அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

செவ்வாய், 22 மார்ச், 2011

கிரீன் டீ

தினம் இரண்டு வேளைகள் கிரீன் டீ குடிப்பவர்களுக்கு மறதி நோய் தாக்குவதில்லை என்கிறது லேட்டஸ்ட் ஆராய்ச்சி. புற்றுநோய்க்கு எதிராகப் போராடும் ஆற்றலையும் அது உடலுக்குத் தருகிறதாம். சாதாரண டீ குடிக்கிற போது வெளியாகாத சில ரசாயனங்கள், கிரீன் டீ குடிக்கும் போது வெளியாவதோடு, உடனுக்குடன் உடலால் கிரகித்துக் கொள்ளப்பட்டு, மறதிக்கும், புற்றுநோயை உருவாக்கும் செல்களுக்கும் எதிராகப் போராடச் செய்கிறதாம். அது மட்டுமின்றி, காபி, டீயை தவிர்த்து, பால், சர்க்கரை
சேர்க்காமல் தினமும் நான்கைந்து வேளைகள் கிரீன் டீ குடிப்பவர்களுக்கு முதுமையும் அவ்வளவு சீக்கிரம் அண்டுவதில்லை என்கிறது ஆராய்ச்சி.
குளூகோமா உள்​பட கண் நோய்களை கிரீன் டீயில் உள்ள ஆண்டி ஆக்ஸிடென்ட் என்ற ஒரு சக்தி வாய்ந்த எதிர்ப்பு திறன் குணப்​
படுத்துகிறது என்று கண்​டு​பிடித்துள்ளார்கள்.​சிபு பாங்க் எனபவரும் அவரது சகாக்களும் சேர்ந்து இந்த கிரீன் டீயின் உபயோகத்தைக் கண்டு
பிடித்துள்ளார்கள்.

பயன்படுத்தும் முறை:

கூடுமானவரை பால் சேர்க்காமலே இது உட்கொள்ளப்படுகிறது.வரக்காபி [டீ]என்பதுபோல இது ‘பிளெய்ன் டீ’ யாகபால் இல்லாமல் எடுத்துக் கொள்ளப்படுவதே சிறப்பு.இது ‘டிப் டீ’ எனப்படும் டீ பைகள் அல்லது இலைவடிவத்திலும் கிடைக்கும்.மற்ற டீ போல நேரிடையாக கொதிக்க வைக்கத்தேவையில்லை. அப்படிச் செய்யும்போது கசப்புத் தன்மை
அதிகரிக்கிறது.80-85 டிகிரி வெப்பநிலைக்கு கொதிக்க வைக்கப்பட்ட
நீரில் டீ பையை சுமார் 1-3 நிமிடம் மூழ்க வைத்தாலே
போதும்.இதை சூடாகவோ அல்லது குளிர வைத்தோ அருந்தலாம்.
சுவைக்குத் தேவையானால் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து அருந்தலாம்.
விருப்பமானவர்கள் வாசனைக்கு புதினா இலைகள்,எலுமிச்சை அல்லது இஞ்சி சேர்த்தும் பருகலாம்.ஒருமுறை சாறு இறக்கிய பிறகு வேண்டுமானால் மீண்டும் கொதிநீர் சேர்த்து இரண்டாவது முறையும்
வடிக்கட்டி குடிக்கலாம்.

நினைவில் கொள்ளுங்கள்

கிரீன் டீ குடித்தால் சிலருக்கு (ரத்த அழுத்தம், சர்க்கரை எல்லாம் மிகவும் குறைந்து)மயக்கம் வரலாம்.

நன்றி : ராம்மலர், ஆம்பல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக