ஏகஇறைவனின் திருப்பெயரால்....
நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்போது
அவன் மகிழ்ச்சியடைகின்றான். தன் இறைவனைச் சந்திக்கும் போது
நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகின்றான் என்று நபிகள்
நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1904

ரமளான் மாதத்தை பெருமானார்(ஸல்) அவர்கள் அருள்வளம் மிக்க மாதம்
என்று வர்ணித்துக் கூறினார்கள்.

ஒருவருக்கு இவ்வுலகில் ஏராளமான பொருட் செல்வங்கள் கிடைக்கப்
பெறுவது அருள்வளம் அல்ல, மாறாக மறுமையின் வெற்றிக்கான
வாய்ப்புகள் கிடைப்பதே அருள்வளமாகும். அதற்கான வாய்ப்புகள்
ஏராளமாக கிடைப்பது இந்த ரமளான் மாதத்தில் தான். 

மனிதர்கள் செய்யும் நற்செயலுக்கான கூலி பத்திலிருந்து எழுநூறு
மடங்காக பல்கிப் பெருகுகின்றன நோன்பைத் தவிற, நோன்பு எனக்குரியது
அதற்கு நானே கூலி கொடுக்கிறேன், எனது அடியான் எனக்காக தனது
உணவையும், இச்சiயையும் விட்டு விடுகிறான், என்று இறைவன்
கூறுவதாக பெருமானார்(ஸல்)அவர்கள்கூறுகின்றார்கள். புகாரி, முஸ்லீம்.

நோன்பு எனக்குரியது என்றும், எனக்காக என் அடியான் உணவையும்,
ஆசைகளையும் விட்டு விடுவதால் அவனுக்கு நானே கூலி வழங்குகிறேன்
என்று அல்லாஹ் கூறுவதால், அல்லாஹ்வுக்காக நோன்பை
நோற்றிருக்கின்றோம், அல்லாஹ்விடமிருந்து ஏராளமான நற்கூலிகளை
அடைய வேண்டும், என்ற நல்ல நோக்கத்துடன் ரமளானில் நற்செயல்கள்
செய்ய வேண்டும்.

எந்த நோக்கத்தின் அடிப்படையில் அல்லாஹ்வின் அடியார்கள் ரமளான்
மாதத்தில் நற்செயல்கள் புரிகின்றார்கள் என்பதை உள்ளத்தைப் பார்க்கும்
அல்லாஹ் ரப்புல் அலமீன் அறிவதால் அதற்கான கூலிகளை அவர்களின்
நல்லென்னத்தின் அடிப்படையில் வாரி வழங்கிடுவான்.
ரமளானில் அவர்களின் எண்ணங்களுக்கேற்பவே எழுப்பப்படுவார்கள் என்று
இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள்
கூறினார்கள். புகாரி 1901
இறைவன் புறத்திலிருந்து வரும் அருள்வளத்தை முறையாக அறுவடை
செய்து அதனைக் கொண்டு தீமைகளை அழித்து முடிக்கும் போது
சொர்க்கத்தின் வாசல்கள் அவருக்காக ரமளானில் திறக்கப்படுகின்றது,
நரகத்தின் வாசல்கள் பூட்டப்படுகின்றது, ஷைத்தானுக்கு
விலங்கிடப்படுகின்றது.
அல்லாஹ்வின் நோன்பை நோற்று அல்லாஹ்விடமிருந்து ஏராளமான
நன்மைகளை அடைந்து அதன் மூலமாக தீமைகளை அழித்து சொர்க்;கம்
செல்வதற்கு தயரானவர் மறுமையில் இறைவனை சந்திக்கும்
பாக்கியத்தைப் பெறுவார்.
அந்த சொர்க்கவாசி தனது இறைவனை தன்னுடைய இரு கண்களால்
கண்டு மகிழ்ச்சி அடையும் விதம் இறைவன் அவருக்கு உருவத்தில் காட்சி
அளிப்பான், அவரை மகிழ்ச்சி அடையும் விதம் இறைவன் நடத்துவான்.
அருள்வளம் மிக்க ரமளான் மாதத்தை அடைந்து அதில் நற்செயல்களை
அதிகம் செய்து ஏகஇறைவனிடமிருந்து ஏராளமான கூலிகளைப் பெற்று
அதன் மூலம் தீமைகளை அழித்து சொர்க்கம் சென்று இறைவனை கண்டு
மகிழ்ச்சி அடையும் நன்மக்களாக ஆக்கி அருள் புரிவானாக ! 

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி
 அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி
பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
நன்றி : அதிரை ஏ.எம்.பாரூக்