பத்தாம் வகுப்பு மெட்ரிக்குலேசன் தேர்வு கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நாளை மறுநாள் (11-ந் தேதி) மெட்ரிக்குலேசன் தேர்வு முடிகிறது. தமிழ், ஆங்கிலம் தேர்வுகள் எளிதாக இருந்ததாக மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். ஆனால் கடந்த 28-ந் தேதி நடந்த கணிதம் தேர்வில் முதல்நாளில் முதல் கேள்வி சற்று சிக்கலானதாக இருந்ததால் மாணவ-மாணவிகள் குழப்பம் அடைந்தனர்.
அந்த கேள்வி நுணுக்கமாக கேட்கப்பட்டிருந்தது. அதற்கான விடையை 4 பதில்களில் இருந்து தேர்ந்தெடுக்க சிரமம் ஏற்பட்டது. அந்த கேள்விக்கான விடை காண்பதில் ஆசிரியர்களிடம் கூட மாறுபட்ட கருத்துக்கள் எழுந்தது.
பரீட்சை எழுதி முடித்து விட்டு வெளியில் வந்த மாணவ-மாணவிகள் இது பற்றியே விவாதித்தனர். நன்றாக படிக்கும் மாணவ- மாணவிகளே அந்த கேள்வியால் கவலைப்பட நேரிட்டது.
இது தொடர்பாக அரசு தேர்வுத்துறை கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. தேர்வுத்துறை அதிகாரிகள் அதை பரிசீலித்து, கணிதம் பாடத்தில் முதல் கேள்விக்கு பதில் அளித்த அனைவருக்கும் உரிய மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவித்தனர். தேர்வுத்துறை உயர் அதிகாரி ஒருவர் இதை உறுதிப்படுத்தினார்.
நன்றி : பரங்கிப்பேட்டைTNTJ
0 கருத்துகள்:
கருத்துரையிடுக