அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

பரிணாமக் கோட்பாடு(Evolution Theory)-3

சென்ற வாரங்களில் பரிணாமக்கோட்பாட்டைப் பற்றி அறிந்தோம்.இனி வரும் வாரங்களில் இறைவனின் படைப்புகளைப் பற்றியும்,அவைகள் அவன் கூறுவதற்க்கேற்ப்ப எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.அல்லாஹ்வைத் தவிர மற்ற யாவையும் அவனால் படைக்கப் பட்டதுதான்.ஒரு பொருள் எவ்வாறு இயங்குகிறது என்பதை அதை உருவாக்கியவரைத் தவிர வேறு யாராலும் துல்லியமாக கூரமுடியாது.இறைவன் தன் படைப்புகளைப் பற்றி திருக் குர் ஆனிலும் தன் தூதர் நபி(ஸல்) மூலமும் கூறுகிறான்.சிலவற்றைப் பற்றி கூறி நம்மிடம் அவைகளை ஆராயுமாறும் கூறுகிறான்.

பாலைவனக்கப்பல்


                                أَفَلَا يَنظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ

ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? 88:17.

உலகில் தோற்றுவிக்கப்பட்ட உயிரினங்களில் இறைவன் தன்னுடைய படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்காக அதில் அதிசயிக்கத்தக்கப்பல மாற்றங்களை ஏற்படுத்தி விடுவான்.ஏகஇறைவன் தனது படைப்பினங்கள் பலவற்றில் (ஒன்றிலிருந்து மற்றொன்று பார்ப்பதற்கு ஒன்றுப் போலவே இருந்தாலும்) அதனுடைய உடலுக்குள் உள்ள உறுப்புகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடுவான்.
ஒட்டகத்தின் இறைச்சியும், அதனுடைய பாலும் உலகிலேயே கால்நடைகள் தரும் பாலில் அதிகசத்து நிறைந்துக் காணப்படுவது ஒட்டகப் பாலில் என்பதை நாம் அனைவரும் நன்கறிவோம்.இத்தனை அபரிமிதமான  சத்தை வழங்கக்கூடிய  ஒட்டகத்தின் பிரதான உணவு என்ன தெரியுமா ? முட்செடிகளும், காய்ந்த சருகுகளுமாகும் !முட்செடிகளையும் காய்ந்த சருகுகளையும் மேயந்து விட்டு இத்தனை அபரிமிதமான சத்துள்ள பாலை ஒட்டகம் தருகிறது என்றால் இறைவன் தனது ஆற்றலை மனிதர்கள் புரிந்து கொள்ளும் விதம் இதன் மூலமாகவும் வெளிப்படுத்துவதை கவனிக்க வேண்டும்.


பாலைவனத்தில் வாழ்க்கை நடத்திய மக்கள் உண்பதற்கே உணவு வகைகள் கிடைக்காத காலமது என்பதால் ஒட்டகத்திற்கு அவர்களால் எங்கிருந்து உயர்தர தீவணங்கள் கொண்டு வந்து கொடுக்க முடியும் ? தாராளமாக கிடைத்தால் கொடுப்பதில் எவ்வித நஷ்டமுமில்லை காரணம் அதற்கு கொடுப்பதை வட அதனிடமிருந்து பயனடைவது அதிகம்.அது இன்றைய காலத்தில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் போன்ற செல்லப்பிராணி அல்ல அந்த மக்களுக்கு அன்று ஒட்டகம் தவிர்க்க முடியாத பிராணி, ஒட்டகமில்லாமல் அவர்களால் எங்கும் பயணிக்க முடியாத நிலை, அதனால் எத்தனை உயர்தர தீவணங்கள் வேண்டுமானாலும் கொடுக்கலாம்,அந்தளவுக்கு திருப்பி பலனளிக்கக் கூடியது ஒட்டகம். ஆனாலும் கொடுக்க முடியாது.
அதற்கு காரணம் ஒன்று அவர்களது வறுமை, மற்றொன்று எளிதில் கிடைக்காது அதனால் அந்த சூழ்நிலைக்கொப்ப அங்கு எளிதில் கிடைபதைக் கொண்டு ஒட்டகம் தனது உணவை போதுமாக்கிக் கொள்வதற்காக பாலைவனத்தில் முளைக்கின்ற முட்செடிகளை அவற்றிற்கு உணவாக்கி அதை இலகுவாக உண்பதற்கு அவற்றின் உதடுகளை ரப்பர் போன்று இறைவன் வடிவமைத்தான்.
முட்செடிகளை உண்ணும்பொழுது அதனுடைய ரப்பர் போன்ற உதடுகளில் முட்கள் பட்டு நொறுங்கி விழுந்து இலைகள் மட்டுமே வாயிக்குள் செல்லும். அந்தளவுக்கு கைதேர்ந்தப் படைப்பாளன் ஏகஇறைவன் மிக நேர்த்தியாக ஒட்டகத்தை வடிவமைத்தான்.அவ்வாறான முட்செடிகளையும், காய்ந்த சருகுகளையும் உண்டு தரக்கூடிய ஒட்டகத்தின் பாலில் மனிதனின் உடல்நலத்திற்கு சிறந்த ஆரோக்கியத்தையும், நோய் நிவாரணிகளையும் ஏற்படுத்தினான் ஏகஇறைவன்.
அந்தக் காலத்தில் அரேபியர்கள் மிகவும் திடகாத்திரமான உடலமைப்புடன் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் அரேபியர்கள் அந்தளவுக்கு ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு கீரை, காய்கறிகள், பழங்கள் போன்றவைகள் சாப்பிடவில்லை அவைகள் பாலைவனத்தில் முளைப்பதில்லை அவர்களுடைய உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும், ஆரோக்கியத்தையும் வழங்கிக் கொண்டிருந்ததற்கு அவர்கள் தினந்தோறும் அருந்தி வந்த  ஒட்டகப்பால் முக்கிய காரணியாகத் திகழ்ந்தது. 
காலம் கடந்தேனும் இன்றைய மக்கள மேல்படி ஒட்டகப் பாலில் மற்ற பாலை விட எந்தளவுக்கு  சத்து கூடுதலாக இருக்கிறது என்றும் அற்றினால் உடல் நலத்திற்கு என்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கின்றன என்றும் என்ன மாதிரியான நோய்களை எதிர்க்கும் ஆற்றல்  இருக்கின்றன என்றும் விரிவான ஆய்வுகள் செய்து அறிவிக்கின்றனர்.
இந்தளவுக்கு உடல் ஆரோக்கியத்திற்கும் நோய்களை எதிர்க்கும் திறன் வாய்ந்த சத்தானப் பாலைத் தருகின்ற ஒட்டகம் உட்கொள்ளும் உணவு காய்ந்த சருகுகளும், முட்செடிகளும் தான் என்றால் வியப்பாக இல்லையா ?

ஒட்டகத்தின் பாலில் தனித்தன்மை வாய்ந்த இன்சுலின் உள்ளது இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது. பசும் பால் அலர்ஜி உள்ளவர்கள் ஒட்டகப்பாலை பயப்படாமல் குடிக்கலாம் ஏனென்றால் இதில் உள்ள புரோட்டீன்கள் வித்தியாசமானது மேலும் இதில் பாக்டிரியா, வைரஸ் எதிரப்பு சக்திகள் (Bactericidal, Virucidal) இயற்கையாகவே அமைந்துள்ளது. மேலும் விஞ்ஞான ஆராய்ச்சிகள் இது Sever skin condition, Auto immune diseases, Psoriasis, Multiple Sclerosis போன்ற நோய்களையும் குணப்படுத்தும்.
விட்டமின் பீ,சீ சத்துக்களை நிறையக் கொண்ட ஒட்டகப் பாலில், பசுப் பாலில் இருப்பதைவிட பத்து மடங்கு அதிகமான இரும்புச் சத்து இருப்பதாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது. பசும்பாலை விட இனிப்புக் குறைவான ஒட்டகப் பால், வளைகுடா நாடுகளெங்கும் அபரிதமாக அருந்தி வருகின்றார்கள். Harrods, Fortnum & Mason போன்ற பாரிய விற்பனை நிலையங்கள், பெட்டிகளில் அடைக்கப்பட்ட ஒட்டகப் பாலை விற்பனை செய்வதில் உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன. விட்டமின் சத்துடையது என்பது மட்டுமல்ல, புற்றுநோய், எயிட்ஸ் போன்றவற்றை எதிர்க்கும் சக்தியையும் ஒட்டகப்பால் கொண்டிருக்கின்றது.

ஆதாரம்: http://tamilcyber.com/home/index.php?option=com_content&task=view&id=80&Itemid=1
நம்மில் பலர் பசும் பால் அல்லது எருமைப் பாலை அருந்தியிருப்போம்.ஏன், தமிழக கிராமங்களில் ஆட்டுப் பால் கூட குடித்திருப்பார்கள்.ஆனால் ஒட்டகப் பால் பற்றி அறிந்திருக்கிறீர்களா? ஒட்டகப் பாலின் மருத்துவ குணங்கள் அளவிடற்கரியது.ஒட்டகப்பாலில் உள்ள மருத்துவ பலன்களில் ஆண்மையின்மையை போக்கும் பலனும் உள்ளது.இந்திய சந்தையில் ஒட்டகப் பாலுக்கு உள்ள வரவேற்பைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக ராஜஸ்தான் பால் சங்கம் (ஆர்எம்எஃப்) அண்மையில் ஒட்டகப் பால் பாக்கெட்டுகள் விற்பனையை அறிமுகப்படுத்தியது.தற்போது ஒட்டகப் பால் பாக்கெட்டுகள் ஜெய்ப்பூர், பிகானிர், புதுடெல்லி மற்றும் புதுடெல்லியில் உள்ள சராஸ் பால் கடைகளில் கிடைக்கின்றன.
ஒட்டகப் பாலில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் தவிர ஆண்மையின்மையை போக்கக்கூடிய திறனுடன் சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தலைநகர் டெல்லியில், ஒட்டகப் பாலுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக ஆர்.எம்.எஃப். அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சர்க்கரை நோய்க்கு ஒட்டகப்பால் மிகவும் சிறந்தது என்றும்,  ஒட்டகப்பாலின் குணங்கள் பற்றி பல கட்டுரைகள் படித்திருப்பதாகவும், வி.பி.சர்மா என்ற நுகர்வோர் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். சர்க்கரை நோயாளிகள் ஒட்டகப் பாலை அருந்துமாறு தாம் கேட்டுக் கொள்வதாகவும், நோய் இல்லாதவர்களும் கூட இதனை தினமும் குடித்து வரலாம் என்றும் அவர் கூறினார். ராஜஸ்தானின் கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த வயதானோர் இதுபற்றிக் கூறுகையில், ஒட்டகப் பாலில் ஆண்மையை அதிகரிக்கும் மருத்துவ சக்தி உள்ளதாகக்கூறுகிறார்கள்.

ஒட்டகப் பால் பாக்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மாதத்தில், நாளொன்றுக்கு ஆயிரம் லிட்டர் சராசரியாக விற்பனை செய்யப்படுகிறது. ராஜஸ்தான் முழுவதிலும் நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் லிட்டர் ஒட்டகப்பாலை பெறமுடியும் என்று ஆர்எம்எஃப் ஏற்கனவே மதிப்பீடு செய்துள்ளது.ஆண்மையின்மை சமீப காலங்களில் அதிகரித்து வருவதும் ஒட்டகப்பால் நுகர்வை முக்கியப் படுத்தியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.துவக்கத்தில் சர்க்கரை நோயாளிகளிடம் இருந்தும், நடுத்தர வயதுடைய நுகர்வோரிடம் இருந்தும் ஒட்டகப் பாலுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும், சந்தையில் அதிக அளவில் ஒட்டகப்பால் கிடைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் சராஸ் பால் பண்ணை நிர்வாக இயக்குனர் மதுக்கர் குப்தா தெரிவித்துள்ளார்.
ஒட்டகப் பாலில் லெனோலின் அமிலம் உட்பட 6 வகையான அமிலங்கள் காணப்படுவதாகவும் உடலின் சுருக்கங்களை போக்குவது உள்ளிட்ட தோல் தொடர்பான வியாதிகளையும் நிவர்த்தி செய்வதாக உள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. எது எப்படியோ ஒட்டகப் பால் விரைவில் அனைத்து இடங்களிலும் கிடைக்கப்போவது உறுதி. ஆதாரம்:  http://tamil.webdunia.com/miscellaneous/health/articles/0807/31/1080731054_1.htm
1400 வருடங்களுக்கு முன்னரே பெருமானார் (ஸல்) அவர்கள் ஒட்டகப் பாலில் நோய் நிவாரணி இருப்பதைக் கண்டறிந்துக் கூறினார்கள்.அன்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறிய மருத்துவக் குறிப்புகள் அனைத்தையும் இன்றைய மருத்துவர்களின், இன்னும் வேறுப் பல ஆராய்ச்சியாளர்களின் விரிவான ஆய்வறிக்கைள் மெய்ப்படுத்தி வருகின்றன.

மதீனா வந்த 'உக்ல்' மற்றும் 'உரைனா' குலத்து மக்கள் சிலருக்கு நோய் ஏற்பட்டது.அவர்கள் 'இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு அடைக்கலம் அளித்து உணவும் அளியுங்கள்'' என்று கேட்டனர்.(அவ்வாறே அவர்களுக்கு அடைக்கலம் தந்து உணவும் அளிக்கப்பட்டது. பசிப் பிணி நீங்கி) அவர்கள் நலம் பெற்றபோது 'மதீனா(வின் தட்ப வெப்பநிலை) எங்களுக்கு ஒத்து வரவில்லை'' என்று கூறினர். அவர்களை நபி(ஸல்) அவர்கள் பாறைகள் நிறைந்த 'அல்ஹர்ரா' எனும் இடத்தில் தம் ஒட்டகங்கள் சிலவற்றுடன் தங்கச்செய்து 'இவற்றின் பாலை அருந்துங்கள்'' என்று கூறினார்கள். அவர்கள் குணமடைந்தபோது நபி(ஸல்)அவர்களின் (ஒட்டக) மேய்ப்பாளரைக் கொன்றுவிட்டு அவர்களின் ஒட்டகங்களை இழுத்துச்சென்றுவிட்டனர்... அனஸ்(ரலி) அவர்கள் கூறிய புகாரியின் ஹதீஸ் சுருக்கம். 5685.  
இந்தளவுக்கு மனித இனத்தின் ஆரோக்கியத்திற்காக அபரிமிதமான சத்தையும் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தப் பாலை வழங்கக் கூடிய ஒட்டகம் பயணிகளை சுமந்து செல்வதால் எப்பொழுதாவது சோர்வடையும் நிலை ஏற்பட்டால் தனக்கு தேவையான சத்தை எங்கிருந்து பெறுகிறது தெரியுமா ?
அதன் உடம்பில் புரோட்டீன் என்ற சத்து குறைய ஆரம்பித்ததும் சிறுநீரில் வெளியாகும் யூரியா என்ற கழிவின் அளவை குறைத்துக்கொண்டு அதை (Microbial Synthesis) புரோட்டீனோடு கலந்து சக்தியாக மாற்றிவிடுகிறது அதன் சிறுநீரகம். சுப்ஹானல்லாஹ் அல்லாஹ் தூயவன்.
ஏகஇறைவன் அல்லாஹ் கைதேர்நத படைப்பாளன் என்பதற்கு இதை விட ஒரு சான்றுத் தேவையா ? ஒட்டகத்திற்குள் இன்னும் ஏராளமான சான்றுகளை இறைவன் வைத்துப் படைத்திருக்கிறான். 

அல்லாஹ் நாடினால் அதையும் பார்க்கலாம்.


நன்றி : அதிரை ஏ.எம்.பாரூக்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக