இன்றைய உலகம் அறிவியல் முன்னேற்றத்திற்க்கு பஞ்சமில்லாமலும், அதே நேரத்தில் பலவிதமான நோய்களுக்கும் பஞ்சமில்லாமல் மாறிவிட்டது. வருடத்திற்கு ஒரு நோய் பிரபலிமாகிக் கொண்டே வருகிறது. ஒரு வருடத்தில் சார்ஸ் இன்னொரு வருடத்தில் பறவைக் காய்ச்சல் இப்பொழுது பன்றிக் காய்ச்சல் என்று அச்சுறுத்திவருகிறது. அதிலும் குறிப்பாக உலக அளவில் தூய்மையில் முதலிடத்தை பிடிக்கும் சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள்தான் இந்நோயின் பிறப்பிடமாக உள்ளன. அந்நாடுகளிலிருந்துதான் பிற நாடுகளுக்கு அந்நோய்களும் விமானங்கள் கப்பல்கள் வழியாக இறக்குமதியும் செய்யப்படுகின்றன. இந்நேரத்தில் நம்முடைய மனதில் ஒரு நியாயமான கேள்வி எழலாம். அந்நாடுகள் உலகிலேயே மிகப்பெரிய பணக்கார நாடுகளாகவும் அறிவியல் கண்டுபிடிப்புகளில் முன்னேற்றம் பெற்றவையாகவும் உள்ளனவே! இதை வைத்து கொண்டு மிகத் தூய்மையாகவும், நோய் தடுப்பு முறைகளை மேற்கொண்டிருக்கலாமே?
இது ஏறக்குறைய உண்மையான கருத்துதான். ஆனால் நோய் வந்த பின் அதற்கான மருத்துவமும் மருந்தும் எடுத்து கொள்கிறார்களே தவிர அதற்கான நோய் தடுப்பு முறைகளையும் சரியான தூய்மையையும் அறியாதவர்களாகத்தான் இன்றைய அறிவியல் முன்னேற்றமடைந்தவர்களை காண முடிகிறது.
ஆனால் 1400 வருடங்களுக்கு முன் எந்த நவீன வளர்ச்சியுமடையாத இருண்ட காலத்தில், இஸ்லாம் நவீனவாதிகளுக்கு தூய்மையையும் நோய் தடுப்பு முறைகளையும் பாடமாக கற்றுத் தருகிறது. அதிலும் இஸ்லாம் அல்லாஹ்வுடைய மார்க்கமாக இருப்பதால் தூய்மையை கண்மூடித்தனமாக போதிக்காமல் இன்றைய விஞ்ஞானி உயர் தொழில்நுட்ப அறிவியல் சாதனங்களை வைத்து கொண்டு பல வருடங் களாக ஆய்வு செய்து ஒரு நோய்க்கான காரணிகளையும் அதன் தடுப்பு முறையான தூய்மையின் அவசியத்தை எவ்வாறு கூறுவானோ அதை போன்று கூறுகிறது.
இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களிடத்தில் அல்லாஹ் மக்களுக்கு மார்க்கத்தை எடுத்து சொல்லுமாறு கட்டளையிட்டபோது முதலில் அவர்களுக்கு சொன்ன கட்டளை
உன் ஆடையை தூய்மைப்படுத்துவீராக. அசுத்தத்தை வெறுப்பீராக. (அல்குர்ஆன் 74:34)
இஸ்லாத்தில் ஆரம்ப போதனைகளில் தூய்மையாக இருக்க வேண்டும் என்ற கட்டளையும் இருந்தது என்பதை நம்மால் விளங்க முடிகிறது. இன் னும் இஸ்லாம் இறைவனை நம்புகின்ற நம்பிக்கையில் ஒரு பகுதியாகவே தூய்மையை கூறுகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், தூய்மை என்பது இறை நம்பிக்கையில் பாதி, அறிவிப்பவர் : அபூமாலிக் அல்அஷ் அரீ (ரலி), நூல் : முஸ்லிம் 381
இஸ்லாத்தில் இறைவனை வணங்குவதற்கு அடையாளமான தொழுகைக்கு கூட தூய்மை என்று இஸ்லாம் கூறுகிறது. இல்லையென்றால் அந்த வணக்கம் கூட ஏற்றுக் கொள்ளப்படாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
தூய்மையில்லாமல் தொழுகை இல்லை அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : முஸ்லிம் 382
இவ்வாறு எந்த ஒரு கட்டத்திலும் இஸ்லாம் தூய்மையை போதிக்காமல் இருந்ததில்லை. ஒரு முஸ்லிமாக இருப்பதற்கு அவசியம் தூய்மை என் பதை இவைகளின் மூலமாக விளங்கிக் கொள்ள முடிகிறது.
இஸ்லாம் ஒரு மனிதன் தூங்கி எழுந்ததிலிருந்தே தூய்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
உங்களில் ஒருவர் தூங்கி விழித்தெழுந்தால் மூன்று முறை தன் கையை கழுவுகின்றவரை பாத்திரத்தில் கையை நுழைக்க வேண் டாம். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் 468
இந்த உலகில் கண்ணுக்கு தெரிந்த உயிரினங்களைப்போல கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்களும் உள்ளன. அவைகளில் சில நமக்கு நன்மை தரக்கூடியன. பெரும்பலானவை நமக்கு தீங்கு விளைவிப்பவைகள். இவைகளை நாம் சாதாரண கண்களால் பார்க்க முடியாது. அவைகளை பெரிதுபடுத்திக் காட்டக்கூடிய நுண்ணோக்கிகளால் மட்டுமே காண முடி யும். அவைகள் நீரிலும் நிலத்திலும் அசுத்தமான இடங்களிலும், ஏன் நம்மு டைய உடலில் கூட வாழக்கூடியன. இன்னும் நம் உடல் தான் அவைகள் வளர்வதற்கு ஏற்ற இடமாகவும் அதற்கு தேவையான உணவுப் பொருட்கள் கிடைக்குமிடமாகவும் உள்ளது. இவ்வாறு அவைகள் நம் உடலில் வாழ்ந்தால் பல விதமான நோய்களுக்கும் நம்முடைய உடல் உறுப்புகளின் கோளாறுகளுக்கும் வழி வகுக் கிறது. இன்னும் நமது உயிருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நுண்கிருமிகள் தொற்றுவதற்கு முதல் காரணம் நம்முடைய இரண்டு கைகள்தான். இதன் வழியாக தான் எல்லாவிதமான கிருமிகளும் தொற்றுகின்றன. இதனால் தான் இன்றைக்கு பன்றிக் காய்ச்சல் பற்றிய அரசின் எச்சரிக்கை அறிக்கையில் அது வரமால் தடுக்க வெளியே சென்று வந்தால் இரண்டு கைகளையும் நன்கு கழுவ வேண்டும் என்று கட்டளையை போடுகிறது.
இன்னும் அமெரிக்காவில் ஒருவருக்கு மூளையில் ஒருவகையான நுண் கிருமி உருவாக்கிய கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது அவருடைய உயிருக்கே மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கக் கூடியதாக மாறி கடைசியில் அந்த நுண் கிருமியை அகற்ற முடியாது எனவும் அவர் ஆயுள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறி விட்டனர். இதற்கான காரணத்தை உயிரியில் ஆய்வாளர்களும் மருத்துவர்களும் விளக்கும்போது இது கைகளை சரியாக கழுவாமல் தூய்மையின்றி குடிப்ப தாலோ உண்பதாலோ இந்த நோய்கிருமிகள் கைகள் வழியாக பரவி மூளைக்கு செல்லக்கூடியது என்று கண்டுபிடித்துள்ளனர்
ஆதாரம் : மான்ஸ்டர்ஸ் இன்ஸைட் மீ டிஸ்கவரி சேனல்
தொடரும் இன்ஷா அல்லாஹ்....
நன்றி : F.அர்ஷத் அலி, தீன்குலப்பெண்மணி, ஆன்லைன் பி.ஜே & கடையநல்லூர் அக்ஸா

0 கருத்துகள்:
கருத்துரையிடுக