்)தன் மின் இந்திக வர்ஹம்னீ இன்னக அன்தல் கஃபூருர் ரஹீம்''

மூன்றாம் ரக்அத்

இரண்டாம் ரக்அத் முடித்து மூன்றாம் ரக்அத்திற்கு எழும் போது அல்லாஹு அக்பர் என்று கூறி, எழுந்து இரு கைகளையும் காது வரை அல்லது தோள்புஜம் வரை உயர்த்திக் கைகளை நெஞ்சில் கட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் சூரத்துல் பாத்திஹா மட்டும் ஓதினால் போதுமானது. விரும்பியவர் வேறு துணை சூராக்களை ஓதிக்கொள்ளலாம்.

நான்காம் ரக்அத்

மூன்றாம் ரக்அத் முடித்த பின்னர் நான்காம் ரக்அத்திற்காக அல்லாஹு அக்பர் என்று கூறி எழ வேண்டும். மூன்றாம் ரக்அத்தில் கைகளை உயர்த்தியதைப் போல் நான்காம் ரக்அத்துக்கு எழும் போது கைகளை உயர்த்தாமல் நெஞ்சில் கட்டிக் கொள்ள வேண்டும். மற்றவை மூன்றாம் ரக்அத்தில் செய்ததைப் போன்றே செய்ய வேண்டும்.

நான்காம் ரக்அத்தில் இரண்டு ஸஜ்தாக்கள் செய்த பின்னர் இருப்பில் அமர வேண்டும்.

இருப்பில் அமரும் போது மண்டியிட்டுத் தரையில் இருப்பிடம் படியுமாறு அமர்ந்து இடது காலை வலது காலுக்குக் கீழ் வெளிப்படுத்தி வலது காலை நாட்டி வைக்க வேண்டும். இதை முன்னரே விளக்கியுள்ளோம்

அத்தஹிய்யாத் ஓதிய பின்னரோ அல்லது மேற்கூறிய துஆக்கள் ஓதி முடித்த பின்னரோ நமக்கு ஏற்படும் தேவைகளை நமது தாய் மொழியிலேயே கேட்டு துஆச் செய்யலாம்.

ஸலாம் கூறி முடித்தல்

பிரார்த்தனை ஓதி முடித்த பின்னர் தொழுகையின் இறுதியாக அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று வலது புறமும், இடது புறமும் கூற வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் தமது வலது பக்கமும், இடது பக்கமும் ஸலாம் கூறும் போது அவர்களின் வெண்மையை நான் பார்க்கும் அளவுக்குத் திரும்பியதைக் கண்டேன். அறிவிப்பவர்: ஸஅது (ரலி­), நூல்: முஸ்லி­ம்

நிதானமாகச் செய்தல்
தொழுகையில் மேற்கூறிய காரியங்கள் அனைத்தையும் நிதானமாகச் செய்ய வேண்டும். அவசரம் காட்டக் கூடாது. அவ்வாறு தொழும் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது

நன்றி : அப்துந் நாஸர், கடையநல்லூர்
                                                                  
நன்றி : துபைTNTJ

0 கருத்துகள்:

கருத்துரையிடுக