அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

புதன், 15 மே, 2013

BSNL நிறுவனத்தில் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் வேலை!

தமிழ்நாட்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் டெலிக்காம் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணியில் சேர விரும்பும் டிப்ளமோ படித்த மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

பாரத் சஞ்சார் நிகம் லிமிட்டெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தின் தமிழ்நாடு வட்டத்தில் டெலிகாம் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் (TTA) பணியிடங்களை நிரப்ப வருகிற ஜூன் 30-ஆம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது. குன்னூர், கோவை, கடலூர், தர்மபுரி, ஈரோடு, காரைக்குடி, கும்பகோணம், மதுரை, நாகர்கோவில், புதுச்சேரி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி, தூத்துக்குடி, வேலூர், விருதுநகர் ஆகிய இடங்களில் உள்ள செகண்டரி சுவிட்சிங் ஏரியா பிரிவில் காலியாக உள்ள டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணியிடங்களை நிரப்ப இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

டெலிகம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், ரேடியோ என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி, இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் டெக்னாலஜி ஆகிய பாடப் பிரிவுகளில் டிப்ளமோ படித்த மாணவர்கள் இந்தப் பணிகளில் சேர விண்ணப்பிக்கலாம். எம்எஸ்சி எலெக்ட்ரானிக்ஸ் படித்தவர்களும் இந்தப் பணியில் சேர அனுமதிக்கப்படுவார்கள்.

வயது வரம்பு இந்த ஆண்டு ஜூலை 13-ஆம் தேதியன்று, 18-வயதிலிருந்து 27 வயதுக்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு வயது வரம்பில் ஐந்து ஆண்டுகளும் ஓபிசி பிரிவினருக்கு வயது வரம்பில் மூன்று ஆண்டுகளும் விலக்கு அளிக்கப்படும். பிஎஸ்என்எல் ஊழியர்களாக இருப்பவர்கள், பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தால் 40 வயது வரை இருக்கலாம். ஓபிசி பிரிவைச் சேர்ந்த பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு 43 வயது என்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு 45 வயது என்றும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

மூன்று மணி நேரம் நடைபெற உள்ள இப்போட்டித் தேர்வில் ஜெனரல் எபிலிட்டி, பேசிக் என்ஜினீயரிங், சிறப்புப் பாடம் ஆகிய பாடப்பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். ஜெனரல் எபிலிட்டி டெஸ்ட்டுக்கு 20 மதிப்பெண்களும் பேசிக் என்ஜினீயரிங் மற்றும்  சிறப்புப் பாடங்களுக்கு தலா 90 மதிப்பெண்களும் இருக்கும். கேள்விகள் அப்ஜெக்ட்டிவ் முறையில் இருக்கும். தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. போட்டித் தேர்வைத் தொடர்ந்து மருத்துவ சோதனை இருக்கும். தேர்வு செய்யப்படுபவர்கள், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணியில் இருக்க வேண்டும். இதற்கான உத்தரவாதப் பத்திரம் எழுதித் தர வேண்டும். மத்திய, மாநில அரசுப் பணிகளிலோ அல்லது பொதுப்பணித் துறை நிறுவனங்களிலோ பணிகளில் இருப்பவர்கள், துறை அதிகாரிகளின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். எந்த செகண்டரி ஸ்விட்ச்சிங் ஏரியாவுக்கு (எஸ்எஸ்ஏ) விண்ணப்பிக்கிறீர்களோ, அந்தத் தேர்வு மையத்தில்தான் தேர்வு எழுத வேண்டியதிருக்கும். தேர்வு மையத்தை மாற்ற அனுமதிக்கப்படமாட்டாது.

வேலைவாய்ப்புப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் டெலிகாம் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணியில் சேரத் தகுதியுடையவர்களைத் தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு எழுத விரும்புபவர்கள், தேர்வுக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை.மாதிரி விண்ணப்பப் படிவம், விண்ணப்பிக்கும் முறைகள் உள்ளிட்ட விதிமுறைகள் குறித்து பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இணையதளத்தில் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

விவரங்களுக்கு: www.tamilnadu.bsnl.co.in
நன்றி : புதிய தலைமுறை 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக