அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

ஆன்லைன் இ-புக் நூலகம் இணைய தளம்!

உலகின் மிகச் சிறந்த மின் நூல் நூலகம் ஒன்று செயல்படும் விதம் மிகச் சிறப்பாகவும் புதியதாகவும் இருந்தது.

இதன் இணைய முகவரி http://booksbuddies.com இந்த தளத்தில் இலவசமாகத் தரப்படும் நூல்கள் அனைத்தும் தன்னம்பிக்கையை ஊட்டும் நூல் களாகும். தன்னார்வத்துடன் பல துறைகளில் வளரத் துடிப்பவர்கள் தங்கள் இலக்குகளை எப்படி அமைக்க வேண்டும், எப்படித் திட்டமிட வேண்டும், சோம்பலைப் போக்கி, தளர்ச்சியை நீக்கி எவ்வாறு முன்னேற வேண்டும் என வழி காட்டும் பல நூல்கள் இங்கு உள்ளன. இவற்றைப் படிப்பதன் மூலம் நம் திறமை என்னவென நாம் உணர முடிகிறது. இதனால், நாம் ஊக்கம் பெறு கிறோம். நம் சக்தி வலுப்பெறுகிறது. நம் கனவுகளையும் இலக்குகளையும் நோக்கி நம்பிக்கையுடன் செல்ல முடிகிறது. இதில் உறுப்பினராகி நூல்களை இலவசமாக தரவிறக்கம் செய்திட என்ன செய்ய வேண்டும்? 

மேலே தரப்பட்டுள்ள இணையப் பக்கம் சென்று, அங்கு உங்கள் பெயர், , மின்னஞ்சல் முகவரி, யூசர் நேம், பாஸ்வேர்ட் கொடுத்தால் அக்கவுண்ட் உருவாக்கப்பட்டு, மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி கிடைக்கும். 
அதில் ஏற்கனவே தயாரான அஞ்சல் வாசகத்துடன் நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்திட ஒரு லிங்க் கிடைக்கும். இதனை அப்படியே உங்கள் நண்பர்களுக்கு அனுப்பவும். அதில் உள்ள லிங்க்கில் கிளிக் செய்து உங்கள் நண்பர்களும் இது போல பதிந்து கொள்ளலாம். எதற்காக உங்கள் லிங்க் என்று எண்ணுகிறீர்களா? 

இந்த தளத்தில் பதிந்து கொண்ட வுடன், இங்கு உள்ள நூல்களில் நான்கினைத்தான் நீங்கள் டவுண்லோட் செய்திட முடியும். உங்கள் நண்பர்கள், உங்கள் லிங்க் மூலம் பதிந்து கொண்டால், ஒவ்வொரு நண்பர் பதிவு செய்கையில், உங்களுக்கு மேலும் சில நூல்கள் டவுண்லோட் செய்திட அனுமதி கிடைக்கும். நான் ஏறத்தாழ 200 நண்பர்களுக்கு அனுப்பினேன். அதில் 30 பேர் முகவரி ""சரியில்லை'' என்று திரும்பி வந்தது. பலர் நன்றி கூறி பதிந்தனர். இப்போது நான் பல நூல்களை டவுண்லோட் செய்திடும் உரிமையைப் பெற்றுள்ளேன். 

உரிமை பெறுவது பெரிய விஷயமில்லை. இதில் உள்ள நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படித்து அனுபவ அறிவு பெறுவதே நல்லது. என் லிங்க் முகவரி வேண்டும் எனில், இதோ: http://booksbuddies.com?ref=cbose இந்த தளத்தில் உள்ள இன்னொரு வசதி, பதிந்து கொண்டுள்ள நண்பர்களுடன் சேட் செய்திடலாம். நல்ல விஷயங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளலாம். பதிந்து என்ன இருக்கிறது என்றுதான் முயற்சி செய்யுங்களேன். வாழ்க்கையில் ஒரு நல்ல தொடக்கத்தினை உணர்வீர்கள்.
நன்றி : MPM pages

0 கருத்துகள்:

கருத்துரையிடுக