அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

திங்கள், 25 ஏப்ரல், 2011

அரசு சட்டக் கல்லூரிகளில் மே 18ம் தேதி முதல் பி.எல்.பட்டப்படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும்

அரசு சட்டக் கல்லூரிகளில் பி.எல்., பட்டப்படிப்பிற்கான விண்ணப்பங்கள், அடுத்த மாதம் 18ம் தேதி முதல் வழங்கப்படும் என, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் விஜயகுமார் கூறினார்.


இதுகுறித்து டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் விஜயகுமார் கூறியது:

சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி உள்ளிட்ட அரசு சட்டக் கல்லூரிகளில், 2011-12ம் கல்வியாண்டிற்கான பி.எல்., பட்டப்படிப்பிற்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 18ம் தேதி முதல் வழங்கப்படும்.

விண்ணப்பங்களை சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருச்சி, கோவை, மதுரை மற்றும் நெல்லை ஆகிய இடங்களில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளிலும், சட்டப் பல்கலையிலும் பெறலாம். விண்ணப்பிக்க, ஜூன் 10ம் தேதி கடைசி நாள். ஐந்தாண்டு பி.எல்., பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிப்போர், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், மூன்றாண்டு பி.எல்., பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கான வயது வரம்பு, குறைந்தபட்ச மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

ஜூன் இறுதி வாரத்தில், "கவுன்சிலிங்' மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு, ஜூலை முதல் வாரத்தில் வகுப்புகளை துவங்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

Thanks : Abu Thafeem, Kollumeduxpress

0 கருத்துகள்:

கருத்துரையிடுக