நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழி உண்டு. இந்த பழமொழியின் பொருளை நோயின் பாதிப்பினால் தினமும் மருந்து மாத்திரைகளுடன் அவதியுறுபவர்கள் நன்கு உணர்வார்கள்.
மனித உடலானது எண்ணற்ற தசை, தமனி, எலும்பு, நரம்புகளால் பின்னிப் பிணையப்பட்ட ஒரு உருவமாகும். உடலின் செயல்பாடுகள் அனைத்தும் வாத, பித்த, கபம் என்னும் முக்குற்றங்களால் செயல்படுகிறது. இதில் ஏதேனும் ஒன்றின் ஆதிக்கம் அதிகரித்தாலோ, குறைந்தாலோ அது நோயாக மாறிவிடுகிறது. இதற்கு ஆதாரமாக செயல்படுபவை தச வாயுக்கள்தான். இவற்றின் செயல்பாடுகளில் சீற்றம் கண்டால் அவை உடலைப் பாதிக்க ஆரம்பிக்கும்.
பொதுவாக மனிதனுக்கு நோய் ஏற்படக் காரணம் உண்ணும் உணவும், மன பாதிப்பும்தான்.
நம் முன்னோர்கள் நோயின்றி நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்கள் உடலுக்கும், மூளைக்கும் சமமாக போதிய அளவு வேலை கொடுத்தார்கள். ஆனால் இன்று மூளைக்கு மட்டுமே அசுர வேலை கொடுக்கப்படுகிறது. உடல் அசைவின்றி ஒரே இடத்தில் அமர்ந்திருக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இயந்திர மனிதர்கள் போல் மாறிவிட்டனர். உணவைக்கூட மறந்து இயங்குபவர்களுக்கு உடற்பயிற்சி என்ற வார்த்தையே மறந்து போய்விட்டது.
நோய்கள் என்றால் நீரிழிவு, இரத்த அழுத்தம், இதயநோய் என்ற பெரிய நோய்கள் மட்டுமல்ல. நம் வேலையை சற்று ஸ்தம்பிக்கச்செய்து உடலைக் கஷ்டப்படுத்தும் அனைத்துமே நோய்கள்தான்.
அப்படிப்பட்ட நோய்களில் அனேக மக்களை வாட்டிவதைக்கும் நோய்தான் கால் மூட்டுவலி.
இந்த நோய் நடக்க இயலாமல் செய்வதுடன் பயங்கரமான வலியை உண்டாக்கும். சிலருக்கு கால் மூட்டுகளில் வீக்கமும் வலியும் உண்டாகி இதனால் இவர்கள் சிறிது தூரம் கூட நடக்க முடியாமல் செய்துவிடும். மாடிப்படிகளில் ஏற முடியாது.
இதற்கு சிலர் மருந்துமாத்திரைகளை உட் கொண்டும், அறுவை சிகிச்சை செய்துகொண்டும், வருகின்றனர்.
மூட்டுவலி பெரிய நோய்களில் ஒன்றாகவே தற்போதைய காலக்கட்டத்தில் கருதப்படுகிறது.
மூட்டுவலி என்பது மூட்டுத் தேய் மானத்தால் மட்டும் வருவதல்ல. மலச் சிக்கலாலும் கை, கால் மூட்டுகளில் வலி ஏற்பட வாய்ப்புண்டு.
இந்த மூட்டுவலி வயதான ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கும். இது ஆயுர்வேத மருத்துவத்தில் சந்திவாதம் என்று அழைக்கப்படுகிறது.
முழங்காலில் உள்ள இணைப்பிலும், எலும்புகளுக்கிடையிலும் ஒருவித சவ்வு உள்ளது. இதற்கு கார்டிலேஜ் என்று பெயர் இந்த சவ்வுதான் மூட்டுகளின் அசைவிற்கு உதவுகிறது. இந்த சவ்வுகளில் வாய்வு சேர்ந்து அது வாத நீராக மாறி மூட்டு வலியை ஏற்படுத்துகிறது. அதோடு மட்டுமல்லாமல் குடல் அழற்சி, பித்த அதிகரிப்பு, பித்த எரிச்சல், நெஞ்செரிச்சல் இவைகளால் மூட்டு வலி உண்டாகும். பொதுவாக பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் அதிக ஓய்வில்லாமல் வேலை செய்வதாலும், மாடிப்படிகளில் ஏறி இறங்குவதாலும் கூட மூட்டுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். மாதவிலக்கான பெண்களை பழங்காலத்தில் ஓரிடத்தில் அமரச் செய்து ஓய்வு கொடுத்ததன் அர்த்தம் தற்போது புரிகிறது.
தற்போதைய காலகட்டத்தில் சந்தர்ப்ப சூழ்நிலை, வேலைப்பளு, ஓய்வில்லாமல் உழைக்கும் பெண்களுக்கு அதிகம் மூட்டுவலி வருவதை நாம் காணமுடிகிறது.
கால் மூட்டுவலிக்கான அறிகுறிகள்.
காலையில் எழுந்தவுடன் தலைவைலி, தலைச்சுற்றல், மயக்கம், வாந்தி போன்றவை உண்டாகும். மலம் சீராக வெளியேறாமல் மலச்சிக்கல் ஏற்படும். உண்ட உணவு செரிமானம் ஆகாமல் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு வாயுத்தொல்லைகள் உண்டாகும். இதனால் பசியின்மை, நெஞ்சு எரிச்சல் உண்டாகும்.
கால் மூட்டுகளில் வீக்கம் உண்டாகி வலியை ஏற்படுத்தும். கால் நடுக்கம் ஏற்படும். சிறிது தூரம் நடந்தாலே மூட்டுகளில் வலி உண்டாகும். நாளடைவில் கால்களை மடக்கி உட்கார்ந்து எழுந்திருக்க முடியாமல் செய்துவிடும். மேலும் தோள்பட்டை வலி, முதுகுவலி, கழுத்து வலியும் ஏற்படும்.
மூட்டுவலி ஏற்படக் காரணம்
நேரத்திற்கு உணவு அருந்தாமை யாலும், நேரம் கழித்து உணவு அருந்துவதாலும் ஒரே நேரத்தில் அதிக உணவு உட்கொள்வதாலும் நீண்ட பட்டினி இருப்பதாலும், அஜீரணக் கோளாறு உண்டாகிறது. இதுபோல் இரவில் அதிக காரம், புளித்த தயிர் போன்றவற்றை சேர்த்துக் கொள்வதாலும், குடலில் உள்ள அபானவாயு சீற்றம் கொள்கிறது. பொதுவாக அபான வாயு கீழ்நோக்கி பாயும் குணம் கொண்டதாகும். ஆனால் அது சீற்றம் கொள்ளும்போது மேல்நோக்கி பாய்ந்து சிரசை அடைகிறது. அங்கிருந்து பின்கழுத்து வழியாக கீழ் இறங்கி உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் வேகமாகச் செல்கிறது. அப்போது கால் மூட்டுகளிலும், தசை நார்களிலும் செல்லும் வாய்வு அங்கேயே தங்கிவிடுகிறது. இந்த வாய்வு நீராக மாறி நரம்புகளை உலரவைத்து நீர் கோர்க்கச் செய்கிறது. இவ்வாறு சேரும் நீரானது, வாத நீர், பித்தநீர் இரண்டுடன் கலந்து மூட்டுகளில் சளியாக மாறி மூட்டுகளை வீங்கச் செய்கிறது. இதனால் வாத, பித்த, கப உடற்கூறுகளுக்கு ஏற்ப உலர்ந்தும், இறுகியும் தாங்க முடியாத வலியை உண்டு பண்ணி நடக்க இயலாமல் செய்யும்.
மூட்டுவலி ஏற்படாமல் தடுக்க
· நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும்.
· எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உண்பது நல்லது.
· குறிப்பாக இரவு வேளைகளில் நாம் உட்கொள்ளும் உணவு மென்மையானதாகவும், எளிதில் செரிமானமாகக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
· அரைவயிறு உணவே இரவில் நல்லது.
· நீண்ட பட்டினி, அதிகமான டீ, காபி, மது, புகை, போதை வஸ்துக்கள் இவைகளால் குடல் அலர்ஜி ஏற்பட்டு வாயு சீற்றமாகி அதுவே கால் மூட்டுவலியை உண்டாக்கும். இதனால் இவற்றை தவிர்ப்பது நல்லது.
· மலச்சிக்கலும் மனச்சிக்கலும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. மலச் சிக்கலைத் தவிர்ப்பது நல்லது.
· அதிக உஷ்ணத்தையும், வாயுவையும் கொடுக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். எண்ணெய் பதார்த்தங்களை சாப்பிடக்கூடாது.
· அதிக புளிப்பு காரங்களைத் தவிர்ப்பது நல்லது.
கீரைகள், பழங்கள், காய் கறிகள், மூலிகை சூப் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தினமும் 1/2 மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்வது நல்லது. கை, கால்களை நன்கு வீசி நடக்க வேண்டும். குறிப்பாக கணினி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள் கட்டாயம் நடைப்பயிற்சி செய்யவேண்டும்.
கால் மூட்டுவலிக்கு அறுவை சிகிச்சை முறையில் முழு நிவாரணம் கிடைப்பது அரிது. ஆனால், இந்திய மருத்துவ முறைகளில் பூரண குணமடைய மருந்துகள் உள்ளன.
உணவுப் பழக்கமும், உடற்பயிற்சியும் சீராக இருந்தால் நோயில்லா வாழ்க்கை வாழலாம்.
நன்றி : செந்தில்வயல்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக