அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

திங்கள், 21 மார்ச், 2011

ஒரே மரத்தில் 315 வகை மாம்பழங்கள்

ஒரு மரத்தை, “பரிசோதனை சாலை’ என கூற முடியுமா? ஆனால், இப்படியொரு மரம் இருக்கத்தான் செய்கிறது. எங்கே? லக்னோ விலிருந்து, 35 கி.மீ., தொலைவிலுள்ள கலிமுல்லா கான் நர்சரி தோப்பில். அங்கு, 14 ஏக்கரில் பெரிய தோப்பு உள்ளது. அதில், ஒரு மாமரம் உள்ளது. அதைத்தான், “பரிசோதனை சாலை’ என அழைக் கின்றனர். இந்த மரம், வருடா வருடம் தன்னை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்கிறது.
இந்த குறிப்பிட்ட மாமரத்துக்கு, இப்போது, 75 வயது. ஆனால், 10 வயது மரம் மாதிரி அத்தனை இளமையாக காட்சியளிக்கிறது. இந்த மரத்தில், ஆராய்ச்சியின் மூலம், 315 வகையான மாம்பழங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உருவாக்கியவர் கலிமுல்லா கான்.
மலிகாபாத் என அழைக் கப்படும் இந்த பகுதிக்கு,மாம்பழ சீசனில்
இங்கிருந்து தினமும், 150 லாரி லோடு மாம்பழம், விற்பனைக்குச் செல்கிறது. ஆனால், கலிமுல்லா கானின், 14 ஏக்கர் மாம் பழங்களும், 15 நாட் களில் விற்றுத் தீர்ந்து விடும்.
இந்த தொழி லில், 17 வயது பைய னாக, 1957ல் நுழைந்தவர் கலிமுல்லாகான். ஏழாம் வகுப்பில் தோல்வி அடைந்ததும், படிப்புக்கு, “குட்- பை’ சொல்லி விட்டு, 150 வருட குடும்பத் தொழி லான மாம்பழ சாகுபடியை ஏற்றார்.
அப்போதே தன்னுடைய மரத்தில், ஏழு வகையான மாம்பழங்களை உருவாக்கி, அசத்தினார். ஆனால், கடும் மழையும், வெள்ளமும் ஏற்பட்டு, அந்த பகுதியே நாசமானது. இதனால், கலங்கிப் போய் ஓடி விடாமல், புதிதாக கடன் வாங்கி, வெள்ளம் பாதிக்காத இடத்தில் புதியதாக நிலம் வாங்கி, மாமரங்களை நட்டார். அங்கு தான், இன்று வரை அவருடைய தோப்பு இருக்கிறது.
மாம்பழம் மூலம் பணம் சேர்ந்ததும், 1987ல் புது முயற்சிகளில் ஈடுபடத் துவங்கினார்.
அடுத்த மூன்று ஆண்டுகளில், தன்னுடைய மாமரம் ஒன்றில், 50க்கும் அதிகமான வகைகளை உருவாக்கினார்.
நான்காவது வருடம், நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு, அதன் எண்ணிக்கை, ஒரே மரத்தில், 250 என உயர்ந்தது; இந்தியாவே வியந்தது.
அதன் மூலம் வருடா வருடம், அந்த மரத்தில் பழங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே வருகிறார். இதில், என்ன சிறப்பு என்றால், ஒரே கிளையில் மூன்று வகையான மாம் பழங்கள் தொங்கி, பார்ப்போரை அசத்தும். அத்தனை வகை மாம் பழங்களையும், தனித்தனியாக கண்டுபிடித்து, அதன் பெயரை சரியாக கூறி விடுவது இவரின் தனிச்சிறப்பு.
ரசாயன மருந்துகள், பூச்சி மருந்துகள் கலப்பு உரங்களை, தன் மரங்களில் பயன்படுத்துவதில்லை. மாறாக வேப்ப எண்ணையை பயன்படுத்துகிறார். “ரசாயன உரங்களை வைப்பது, சொந்த குழந்தையை கொல்வதற்கு சமம்; அதை, ஒரு போதும் நான் செய்ய மாட்டேன்.
“சில வெளிநாடுகள் என்னை, தங்கள் நாட்டிற்கு வந்து, மாம்பழம் பயிரிட அழைக்கின்றன. எனக்கு பணம் பெரிதல்ல; அதனால், அங்கெல்லாம் செல்ல மாட்டேன். அதே சமயம், ஒரு வருத்தம் உள்ளது. எனக்கு தெரிந்தவற்றை என்னுடைய வாரிசுக்கு சொல்லிக் கொடுத்துள்ளேன். ஆனாலும், எனக்கு பிறகு, என்னுடைய ஆராய்ச்சியும், புதைக்கப்பட்டு விடுமோ என பயமாக இருக்கிறது…’ என்கிறார் கலிமுல்லா கான்.
* மாம்பழத்திற்கான இவருடைய தனிப்பட்ட உழைப்பையும், சேவையையும் பாராட்டி, 2008ல் இவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது.
* சில ஆண்டுகளுக்கு முன், அபூர்வமான சுவை கொண்ட ஒரு மாம்பழத்தை உருவாக்கி, அதற்கு சச்சின் (டெண்டுல்கர்) என பெயரிட்டார்.
*இவருடைய தோப்பில், மூன்று ஆயிரம் கொய்யா மரங்கள் உள்ளன. அவற்றிலும், புதுமை களை செய்து, வித்தியாசமான ரகங்களை உருவாக்குகிறார். அந்த வகையில், தற்போது, படு சுவையான ஒரு கொய்யாவை உருவாக்கியுள்ளார். இதற்கு, ஆப்பிள் போன்ற கவர்ச்சி உள்ளது.
* இந்தியாவின் பிரபல நகரங்களில் மாம்பழ கண்காட்சி நடக்கும் போது, இவருக்கு சிறப்பு அழைப்பு வந்துவிடும்.
* இந்த, 315 வகையான வித்தியாசமான மாம்பழங்களை ஒரே மரத்தில், வருடத்தில், 15 நாட்கள் மட்டுமே காண முடியும். மற்றொரு மரத்தில், 150க்கும் அதிகமான வகை மாம்பழங் களை உருவாக்கியுள்ளார்.
இவற்றில் அல்போன்சா, லங்ராஸ், ஹிம்சாகர், பங்கனபள்ளி, நீலம், மல்கோவா என அனைத்து வகைகளும் அடக்கம்.

நன்றி : செந்தில் வயல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக