அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

திங்கள், 28 மார்ச், 2011

மேற்குலகின் சிந்தனை ரீதியான படையெடுப்பு - 2(நேற்றைய கட்டூரையின் தொடர்ச்சி....)

இந்த சிந்தனைப் படையெடுப்பு கீழைத்தேய ஆய்வுகள் என்ற பெயரில் அல்குர்ன்,அல்ஹதீஸ்,ஸீரா, தாரீஹ் என்ற அம்ஷங்களைத் திரிபு படுத்தும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. இராணுவப் படையெடுப்பால் சாதிப்பது அசாத்தியமெனக் கண்டதன் பிற்பாடே இவ்வாறு அல்குர்ஆன் மீதும் திருத்தூதர்மீதும் களங்கத்தை ஏற்படுத்த மேற்கு விளைந்துள்ளது.
இஸ்லாத்திற்கெதிராக ஊடகங்களின் பயன்பாடு இன்று பெரும்பாலான ஊடகங்கள் யூத சியோனிஸ்டுகளின் ஆதிக்கத்தில் இருப்பது சிந்தனைப் படையெடுப்பிற்காக அவர்கள் வகுத்த திட்டத்தின் ஒரு கட்டமாகும். 1897இல் சுவிட்சர்லாந்தில் 300 யூதத்தலைவர்கள் கலந்துகொண்ட ஒரு மாநாட்டில் எடுத்த தீர்மானங்கள் குறித்து மீள சிந்திக்க வைக்கின்றது.

அவற்றில் சில தீர்மானங்கள் பின்வருமாறு.

ஊடகங்கள் குறிப்பாகத் தொலைத்தொடர்பு சாதனங்கள் யூதர்களின் கைவசம் இருக்க வேண்டும். பல்கலைக்கழகங்களிலும், கலாசாலைகளிலும்
ஆதிக்கம் செலுத்த வேண்டும். கேளிக்கை விடுதிகள், பொழுதுபோக்கு அறைகளை உருவாக்க வேண்டும். உலகில் பிரிவினைகளையும், பிளவுகளையும், உட்பூசல்களையும் ஏற்படுத்தல் வேண்டும்.
இதுபோன்றுதான் ஊடகத்தைப்பயன்படுத்தி உலகில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதை போத்துக்கல் என்ற யூத அறிஞன் இவ்வாறு கூறுகின்றான். “இலக்கியப் பத்திரிகைகளால் மக்களிடையே பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்த முடியம்; இவற்றினால் நாடுகளை வாங்கவும், எந்தவொரு ஊடகத்தில் பாதிப்பை ஏற்படுத்தவும், தீய சிந்தனைகளை உருவாக்கவும் முடியும். எனவே யூத நாட்டைத் தவிர மற்ற அனைத்து நாடுகளிலும் நாம் ஊடகத்துறையில் ஆதிக்கம் செலுத்த வேண்டும்.” என்றான்.
அந்தவகையில்தான் சமகால மேற்கத்தேய தொடர்பூடகங்கள் அமெரிக்க ஐரோப்பிய சிந்தனைப் படையெடுப்பிற்கான சாதனங்களாக விளங்குகின்ற CNN ,BBC, VOA, CIA, REUTER (ரொய்டர்) போன்ற செய்தி நிறுவனங்களும் உளவுஸ்தாபனங்களும் யூதர்களினதும் அதுசார்பானவர்களினதும் அகன்ற கைகளில் குவிந்துள்ளமையால் இவை இஸ்லாமிய எழுச்சி குறித்து பல வன்மையான செய்திகளை வெளியிட்டுவருகின்றன. அவ்வாறே News week, The washington Times, Washington post, USA today போன்ற பத்திரிகைகளும் யூத ஆதிக்கத்திலேயே செயற்படுகின்றன.

இந்த ஊடகங்களில் இஸ்லாம் வெகுவாகக் கொச்சைப்படுத்தப்பட்டு வருகின்றது. ஊடகச் சுதந்திரம் என்ற பெயரில் மதங்களையும் அவற்றின் புனிதமாகக் கருதுபனவற்றையும் ஏளனம் செய்கின்றனர். நெதர்லாந்தின் கிரிகோரியல் நெக்ஸ்கோட் என்ற ஓவியன் நபியவர்கள் குறித்து வரைந்த அப்பட்டமான 8 சித்திரங்களை அந்நாட்டின் 17 பத்திரிகைகள் ஊடகச் சுதந்திரம் என்ற பெயரில் பிரசுரித்து உலகளாவிய முஸ்லிம் சமுகத்தின் உணர்வுகளையும் புன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தகவல்களின் கஜானாவகத் திகழும் இணையத் தளங்களில் இஸ்லாத்தைப் பற்றிய போலிப் பிரசாரங்ள் மேற்கத்திய விசமிகளால் முனைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அவற்றில் 10,000 இற்கும் அதிகமான இணையத்தளங்கள் இஸ்லாத்தைப் பற்றிய பொய்யான தகவல்களைத் திரிபுபடுத்திக் கூறிவருகின்றன. இஸ்லாமிய இணையத்தளங்கள் என போலியாக இஸ்லாமியப் பெயர்களை வைத்துக்கொண்டே இன்னும் அதிகமானவை செயற்படுகின்றன. இன்று இணையத்தின் Google, Yahoo என்பன கூட யூதர்களினாலேயே வழிநடத்தப் படுகின்றன. அதுமட்டுமின்றி 253 மொழிகளில் சுமார் 10 மில்லியன் ஆக்கங்களைக் கொண்ட நாளாந்தம் பல மில்லியன் கணக்கானோர் வளம்வருகின்ற உலகளாவிய கலைக்களஞ்சியமான wekipedia கூட இஸ்லாம் குறித்த தவறான கருத்துக்ளைப் பதித்து வருகிறது.

டென்மார்க்கில் நபியவர்கள் பற்றி வெளியிட்ட கேலிச்சித்திரங்களை அண்மையில் இத்தளம் மீண்டும் பிரசுரித்து சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. அதேபோன்று சர்வதேச அரசியல் குறித்த அதிகமான ஆக்கங்கள் இஸ்ரேல் சார்பாக அமைந்துள்ளமை இதன் நம்பகத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ள அதேவேளை யூத ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சியையும் விளங்க முடிகிறது.

சினிமா ஊடகம்

முஸ்லிம்கள் பற்றிய தவறான அபிப்பிராயத்தை உலகில் விதைக்க மேற்குலகு கையாண்டுவரும் நவீன ஊடகம்தான் சினிமா. அனைவரினதும் கவனம் சினிமாவினால் அதிகம் ஈர்க்கப்படுகின்றது. திரைப்படங்கள் அரேபியர்களைக் காட்டு மிராண்டிகளாகவும் தீவிரவாதிகளாகவும் சித்தரிக்கின்றன. இது அங்கு மட்டுமின்றி இந்தியாவிலும் நடக்கின்ற பரவலான ஒரு சம்பவமாகும். சுருக்கமாகக் கூறின் இந்தியாவில் பம்பாய், இலங்கையில் அக்சரய, நெதர்லாந்தில் அண்மையில் தயாரிக்கப்பட்ட பித்னா போன்ற திரைப்படங்கள், இன்னும் நாடகங்கள், பாடல்கள் இதனை வெள்ளிடை மழையாய் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

எழுத்து ஊடகம்

இவை மாத்திரமின்றி 17ஆம், 18ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா இவ்வழிமுறையைக் கையாண்டுள்ளது. ஷேக்ஸ்பியர் எழுதிய சில நாடகங்களில் நபியவர்கள் குறித்து மோசமாக எழுதப்பட்டுள்ளது. அவ்வாறே Haratisme என்பவன் தனது நாடகமொன்றில் நபியவர்களின் கண்ணியத்தைக் குலைக்கும் விதமாக கற்பனைகளைப் புணைந்துள்ளான்.
அவ்வாறே 1889இல் Heri vicomte De Bermier என்ற நாடகம் இஸ்லாத்தைத் தாழ்த்தி கிறிஸ்தவத்தை உயர்த்தியும் சித்தரிக்கின்றது. அது மட்டுமின்றி 19ஆம் நூற்றாண்டிலும் இவ்வாறான நூல்கள் வெளிவந்துள்ளன. 1906இல் மேரீஷா என்பவர் எழுதிய லதீபா என்ற நாவல், 1929இல் முஆனது இன்ஸான் என்ற நாவல், 1977இல் வெளியான ஆசிக் என்ற நாவல், 1985இல் வெளியான ஹிமாயா என்ற நாவல், அதேகாலப்பகுதியில் வெளியான குர்பா முக்லகா என்ற நாவல், அதேபோன்று லஜ்ஜா என்ற தஸ்லிமா நஸ்ரினின் நாவல், ஷாத்தானிய வஷனங்கள் என்ற ஸல்மான் ருஷ்தியின் நாவல் என்பன முஸ்லிம்களைக் கொடூரமானவர்களாகவும், இரத்தப் பிரியர்களாகவும், பெண்ணுரிமையை மறுப்போர்களாகவும், முஸ்லிம் பெண்கள் தரம்கெட்டவர்களாகவுமே சித்தரிக்கின்றன. இவை முஸ்லிம்கள் மீதான மேற்குலகின் துவேஷத்தையும் காழ்ப்புணர்ச்சியையும் பிரதிபலிக்கின்றன.

அரபு மொழியிலிருந்து மக்களைத் தூரமாக்குதல்

மேற்குலகின் இச்சிந்தனைப் படையெடுப்பில் அவர்கள் பயன்படுத்தும் அடுத்த ஆயுதம் மிகப் பயங்கரமானது. அதுதான் மக்களை அல்குர்ஆனிலிருந்து தூரமாக்கும் செயற்பாடாகும். விக்டோரியக் காலத்தில் எகிப்து பிரித்தானியாவின் காலணித்துவத்தின் கீழ் இருந்த போது கிளாஸ்டன் என்ற பிரிடிஷ் பிரதமர் மக்கள் சபையில் அல்குர்ஆனைக் கையில் ஏந்தியவாறு “இந்தப் புத்தகம் எகிப்தியரிடம் இருக்கும் வரை அந்த நாட்டில் நாம் அமைதியாக, நிம்மதியாக இருக்க முடியாது. இதிலிருந்து அவர்களைத் தூரப்படுத்த வேண்டும்.” என்றான். இன்று இதற்கான திட்டமிட்ட செயன்முறைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஏதோவொரு முறையில் உலக முஸ்லிம்கள் யாவரும் அரபு மொழியுடன் தொடர்பு பட்டவர்காளக உள்ளனர். ஏனெனில் அது எமது மூல ஊற்றான அல்குர்ஆன், அஸ்ஸன்னாவின் மொழி மட்டுமின்றி அடிப்படை வணக்க வழிபாடுகளின் மொழியுமாகும்.இந்த அரபு மொழியைச் சிரமமானதாகக் காட்டுவதோடு குர்ஆன் ஸன்னா அமைந்திருக்கும் எழுத்து மொழியான புஸ்ஹாவை விட பேச்சு மொழியான ஆமியை இன்று முக்கியத்துவப் படுத்தி வருகின்றனர். அரபு நாடுகளில் மேற்கின் சில தொலைக்காட்சி அலைவரிசைகளும் பத்திரிகைகளும் ஆமியில் இயங்குவது இதன் ஆரம்ப கட்டமாக இருக்கலாம். அது மட்டுமன்றி சர்வதேச மொழியாக ஆங்கிலத்தைக் காட்டி அதனை வளர்ப்பதற்காக மிஷனரிகளை மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளில் நிறுவி வருவது குறிப்பிடத்தக்கது.

தம்மைத் தன்னிறைவு கொண்டவர்களாகவும், முஸ்லிம்களை சார்ந்து வாழும் சமூகமாகவும் சித்தரித்தல்.

முஸ்லிம் நாடுகளை தமது வியாபாரச்சந்தையாக இன்று அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் மாற்றி வருகின்றன. இதற்கு அந்நாடுகளை சுயநிர்ணய சக்தியற்றனவாகவும், எப்போதும் சார்ந்து வாழும் (Dependent Society) நுகர்வுச் சமூகமாகவும் சித்தரித்து அவ்வாறான சிந்தனையையும் ஊட்டுகின்றது. இதற்குத் தம்மை வல்லரசாகச் சித்தரித்து பொருளாதார ரீதியிலும், அறிவியல் தொழிநுட்ப ரீதியிலும், அரசியல் கலாசார நாகரீகத்திலும் தாம்தான் விற்பண்ணர்கள் என்றும் தம்மைச் சார்ந்ததாகவே ஏனைய நாடுகள் காணப்பட வேண்டுமென்றும் ஒரு மாயையைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். இதனைப் பெரிதாக்கிக் காட்டுவதற்காக தம்வசம் இருக்கும் ஊடகங்களை கச்சிதமாகப் பயன்படுத்தி வருகின்றனர். கழிவறை முதல் கல்லறை வரை விதவிதமான உற்பத்திப் பொருட்களை மூன்றாம் மண்டல நாடுகளில் குறிப்பாக முஸ்லிம் நாடுகளில் குவிக்கப் பட்டு வருகின்றன. அது மட்டுமின்றி முஸ்லிம் நாடுகளுக்குள் உட்பூசல்ளையும் கலவரங்களையும் மூட்டிவிட்டு சமாதானப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஆயுத வணிகத்தைத் தொடர்கின்றனர். அமெரிக்க விஞ்ஞானிகள் ஒன்றியம் (Federation of American Scientists) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை இதனை மேலும் வலுப்படுத்துகின்றது. தற்போது உலகில் நடைபெறும் 92% உள்நாட்டு மோதல்களில் அமெரிக்காவின் ஆயுதங்களே பயன்படுத்தப் படுகின்றன.
இவ்வாறு உட்பிரிவுகளை ஏற்படுத்துவது மட்டுமன்றி வறிய நாடுகளில் வளச் சுரண்டல்களையும் மேற்கொள்கின்றனர். பன்னாட்டு நிதி நிறுவனத்தில் சுமார் 12 வருடங்கள் சேவையாற்றிய பிரபல பொருளாதார நிபுணர் டேவின்சன் புதூ அவரது ராஜினாமாவின் போது அதற்கான காரணத்தை அக்கடிதத்தில் இவ்வாறு எழுதியிருந்தார். “வறிய நாடுகளில் உள்ள பல்கோடி மக்களின் இரத்தம் எனது கரங்களில் படிந்து கிடக்கின்றது. இது வெறும் இரத்தக்கறையல்ல.இரத்த ஆறு.எவ்வாறு இந்த இரத்த ஆறு நமது கரங்களில் படிந்தது? முதலில் வறிய நாடுகள் பற்றிய மோசடியான புள்ளி விபரங்களைத் தயாரிக்கிறோம். இதனை அந்நாடுகளில் காட்டி உங்களது பொருளாதாரம் வீழ்ச்சியுற்றுள்ளது என்று பயமுறுத்துவோம். பின்பு கடன் தருவதாகக் கூறி மோசடித்திட்டங்களையும் நிபந்தனைகளையும் அவர்கள் தலைகளில் சுமத்துகிறோம். இவ்வாறு நமது நிபந்தனைகள் ஏற்கப்படுகினறபோது அந்நாட்டு மக்களின் இரத்தம் நமது கரங்களில் ஆறாக ஓடுகின்றது. இதற்குப் பரிகாரமாக நான் எடுத்திருக்கும் முதல் கட்ட நடவடிக்கைதான் இந்த ராஜினாமாக் கடிதம்” என்றார்.
இதுபோன்ற நல்லுள்ளம் கொண்டவர்களால்தான் இவ்வாறான அசிங்கமான மறுபக்கங்கள் அம்பலத்திற்கு வருகின்றன. மேற்குலகின் சதிவலை பற்றி அறியாத அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் அவற்றிடம் கையேந்துவதால் தமது சுயத்தையே அடகுவைக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்படுகின்றன. ஜனநாயகம்,சமத்துவம்,சமாதானம் போன்ற பாசாங்கான வார்த்தைகளுக்கு இன்றைய அரபு நாடுகள்கூட மயங்கிக் கிடப்பது கவலைக்குறிய விடயம்தான்.

கலாசார ஊடுறுவல், திணிப்பு முறைகள்

இஸ்லாத்திற்கெதிராக மேற்குலகு நடத்திவரும் சிந்தனா ரீதியான மற்றொரு அடக்குமுறைதான் கலாச்சார ஊடுறுவல். ஒரு சமூகத்தின் இறுப்பை நிச்சயிப்பது அதன் பண்பாட்டு மற்றும் கலாச்சாரப் பழக்க வழக்கங்கள் ஆகும். ஆக ஒரு சமூகத்தின் இறுப்பை ஆட்டங்காணச்செய்ய கலாசாரத் திணிப்பு முறையைத்தான் மேற்குலகம் செய்துவருகின்றது. அது மட்டுமன்றி இஸ்லாமியக் கலாச்சாரத்தை (Islamic culture) துடைத்தொழிப்பதே இதன் முக்கிய குறிக்கோள்.

1803தொடக்கம் 1908வரை எகிப்தின் ஆங்கிலேயப் பிரதிநிதி Lord Cromer எனபவர் Modern Egypt என்ற தனது நூலில் எகிப்திய இளைஞர்களுக்கு மேற்கத்திய நாகரிகத்தின் உண்மையான உயிரோட்டத்தை ஊட்ட வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். அதேபோன்று 1860 இல் பிரித்தானியாவின்(UK) பிரதமர் ஐரோப்பாவின் கலாசாரத்தைக் கிழக்குலகில் விதைக்க பல்வேறு திட்டங்களையும் ஒரு மாநாட்டிலே முன்வைத்தார். அதற்கமைய கல்வி, அறிவியல் துறைகள், சமூகப் பண்பாட்டுத் துறைகள், ஆய்வுத்துறைகள் போன்ற துறைகளுடாகத் திட்டமிட்ட அடிப்படையில் மேற்கின் கலாச்சார நாகரிகங்களை முஸ்லிம் உலகை நோக்கி ஆரம்பித்து இன்றும் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. அண்மையில் ஒரு மாநாட்டில் எகிப்தின் கலாச்சார அமைச்சர் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது பிற்போக்குவாதம் எனப் பகிரங்கமாகக் கூறியது Lord Cromer கூறியதன் வெற்றியைக் காட்டுகிறது.

சிந்தனா யுத்தத்திற்கெதிரான எதிர்ப்பலைகள்

முஸ்லிம் சமுதாயத்தை நோக்கி வீசப்பட்ட இந்த சவால்களின் ஆபத்தான தன்மையை உணர்ந்துகொண்ட அவ்வப்போது தோன்றிய அறிஞர்கள் இந்த சிந்தனை யுத்தத்திற்கு எதிராக வீருகொண்டெழுந்தனர். தம்மால் இயலுமான அனைத்து நடவடிக்கைகளையும் இதற்கெதிராகக் கட்டியெழுப்பினர். மக்கள் மத்தியில் உரைகளை நிகழ்த்தி மக்களை விழிப்படையச் செய்தனர். நூற்களை எழுதினர். இதுபோன்று இன்னும் பல்வேறு அம்சங்கடாக இப்பிரச்சினையை எதிர்கொண்டனர். அந்த அறிஞர்களுல் அரபுலகின் ரஷீத் ரிழா, ஹஸனுல் பன்னா, போன்றோரும், இந்தியத் துணைகண்டத்தின் அல்லாமா இக்பால், சுலைமான் அந்நத்வி, அபுல் அஃலா மௌதூதி, போன்றோர் “ரித்ததுன் லா அபாபக்ருன் லஹா” என்ற நூலிலே மிக அழகாகத் தெளிவுபடுத்தினார். “இன்று முஸ்லிம் சமூகத்தில் இஸ்லாத்தை விட்டும் தூரமான சிந்தனையுள்ளவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் மேற்குலகின் சிந்தனைகளைத் தமது காலனித்துவ நாடுகள் மேற்கொண்ட சிந்தனா ரீதியான படையெடுப்பின் பின்விளைவாகும்” என்றார்.

சிந்தனா யுத்தத்தை எதிர்கொள்வது எவ்வாறு?

எனவே முஸ்லிம்கள் என்றவகையில் எமது கடப்பாடு அளப்பெரியது. மேற்குலகம் இருளில் விழித்துக்கொண்டிருக்கும் அதேவேளை வேதம் சுமந்த முஸ்லிம்களாகிய நாம் ஒளியில் தூங்கிக்கொண்டிருக்கிறோம். இத்தூக்கத்திலிருந்து விழிப்படைந்து மேற்குலகின் சிந்தனைப் படையெடுப்பிலிருந்தும், மூளைச் சலவையிலிருந்தும் எம்மைத் தற்காத்துக் கொள்வதற்கான உச்சகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஜிஹாத் செய்வது கட்டாயமான ஒரு சூழலில் எந்தளவு ஒருவர் தன்னைத் தயார்படுத்திக்கொள்வது அவசியமோ அது போன்றுதான் இந்த சிந்தனா யுத்தத்திற்கெதிராகப் போராட தன்னைத் தயார்படுத்திக் கொள்வதும் அவசியமாகும்.
எனவே முதலில் எமது இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாக்க எதிரிகளின் அதே ஆயுதங்களை இஸ்லாத்தின் வரம்புக்குள் இருந்துகொண்டு பயன்படுத்தல் வேண்டும். கலாநிதி ஷெய்க் யூஸுப் அல் கர்ழாவி கூறுவது போன்று “சிந்தனைப் படையெடுப்பின் இராட்சத சாதனங்களிலிருந்து முஸ்லிம்களாகிய நாமும் பயனடைய வேண்டும். செயற்கைக் கோள்கள்,நேரடி ஒளி,ஒலி பரப்பு சாதனங்கள், இணையம்,போன்றவற்றை பயன்படுத்தல் வேண்டும்.
இஸ்லாம் எனும் சர்வதேசத்தூதை எவ்விதக் கூட்டல் குறைத்தலுமின்றி அதன் தூய ஊற்றுக்களிலிருந்து எவ்விதக்களங்கமும் இன்றி பரிசுத்தமான முறையில் உலகுக்கு முன்வைக்க வேண்டும்”.
இவ்வாறானதோர் புரட்சியைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் விளங்கி சிந்திப்போமாயின் மேற்கின் சதி வலைகளைத் இவ்வாறானதோர் புரட்சியைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் விளங்கி சிந்திப்போமாயின் மேற்கின் சதி வலைகளைத் தகர்த்தெறியலாம்.
“முஸ்லிம் சமூகம் இடையிடையே ஆடி ஓயும். ஆனால் அத்திவாரமின்றிப் போகாது” என அப்துல் கரீம் ஸைதான் அவர்கள் கூறுகின்றார்கள்.

“அல்லாஹ்வின் பிரகாசத்தைத் தம் வாய்களால் (ஊதி) அணைத்துவிட அவர்கள் நாடுகின்றார்கள். நிராகரித்தோர் வெறுத்த போதிலும் அல்லாஹ்வோ தன்னுடைய பிரகாசத்தைப் பூர்த்தியாக ஆக்கிவைக்கக் கூடியவன்”
(அல்குர்ஆன்- 61:08
)

நன்றி : ஆலிஃப் அலி

2 கருத்துகள்:

T.Safiullah.Ayangudi சொன்னது…

பயனுள்ள ஆக்கம். மேலும் தொடரட்டும் இன்ஷா அல்லாஹ்.

Aalif Ali சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரரே!

எனது ஆக்கத்தை எனது பெயருடன் நன்றி கூறி உங்கள் தளத்தில் இட்டுள்ளமைக்கு மிகவும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன். எனது பெயருடன் எனது தளத்துக்கான லின்க் ஐயும் கொடுத்திருந்தால் வாசகர்களுக்கு இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.
எனது இந்த ஆக்கத்தை எனது தளத்திலிருந்தும் வாசிக்க முடியும். http://aliaalifali.blogspot.com/2011/07/blog-post_10.html

இவன் ஆலிப் அலி (இஸ்லாஹி)

கருத்துரையிடுக