அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

சனி, 4 ஜூன், 2011

யா முஹம்மது என்று அழைக்கலாமா?

தமிழகத்தின் அனைத்து மதரஸாக்கள் மற்றும் ஆ­லிம்களின் ஃபத்வாக்கள்...?

நாம் நம்முடைய உயிரினும் மேலாக மதித்துப் போற்றும் பெருமானார் (ஸல்) அவர்களை யா முஹம்மது என்று பெயர் சொல்லி­ அழைக்கலாமா என்பதில் சர்ச்சை இருந்து வருவதை நாம் அறிகிறோம். இந்த சர்ச்சை தொடர்பாக சுமார் 20 வருடங்களுக்கு முன்னால் (1997ல்) இர்ஃபானுல்ஹக் என்ற நுல் வெளியிடப்பட்டது. தமிழகத்தின் மிகப் பெரும் தப்லீக் அறிஞரும், புரசைவாக்கம் பெரிய பள்ளிவாச­ல் இமாம் நிஜாமுத்தீன் மன்பயீ அவர்கள் அந்த நூலின் ஆசிரியர். தமிழகத்தின் முக்கியமான அனைத்து மதரஸாக்களிலும் அந்த நூலிற்கு வழங்கப்பட்டுள்ளது. மதரஸாக்களின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் அந்த நூலைப் புகழ்ந்து எழுதிய மதிப்புரைகளும் அது தொடர்பான ஃபத்வாக்களும் அந்த நூ­லில் இடம் பெற்றுள்ளன. அந்த நூலில் மேற்கண்ட சர்ச்சை தொடர்பாக எழுதப்பட்ட கருத்துகளை ஒரு வரி பிசகாமல் அப்படியே தருகின்றோம்.

முஹம்மது என்று திக்ரு செய்யலாமா?

சிலர் தரீக்கா என்ற பெயரால் அல்லாஹ் அல்லாத பொருளை திக்ரு செய்கின்றர். குறிப்பாக ரஸுலுல்லாஹீ (ஸல்) அவர்களுடைய திருநாமத்தை மரியாதையின்றி முஹம்மத் முஹம்மத் என்று செய்கின்றனர். சூஃபியாக்களுக்கு இது ஆகும் என்று கூறுகின்றனர். திக்ரு என்பதன் கருத்தையும் சரீயத்தின் சட்டங்களையும் சரியாக விளங்காத காரணத்தால் ஏற்படும் தீமையாகும் இது. அல்லாஹ் அல்லாத பொருளை திக்ரு செய்வது மிகப்பெரும் தீமையாகும் என்பதை பற்றிய விளக்கத்தை இங்கு காண்போம்.

அல்லாஹுத்தாலாவுடைய திருநாமங்களைப் போன்று வேறு படைப்பினங்களின் பெயரை திக்ரு செய்வது ஷிர்க் என்னும் இணைவைத்தலாகும் பெரும் பாவமாகும் என ஷாஹ் வ­லியுல்லாஹ் முஹத்தில்(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.

நூல்: ஷிபாவுல் அலீல் ஷரஹ் அல் கைலுல் ஜமீல் லி பக்கம் 18

திக்ரு என்பது ஒரு வணக்கம் (இபாதத்) அதுவும் உயர்ந்த சிறந்த வணக்கம். இந்த வணக்கத்தில் அல்லாஹுத்தாலாவிற்கு இணையாக வேறு மனிதரை அல்லது வேறு பொருளை திக்ரு செய்வது ஷிர்க் என்பதாக ஆகிவிடுகின்றது.

அல்லாஹுத்தஆலா துருக்குர்ஆனில் இய்யாக்க நஃபுது என்று கூறுகின்றான். இய்யாக்க  உன்னையே, நஃபுது  வணங்குகிறோம். என்பது இதனுடைய பொருள் இந்த வாசகத்தின் அசல் அமைப்பு நஃபுதுக என்று இருக்க வேண்டும். நஃபுதுக என்றால் உன்னை வணங்குகிறோம் என்பது பொருளாகும். உன்னைத்தான் வணங்குகிறோம் வேறு எவரையும் வணங்கமாட்டோம் என்று குறிப்பாக்கி வைக்கும் பொருள் ஏற்பட வேண்டும் என்பதற்காக இய்யாக்க நஃபுது என்று அல்லாஹுத்தஆலா கூறுயுள்ளான்.

நஃபுது என்பதன் வேர்ச்சொல் இபாதத் ஆகும். இபாதத் என்றால் வணக்கம் என்று பொருள். ஒரு முஃமின் செய்கின்ற தொழுகை , நோன்பு, ஜகாத், ஹஜ்ஜு, திக்ரு, ஃபிக்ரு இன்னப்பிற செயல்கள் அனைத்தும் இபாதத் என்பதாகும். எனவே இய்யாக்க நஃபுது உன்னையே வணங்குகிறோம் என்று கூறும் போது உன்னையே தொழுகின்றோம். வேறு எவரையும் தொழமாட்டோம் உன்னையே திக்ரு செய்கின்றோம் வேறு எவரையும் திக்ரு செய்யமாட்டோம். இனக்காகவே நோன்பு ஜகாத் ஹஜ் இன்னப் பிற செயல்கள் அனைத்தையும் செய்கின்றோம் வேறு எவரையும் திக்ரு செய்யமாட்டோம் என்ற எல்லாக் கருத்தையும் தன்னுள் கொண்டதுதான் இய்யாக்க நஃபுது என்ற திருவாசகம் இக்கருத்துகள் தப்ஸீர் பைனாவீயிலும் அதனுடைய விளக்கவுரை நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. இப்போது நாம் கவனிப்போம்.

இய்யாக்க நஃபுது என்பதற்கு உன்னையே திக்ரு செய்கின்றோம் வேறு எவரையும் திக்ரு செய்யமாட்டோம் என்ற பொருள் கூறப்படும் அல்லாஹ்: அல்லாத பொருளை திக்ரு செய்வது ஷிர்க் என்ற குற்றத்தை சேர்ந்தாகிவிடுகிறது இந்த கருத்தில் தான் ஷாஹ் வ­யுல்லாஹ் முஹத்திஸ்(ரஹ்) அவர்கள் அல்லாஹ்வின் திருநாமத்தை போன்று வேறு பொருள்களின் நாமங்களை திக்ரு செய்வது ஷிர்க் என்ற பெரும் பாவமாகும் என்று கூறுயுள்ளார்கள்.

மேற்கூறிய விளக்கத்தை தெரிந்த பின்னரும் அல்லாஹ் அல்லாத பொருளை திக்ரு செய்யலாம் என்று என்று கூறுபவர்கள் அல்லாஹ் அல்லாத பொருளை தொழலாம் வணங்கலாம் என்ற கருத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்

அல்லாஹ் அல்லாத பொருளிற்சேர்ந்தவர்கள்தான் முஹம்மத் (ஸல்) அவர்கள்.எனவே முஹம்மத் முஹம்மத் என்று திக்ரு செய்வது அல்லாஹ்வுடைய வணக்கத்தில் இணைவைப்பது பெரும் பாவமாகும்.

(சுன்னத் வல் ஜமாஆத் என்று தங்களை கூறுக்கொள்ளும், காலி­ல் விழும் ஒரு கூட்டம் இன்றளவும் யா முஹம்மத் என்று திக்ரு செய்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
(இவண் த நா ஜமாத்துல் உலமா)

அல்லாஹுத்தஆலா திருக்குர்ஆனில் அல்லாஹ்வைத் திக்ரு செய்யுங்கள் என்னை திக்ரு செய்யுங்கள் என்று தான் கூறுகிறான். ஆகவே திக்ரு என்பது அல்லாஹுத்தஆலாவுக்கே சொந்தமானது. நபி (ஸல்) அவர்களை திக்ரு செய்தல் கூடாது) நபியின் மீது ஸலவாத்து சொல்வது சுன்னத்து.
(வேலூர் பாக்கியத்துஸ்ஸா­ஹாத் ஃபத்வா)

அல்லாஹ் அல்லாத பொருளை திக்ரு செய்தல் கூடாது ஸகாபாக்கள் தாபியீன்கள் இமாம்கள் செய்யாத இந்த புதிய முறை திக்ரானது பித் அத் எனும் வழிகேடு ஆகும். அது ரத்து செய்யப்படவேண்டியதாகும்.

எவர் நம்முடைய மார்கத்தில் இல்லாத புதிய செயல்களை தோற்றுவித்தால் அது ரத்து செய்யப்படவேண்டியதாகும். என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி­) நூல் : மிஷ்காத் (பக்கம் 27)

இந்த ஹதீஸ்களி­ருந்தும் ஃபத்வாக்களி­ருந்தும் ஷரீயத்தில் கூறப்படாத முஹம்மத் என்ற திக்ரானது வழிகேடும் மறுக்கப்படவேண்டியதுமுமாகும் என்பது தெளிவாகின்றது.

உங்களுக்கிடையில் ஒருவரையொருவர் அழைப்பதைப் போன்று ரஸுல் (ஸல்) அவர்களை அழைக்க வேண்டாம் என்று சூரத்துந் நூர் எனும் அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள இந்த ஆயத்தின் விளக்கவுரையில் நபி(ஸல்) அவர்களை உயிருடன் இருக்கும் போதும் மரணமடைந்த பின்னரும் பெயர் கூறி மரியாதையன்றி அழைக்கக் கூடாது என்று தப்ஸீர்களில் விளக்கப்பட்டது.

இவ்வாறு நபி (ஸல்) அவர்களை பெயர் கூறி மரியாதையின்றி முஹம்மத் என்று அழைப்பது அரபு நாட்டுக் காஃபிர்களின் வழக்கமாகவும் யூத , கிறிஸ்தவர்களின் வழக்கமாகவும் இருந்த காரணத்தால் அவ்வாறு அழைப்பது கூடாது என இந்த ஆயத்தில் அல்லாஹ: எச்சரிக்கைக் செய்கிறான் எனவே முஹம்மத் எனக் கூறுபவர்கள் அன்றையக் காஃபிர்கள் யூத கிருஸ்தர்களின் வழக்கத்தை கையாளுபவராக ஆகி விடுகின்றார்கள்.

நூபத்துல் கலாம் ஃபின்னிதா இ பிஸ்மின்னபிய்யி அலைஹஹீஸ:ஸலாம் என்ற நூ­ல் 34ம் பக்கத்தில் மேற்கண்ட ஆயத்தை ஆதாரமாகக் கொண்டு நபி(ஸல்) அவர்களை பெயர் கூறு அழைப்பது ஹராமாகும் என்பதற்கு 24 கிரந்தங்களை ஆதாரம் காட்டி எழுதியுள்ளார்கள் விரும்புவர்கள் அந்த நூலைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

எனவே நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் யா முஹம்மத் என்றோ அஹமத் என்றோ முஹம்மத் என்றோ மரியாதையின்றி கூறுபவர்கள் மேற்கண்ட ஆயத்திற்கு மாற்றம் செய்தவராவார் என்பது தெளிவாக்கப்படுகிறது.

மேற்கண்ட ஆயத்தி­ருந்து ரஸுலுல்லாஹி(ஸல்) அவர்களை பெயர் கூறி அழைப்பது எல்லா நேரங்களிலும் ஹராமாகும் என கீழ் குறிப்பிடும் மேதைகள் அனைவரும் அறிவித்துள்ளனர் என்று தகாயிருத்தலீல் என்ற நூ­ல் அல்லாமா நைனா முஹம்மது ஆ­லிம் அவ்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

1. இமாம் நவவீ (ரஹ்) ஸஹீஹ் முஸ்­லிம்
2. இமாம் முல்லா அலீ காரீ (ரஹ்)  மிஷ்காத்
3. காளி இயாள் (ரஹ்) கிதாபுஷ்ஷிபா
4. இமாம் கஸ்தலானி (ரஹ்) மவாஹிப்
5. இமாம் கயூதிப் (ரஹ்) அஹ்காமுல் குர்ஆன்
6. ஷைகு முஹம்மது ஸா­ஹ் (ரஹ்) அவர்களின் பதாவா
நூல் : தகாயுருத்தலீல் பக்கம்  4

ஆகவே, நபி(ஸல்) அவர்களை பெயர் கூறி முஹம்மத் என திக்ரு செய்வதால் ஷிர்க், ஹராம் என்ற இரண்டு பெரிய குற்றங்கள் ஏற்படுகின்றன. அல்லாஹ்வுடைய திருநாமத்தை போன்று அவனுக்கு இணையாக திக்ரு செய்வது ஷிர்க், மரியாதையின்றி நபியவர்கள் பெயர்கள் கூறுவது ஹராம்
(இர்ஃபானுல் ஹக் பக்கம் 72லி77)

மேற் கூறப்பட்ட கருத்துகளின் சாராம்சம்

• யா முஹம்மத் என்று திக்ரு செய்வது ஷிர்க் எனும் பெரிய பாவமாகும்
• ரஸுலுல்லாஹி (ஸல்) அவர்களையே திக்ரு செய்யக்கூடாது என்றால் யா முஹைய்யதீன் யா கௌஸ் என்று திக்ரு செய்து கொள்வதைப்பற்றி சிந்தித்துக் கொள்ள வேண்டும்.
• யா முஹம்மத் என்று பெயர் கூறி அழைப்பது ஹராம் (மரியாதையுடன் இவ்வாறு அழைக்கலாம் என்று சிலர் கூறுவர். இப்படி கூறுபவர்கள் தங்களை மரியாதையுடன் பெயர் சொல்­ அழைக்க அனுமதிப்பார்களா என்பதை சிந்திக்க வேண்டும். மேற்கூறப்பட்ட ஆயத்தையும் அதன் தஃப்ஸீர் விளக்கத்தையும் மேற்கூறிய 8 இமாம்களின் விளக்கத்தை மீண்டும் ஒரு முறை படிக்கவும்)
• யா முஹம்மத் என்று பெயர் கூறி அழைப்பவர்கள் காஃபிர்கள் யூத கிருஸ்தவர்களுக்கு ஒப்பானவர்.

சில ஊர்களில் திருமணம் உட்பட அனைத்து விசேசங்களிலும் யாநபி பைத் எனும் பைத்தை ஓதி வருகின்றார்கள். இந்த பைத்தின் ஷிர்க்கான வரிகள் வருவதோடு யா முஹம்மத் என்று ரஸுலுல்லாஹி (ஸல்) அவர்களைப் பெயர் கூறி அழைக்கும் நிலையும் உள்ளது. தமிழகத்தின் தாய்க் கல்லூரி என வர்ணிக்கப்படும் வேலூர் பாக்கியதுஸ் ஸா­லிஹாத் உட்பட தமிழகத்தின் அனைத்து மதரஸாக்களின் ஃபத்வாக்கள் இவ்வாறு உள்ளன என்று தெரிந்தும் இங்குள்ள போலி­ பாக்கவிகள் வறட்டு கவுரவுத்திற்காகவும் தங்களுடைய மரியாதை குறைந்து விடக்கூடாது என்பதற்காகவும் இந்த பைத்தை முன்னின்று பாடி வருகின்றனர். பொது மக்களாகிய நீங்கள் இனி மேலும் இந்த பையத்தை தொடர்ந்து படிப்பது, இந்த மதரஸாக்களை அவமதிப்பது மட்டுமல்லாமல் அல்லாஹ்விடத்தில் மன்னிக்கமுடியாத செயல் என்பதை உணர்ந்து இந்த கொடிய செய­­லிலிருந்து விடுபடுவதுடன் போலி­களையும் அடையாளம் கண்டு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். அல்லாஹ் நம்மை நேரான வழியில் செலுத்துவானாக!!

நன்றி : mpmpages

0 கருத்துகள்:

கருத்துரையிடுக