அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

செவ்வாய், 28 மே, 2013

பசலைக்கீரை

பசலைக்கீரை, கொடி வகையைச் சேர்ந்த இந்த இக்கீரை இனிப்புச் சுவை கொண்டது.இக்கீரையில் வைட்டமின்  A, B C  போன்ற சத்துக்களும் இரும்பு, சுண்ணாம்பு மற்றும் நார் சத்துக்களும் மிகுந்து காணப்படுகிறது..

தேகச் சூட்டைத் தணித்து உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும். உடலில் உள்ள வறட்சியை போக்கி நீர்சத்தை உண்டாக்கும். இந்த கீரை கிராமங்களில் பெரும்பான்மையான விடுகளில் வளர்க்கப்படும். இந்த கீரையை பருப்பில் சமைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். மலச்சிக்கல் உள்ளவர்கள் சாப்பிட்டால் மலச்சிக்கல் பறந்து போகும்.

கோடைகாலங்களில் அதிக சூட்டை தணிக்க இந்த கீரையின் சாறெடுத்து தலையில் இட்டு சிறிது நேரம் ஊற விட்டு குளித்தால் சூடு தணியும். சூட்டினால் தலையில் உண்டாகும் பொடுகு போன்றவை நீங்கும். இதை தொடந்து உணவில் சேர்த்து வந்தால் ஆண்மை சக்தியை வளர்க்கும், தாம்பத்தியத்தில் நாட்டம் உண்டாக்கும். பசலைகீரையை நெருப்பில் போட்டு சுட்டு இளம் சூட்டோடு கட்டிகள், வீக்கங்கள் மீது வைத்து கட்டி வந்தால் அவை குணமாகும்.

இதன் மருத்துவகுணம் யாதெனில், இக்கீரையில் அடர்த்தியாக காணப்படும் பச்சையம் நம் உடம்பில் தேங்கி இருக்கும் தேவையில்லாத கொழுப்பை கரைக்க உதவும். அதிகமான கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இந்த கீரையை தினமும் உணவில் சேர்த்து வருவது நன்மையை உண்டாக்கும்.
நன்றி  :sinthikkavum.net

0 கருத்துகள்:

கருத்துரையிடுக