அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

சனி, 11 ஜூன், 2011

சூரியனிலிருந்து வரும் மிகப் பெரிய தீ பிழம்பு

சூரியனின் மேற்பரப்பில் இருந்து கக்கப்பட்ட பாரிய தீப்பிழம்பொன்று மணிக்கு 31லட்சம் மைல் வேகத்தில் பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. திங்கள்கிழமை முதல் இந்த தீப்பிழம்பு பூமியை நோக்கி வர ஆரம்பித்துள்ளது.பயங்கர சத்தத்துடன் இது பூமியை நோக்கி வந்துகொண்டுள்ள போதிலும் யாரும் இது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று பேராசிரியர் பிரயன் கொக்ஸ் தெரிவித்துள்ளார்.

சூரியன் என்பது பூமியின் அளவைப் போன்ற ஒரு மில்லியன் மடங்கு பெரிய ஒரு பாரிய அணு உலையைப் போன்றது. அங்கும் இங்குள்ளதைப் போன்ற மோசமான காலநிலை ஏற்படுவதுண்டு.கடந்த திங்கள்கிழமை சூரியனின் காலநிலை மிகவும் மோசமடைந்துள்ளது. அதனால் சூரியனிலிருந்து பாரிய தீ சுவாலை வெளிப்பட்டுள்ளது.இதனை சூரியக் கிளர்ச்சி என்றும் வர்ணிக்கலாம். மிகவும் சூடேறிய பில்லியன் கணக்கான எடை கொண்ட துணிக்கைகள் ஒன்று சேர்ந்து பாரிய சுவாலையாக வெளியேறியுள்ளன.

இருந்தாலும் இந்த தீ சுவாலையின் வெளிப்பாடு நேரடியாக பூமியை நோக்கியதாக அமையவில்லை. அதனால் இதன் தாக்கமும் அவ்வளவாக பூமியில் உணரப்படவில்லை.பூமியின் தூர வடமுனைப் பகுதியில் வானத்தில் ஒளி விளக்குகள் நடனமாடுவதுபோல் இதை ஓரளவு காணலாம்.

அண்மைய வரலாற்றில் சூரியனிலிருந்து மிகப் பெரிய தீ பிழம்பு வெளிப்பட்டது 1859 செப்டம்பர் 1ல். இதை கெரிங்டன் பிழம்பு என்று குறிப்பிடுகின்றனர்.ஆங்கில வானியல் நிபுணர் சர் ரிச்சர்ட் கெரிங்டன் இதைக் கண்டறிந்ததால் இந்தப் பெயரில் இது அழைக்கப்படுகின்றது.
இதனோடு ஒப்பிடுகையில் தற்போது வெளிப்பட்டுள்ள பிழம்பு மிகவும் சிறியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கெரிங்டன் பிழம்பு போன்ற ஒன்று 500 வருடங்களுக்கு ஒரு தடவைதான் இடம்பெறும் சாத்தியம் உள்ளதாம்.

நன்றி : newsonews

0 கருத்துகள்:

கருத்துரையிடுக