அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

இறைநேசர்கள் யார்? (பகுதி-2)

உண்மை பேசுவோரை அல்லாஹ் பொருந்திக் கொள்கிறான்

இது உண்மை பேசுவோருக்கு அவர்களது உண்மை பயன் தரும் நாள். அவர்களுக்குச் சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக்கொண்டனர். இதுவே மகத்தான வெற்றியாகும்என்று அல்லாஹ் கூறுவான். (அல்குர்ஆன் 5 : 119)

உண்மை பேசுவோரை அல்லாஹ் பொருந்திக்கொள்வதாக பிரகடனப்படுத்துகிறான்.இங்கு முஸ்லிமல்லாத மனிதர்களும் உண்மை பேசுபவராக இருக்கின்றாரே என்ற கேள்வி வரும் ஆனால் இங்கு அல்லாஹ் கூறும் உண்மை பேசுவோருக்கு சொர்க்கச் சோலைகள் தருவதாக வாக்களிக்கப்பட்டுள்ளது அப்படியானல் அவர்கள் அல்லாஹ்வின் அருள்மறையான குர்ஆனையும் மற்றும் நபிகளாரின் வாழ்க்கை நெறிமுறையான ஹதீஸ்களையும் முறையாக பற்றிப்பிடித்து அதன்படி உத்தமமாக வாழ்ந்த, வாழுகின்ற, வாழப்போகின்ற உண்மை பேசுபவர்கள் என்ற அடிப்படையில் சிந்தித்தால் இந்த வசனத்திற்கான விடை கிடைக்கிறது. இதோ கீழ்கண்ட இந்த வசனத்தை யார் பற்றிப் பிடிக்கிறாரோ அவர் உண்மையாளர் என்ற பட்டியலில் அடங்கலாம்!


நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 3 : 31)

என்னடா இது! இந்த வசனத்தை பின்பற்றினால் போதுமா உண்மையாளர் ஆகிவிடமுடியுமா? என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு வரலாம் பயப்படாதீர்கள்! இங்கு அல்லாஹ்வை விரும்பினால் என்னை பின்பற்றுங்கள் என்று கூறப்பட்டுள்ளது அதாவது நபிகளாரை மட்டும் பின்பற்றினால் பயன் ஏதும் கிடையாது மாறாக அல்லாஹ்வை விரும்பி நபிகளாரை பின்பற்ற வேண்டும் அதாவது அல்லாஹ்வின் வார்த்தைகளான அருள்மறை குர்ஆனுக்கு மதிப்பளித்து நபிகளாரின் வாழ்க்கை நெறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது! குர்ஆன் ஹதீஸ்களை முழுமையாக பின்பற்றுவது!

 சிந்தித்துப்பாருங்கள் சகோதரர்களே!
·அல்லாஹ்வை விரும்புபவர் அல்லாஹ்வுக்கு மிகவும் அஞ்சுபவராக இருப்பார்! அல்லாஹ்வுக்கு மாறு செய்ய மாட்டார்
· அல்லாஹ்வின் தூதரை பின்பற்றுபர் அல்லாஹ்வின் தூதர் செய்யாததை செய்யமாட்டார்! அல்லாஹ்வின் தூதரின் கட்டளைகளை அணுவணுவாக அப்படியே பின்பற்றுவார்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொய் கூறியது உண்டா? புறம் கூறியது உண்டா? இவ்வாறு நல்ல பண்புகளை கொண்டு திகழ்ந்ததன் காரணத்தினாலே தானே அவர் அல்அமீன் என்ற அழகான பெயரை பெற்றார் இன்று நம்மில் அல்அமீன்கள் உள்ளனரா? இன்று நாமெல்லாம் நாடகமாடும் நடிகர்களாக இருக்கிறோம் நபிகளாரோ என்றுமே அல்அமீனாக இருக்கிறார்! (சுப்ஹானல்லாஹ்)


இன்று நாம் பொய்யும் கூறுகிறோம், புறமும் கூறுகிறோம் அப்படியானால் நாம் எவ்வாறு உண்மையாளர்களாக முடியும்! எனவேதான் அல்லாஹ்வை விரும்பினால் என்னை பின்பற்றுங்கள் என்று கூறப்பட்டுள்ளது!


அப்படியே நாம் உண்மையாளர்களாக இருந்தாலும் அல்லாஹ் நம்மை விரும்புவது நமக்கு தெரியாது அது மறுமையில்தான் தெரியவரும்! எனவே நாம் நம்மை அவ்லியா என்று கூறிக்கொள்ள முடியாது! அல்லாஹ் நம்மை விரும்புவது ஜிப்ரயீல் (அலை) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டு மலக்குமார் களுக்கு தெரிவிக்கப்படும் அதன் பின்னர் மனிதர்களின் உள்ளத்தில் நம் மீது அன்பு ஏற்படும் மாறாக நம்மை வழிபடும் எண்ணம் ஏற்படாது! ஆனால் இன்று பார்க்கிறோம் அவ்லியாவை நேசிக்கிறோம் என்று கூறி வழிபடுகிறார்கள் இது அல்லாஹ்வின் நேசமா? ஷைத்தானின் தீண்டுதலா?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ் ஒரு அடியானை நேசித்தால் ஜிப்ரீலை அழைத்து இன்னாரை நான் நேசிக்கிறேன் என்று அல்லாஹ் கூறுவான். விண்ணகத்தில் ஜிப்ரீல் இதை அறிவிப்பார். பிறகு பூமியில் உள்ளவர்களுக்கு அவர் மீது அன்பு ஏற்படுகிறது. அல்லாஹ் ஒரு மனிதனை வெறுத்தால் ஜிப்ரீலை அழைத்து இன்னாரை நான் வெறுக்கிறேன் என்று கூறுவான். இதை ஜீப்ரில் விண்ணகத்தில் அறிவிப்பார் எனவே பூமியில் உள்ளவர்களுக்கு அவர் மேல் வெறுப்பு ஏற்படுகிறது.’ அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு நூல் : திர்மிதி (3085)



நன்றி : islamicparadise

தொடரும் இன்ஷா அல்லாஹ்....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக