இங்கு 20 ஆயிரம் ஆண்டுகளாக பழங்குடியினர் வாழ்ந்து வருகிறார்கள். கி.பி. 1500-ம் ஆண்டு 6,090 லட்சம் பழங்குடியினர் வாழ்ந்தார்கள். ஆனால் இப்போது வெறும் 2.5 லட்சம் பேர் தான் உள்ளனர். இங்கு வாழும் 215 பழங்குடி குழுக்களை சேர்ந்த மக்கள் 170 வகையான மொழிகள் பேசுகின்றனர். அமேசான் காடுகளை நான்கு பிரிவுகளாக பிரிக்கிறார்கள். வான் தளத்தில் கழுகு, பருந்து போன்ற பறவைகளும், அடுத்த பிரிவில் குரங்கு போன்ற உயிரினங்களும், மூன்றாவது பிரிவில் பூச்சிகள், ஊர்வன போன்ற விலங்குகளும் வாழ்கின்றன. தரைப்பகுதியில் பயங்கர காட்டு விலங்குகள் உள்ளன. அனகோண்டா போன்ற உலகின் மிகப்பெரிய பாம்பு இனம் இருப்பது இங்குதான்.
இந்த காடு மற்றும் நிதியின் ஆயுள் கிட்டத்தட்ட 5.5 கோடி வருடங்கள். அமேசான் நதி பிறக்கும் இடத்தில் இருந்து 1,100 துணை ஆறுகளை தன்னோடு இணைத்துக்கொண்டு கடலில் சென்று கலக்கிறது. இங்கு இருக்கும் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட தாவரங்களை இன்னும் உலகத் தாவரவியல் வல்லுநர்களே படித்தது இல்லை என்பது ஒன்றே அமேசானின் பிரமாண்டத்தை உலகுக்கு உணர்த்தும்.
நன்றி : தினத்தந்தி & puvi.blogspot
0 கருத்துகள்:
கருத்துரையிடுக