அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

ஜம்ஜம்-அதிசய நீரூற்று

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன.அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார்.அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை.யாரேனும்(ஏக இறைவனை)மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்(3:97)

மக்காவில் உள்ள ஜம் ஜம் நீரூற்று அல்லாஹ்வின் தெளிவான அத்தாட்சியாகும்.இப்ராஹீம் நபி அவர்கள் தமது மனைவி ஹாஜர் அவர்களையும் மகன் இஸ்மாயீலையும் அப்போது மக்கள் குடியிருக்காத வெட்ட வெளியில் இறைவனின் கட்டளைப்படி குடியமர்த்தினார்கள்.
                                                                           

                                                                                                                   (பழைய படம்)

குழந்தை இஸ்மாயீல் தண்ணீரின்றி தத்தளித்த போது வானவர் ஜிப்ரீல் வந்து அந்த இடத்தில் அடித்து ஒரு நீரூற்றை ஏற்ப்படுத்தினார்.அதுதான் ஜம்ஜம் எனும் கிணறாகும்.இந்தக் கிணறு மாபெரும் அற்புதமாக இஸ்லாம் உண்மை மார்க்கம் என்பதை நிரூபிக்கும் சான்றாக இருக்கிறது.இந்தக் கிணறு 18 அடி அகலமும் 14 அடி நீளமும் கொண்டதாகும்.இந்தக் கிணற்றில் தண்ணீரின் ஆழம் எப்போதும் சுமார் 5 அடியாகும்.இந்தக் கிணற்றிலிருந்து ஒவ்வொரு வினாடியும் தண்ணீர் இறைக்கப்பட்டுக்கொண்டே உள்ளது.வருடதின் எல்லா நாட்களிலும் மக்கள் அங்கே குழுமுகிறார்கள்.ஹஜ் காலத்திலும் ரமலான் மாதத்திலும் சுமார் 20 இலட்சம் மக்கள் அங்கே குழுமுகிறார்கள்.அனைவருக்கும் இந்த கிணற்றிலிருந்துதான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.ஒவ்வொருவரும் 20 லிட்டருக்குக் குறையாமல் அந்த தண்ணீரைத் தமது சொந்த ஊருக்கும் எடுத்துச் செல்கிறார்கள்.

பாலைவனத்தில் அமைந்துள்ள குறைந்த ஆழம் உள்ள, அருகில் ஏரிகளோ கண்மாய்களோ குளம் குட்டைகளோ இல்லாத அந்தக் கிணற்றில் இருந்து எப்படி லட்சோப லட்சம் மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது என்பது முதலாவது அற்புதமாகும்.எந்த ஊற்றாக இருந்தாலும் சில வருடங்களிலோ பல வருடங்களிலோ செயலிழந்து போய்விடும்.ஆனால் இந்த ஊற்று பல ஆயிரம் ஆண்டுகளாக வற்றாமல் இருப்பது இரண்டாவது அற்புதமாகும்.எந்த ஒரு நீர் நிலையாக இருந்தாலும் பாசி படிந்து போவதும் கிருமிகள் உற்பத்தியாவதும் இயற்கை.இதனால்தான் குளோரின் போன்ற மருந்துகள் நீர் நிலைகளில் கலக்கப்படுகின்றன.ஆனால் ஜம்ஜம் தண்ணீரில் அது உற்பத்தியான காலம் முதல் இன்று வரை எந்த மருந்துகள் மூலமும் அது பாதுகாக்கப்படாமல் தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்வது மூன்றவது அற்புதமாகும்.

மருந்துகளால் பாதுகாக்கப்படாத தண்ணீர் குடிப்பதற்க்கு ஏற்றதாக இருக்காது என்பது அறிவியலின் முடிவாகும்.ஆனால் இந்த தண்ணீர் 1971ம் ஆண்டு ஐரோப்பிய சோதனைச் சாலையில் சோதித்து பார்க்கப்பட்ட போது இது குடிப்பதற்க்கு மிகவும் ஏற்ற நீர் என்று நிரூபிக்கப்பட்டது.பொதுவாக மற்ற நீரில் இருந்து ஜம்ஜம் தண்ணீர் மட்டும் வேறுபட்டுள்ளதும் சோதனையில் தெரிய வந்துள்ளது.கால்சியம் மற்றும் மெக்னீஷியம் எனும் உப்பு மற்ற வகை தண்ணீரை விட ஜம்ஜம் தண்ணீரில் அதிகமாக உள்ளது.இந்த உப்புக்கள் புத்துணர்ச்சியை கொடுக்கக்கூடியவை.இதை அனுபவத்தில் உணரலாம்.மேலும் இந்தத் தண்ணீரில் ஃப்ளூரைடு உள்ளது.இது கிருமிகளை அழிக்க வல்லது.அங்கே அற்புதம் நடக்கிறது இங்கே அற்புதம் நடக்கிறது என்றெல்லாம் பலவாறான நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது.அதுபோல் இதையும் கருதக்கூடாது.மற்ற அற்புதங்கள் எல்லாம் எந்த சோதனைக்கும் உட்படுத்தப்படாதவை, நிரூபிக்கப்படாமல் குருட்டு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை.ஆனால் தினசரி 20 லட்சம் மக்களுக்கு அந்தத் தண்ணீர் குடி நீராகப் பயன்படுவதும், பாலைவனத்தில் இந்த அதிசயம் பல்லாயிரம் ஆண்டுகளாக நடந்து வருவதும் எல்லாவித சோதனைக்கும் உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் இது மெய்யான அற்புதமாகும்.இது போன்ற அற்புதம் உலகில் இது ஒன்றுதான் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

(பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பிலிருந்து..)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக