லண்டன்: ஜெர்மனியை பீதிக்குள்ளாக்கிய ஈ-கோலி பாக்டீரியா மீண்டும் அவரை செடிகள், பயிறு வகைகளில் பரவியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெர்மனியி்ல் வெள்ளரிக்காய்களில் ஈ-கோலி எனும் விஷ பாக்டீரியா 20 பேர்களை பலி வாங்கியது. மேலும் இந்த விஷ பாக்டீரியா ஐரோப்பா முழுவதையும் பீதிக்குள்ளாக்கியது. தற்போது அவரைச் செடியில் ஈ- கோலி பாக்டீரியா தொற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஜெர்மனியில் அவரை செடிகள் தீவிர ஆய்வுக்குட்படுத்தப்பட்டு்ள்ளன. இது குறித்து ஜெர்மனியின் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் ரெயின்ஹார்ட் பர்ஜெர் கூறுகையில் வடக்கு ஜெர்மனியில் உள்ள சக்ஸோனி என்ற இடத்தின் பண்ணையில் பயிரிடப்பட்டிருந்த அவரை செடிகளில் ஈ-கோலி விஷ பாக்டீரிய தொற்றியுள்ளதாக தெரிவித்தார்.
ஜெர்மன் விவசாயப்பணிகளை கலங்கடித்துள்ள இந்த ஈ-கோலி பாக்டீரியாவினால் , காய்கனிகளை நுகரும் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளதாக டெலிகிராப் பத்திரிகை செய்தி வெளியிட்டு்ள்ளது. இதனால் நாட்டில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்களுக்கு பயன்படும் அவரைக்காய்கள், பீன்ஸ்கள், மொச்சை பயிறுகள் அனுப்பி வைக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் வெள்ளரிக்காயில் பரவிய இந்த விஷ பாக்டீரியாவினால் பலியானவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
நன்றி :தாளம்நியூஸ்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக