அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

ஞாயிறு, 12 ஜூன், 2011

தூத்துக்குடி-கொழும்பு இடையிலான பயணிகள் கப்பல்

தூத்துக்குடி: தூத்துக்குடி-கொழும்பு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து 13ம் தேதி, நாளை தொடங்குகிறது.

இதற்காக தூத்துக்குடி துறைமுகத்தில் ஸ்கார்டியா பிரின்ஸ் என்ற 9 அடுக்கு கொண்ட பிரமாண்ட சொகுசு கப்பல் முதல் பயணத்துக்கு தயாராக உள்ளது.

தூத்துக்குடியில் இருந்து கொழும்புவுக்கும், ராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கும், பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கு இந்தியா- இலங்கை அரசுகள் புரிந்துணர்வு ஓப்பந்தம் செய்துள்ளன.

தூத்துக்குடி-கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து 13ம் தேதி, நாளை தொடங்குகிறது. தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள பயணிகள் முனைமத்தில் வைத்து அன்று மாலை 3 மணிக்கு மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜிகே வாசன் கொடியசைத்து பயணிகள் கப்பல் போக்குவரத்தினை தொடங்கி வைக்கிறார்.

இந்த விழாவில் கப்பல் அமைச்சக அதிகாரிகள், துறைமுக பொறுப்பு கழக ஊழியர்கள், முக்கிய விருந்தினர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை தூத்துக்குடி துறைமுக சபைத் தலைவர் சுப்பையா மற்றும் துறைமுக சபை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள செய்து வருகின்றனர்.

தூத்துக்குடியில் இருந்து கொழும்புவிக்கு ஸ்கார்டியா பிரின்ஸ் என்ற சொகுசு கப்பல் பயணிகளை ஏற்றி செல்ல உள்ளது. மும்பையை சேர்ந்த பிளமிங்கோ டூயூட்டி பெய்டு ஷாப் என்ற நிறுவனம் பயணிகள் கப்பலை இயக்குவதற்கான அனுமதியை பெற்றுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த ராஜா ஏஜென்சிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் பயணிகள் ஏற்றும் மற்றும் இறக்கும் பணிகளை செய்ய உள்ளது.

தூத்துக்குடியில் இருந்து 152 கடல் மைல் தொலைவில் உள்ள கொழும்வுக்கு இந்த கப்பல் 12 மணியிலிருந்து 14 மணி நேரத்திற்குள் சென்று சேரும். தூத்துக்குடியில் இருந்து திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு புறப்படும் இந்த கப்பல் மறுநாள் காலை 8 மணிக்கு கொழும்புவை சென்றடையும். கொழும்புவிலிருந்து வியாழன் மற்றும் ஞாயிற்றுகிழமை மாலை 6 மணிக்கு புறப்படும் கப்பல் மறுநாள் காலை 8 மணிக்கு தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து சேரும்.

நன்றி : thatstamil

0 கருத்துகள்:

கருத்துரையிடுக