அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

சனி, 28 ஜனவரி, 2012

மீஸான்-(தராசு)

- இப்னு தாஹிரா

இவ்வுலகத்தில் நன்மை செய்தவர்களும் தீமை செய்தவர்களும் மறுமை நாளில் அவரவர்களின் நன்மை, தீமைகளை தெளிவாகக் காண்பார்கள். இவ்வுலகில் மிக மிகச் சிறியதாக நினைத்தவை கூட அவர்களின் பதிவுப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும். 

அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார். அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார். (அல்குர்ஆன் 99:7,8)

பதிவேடு வைக்கப்படும். அதில் உள்ளவற்றின் காரணமாக குற்றவாளிகள் அச்சமடைந்திருக்கக் காண்பீர்! இந்த ஏட்டுக்கு என்ன வந்தது? சிறியதையோ பெரியதையோ ஒன்று விடாமல் பதிவு செய்துள்ளதே! எனக் கூறுவார்கள். தாங்கள் செய்தவற்றைக் கண் முன்னே காண்பார்கள். உமது இறைவன்எவருக்கும் அநீதி இழைக்க மாட்டான். (அல்குர்ஆன் 18:49) 

பதிவேட்டைப் பார்த்து அதிர்ந்து போகும் மனிதன், இந்தப் புத்தகம் தனக்குக் கொடுக்கப்படாமல் இருக்க வேண்டுமே என்று கதறுவான். புத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன் எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா? எனது விசாரணை என்னவாகும் என்பதுதெரியவில்லையே! (இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதா? எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே! எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்து விட்டதே! எனக் கூறுவான். (அல்குர்ஆன் 69:25-29) 
இவ்வாறு மறுமை நாளில் மனிதன் செய்த செயல்களை அளவிட்டு, அதற்கு ஏற்றவாறு கூலியும் தண்டனையும் வழங்கப்படும்.
கியாமத் நாளுக்காக நீதியான தராசுகளை நிறுவுவோம். எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. ஒரு கடுகு விதை அளவே இருந்த போதும் அதையும் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும். (அல்குர்ஆன் 21:47)
மீஸான் (தராசு) மூலம் அளவிடப்படும் என்பதற்கு, இவ்வுலகில் நாம் பார்க்கும் தராசுகளை வைத்து அளவிடப்படும் என்று கருதத் தேவையில்லை. இப்போது உள்ள நவீன காலத்தில் மிக எளிதாக அளவிடும் மின்னணு இயந்திரங்கள் மிகத் துள்ளிமாகக் கணக்கிடுகின்றன. ஆனால் இவை நாம் செய்யும் அமல்களைக் கணக்கிடாது. வல்ல

போற்றுதலுக்குரியவர்கள் யார்?

என் தோழர்களை ஏசாதீர்கள்! ஏனெனில், நிச்சயமாக யார் கைவசம் என் உயிர் இருக்கின்றதோ அவன்மீது ஆணையாக"உஹத் மலையளவு தங்கத்தை எவர் தர்மம் செய்தபோதும் என் தோழர்களின் நிலையை அடைய முடியாது, ஏன் அதில் பாதியளவு கூட அடையமுடியாது" என்று நபிகள் (ஸல்) அவர்கள் நவின்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்)
சோதனைஅண்ணல் நபி(ஸல்) அவர்கள் சத்திய இஸ்லாத்தை அரபுத் தீபகற்பத்தில் முழங்கியபோது, அவர்களுக்கு ஏற்ப்பட்ட இன்னல்களும், அவர்கள் மீது வீசப்பட்ட இழிசொற்களும் வசைமாரிகளும் கொஞ்ச நஞ்சமல்ல.அவர்கள் சத்தியத்தைச் சொன்னதற்காக அவர்களின் குடும்பத்தையே சமூகப் பரிகாசம் செய்தனர். பொருளாதாரத் தடை விதித்தனர். அவர்களின் உறவினர் கூட எவ்வித உதவியும் செய்யக்கூடது என்று கட்டுப்பாடு விதித்தனர். மண்ணை வாரி இறைத்தது ஒரு கூட்டம். பைத்தியம் என பட்டம் சூட்டி மகிழ்ந்தது ஒரு கூட்டம். அவர்கள் நடந்து செல்லும் பாதையில் முள்ளை பரப்பி வைத்து விட்டு மறைந்து நின்று ரசித்துக் கொண்டிருந்தது இன்னொருமொரு கூட்டம். இரத்தம் சிந்தும் அளவுக்கு கல்லால் எறிந்து, கடுமொழி கூறி நின்றது தாயிப் நகரில் ஒரு கூட்டம். அவர்களுக்கு ஏற்பட்டது போன்ற ஒரு துன்பம் உலகில் எந்த மனிதனுக்கும் ஏற்பட்டதில்லை எனலாம்.

இதனால்தான் அண்ணல் நபி(ஸல்) அவர்கள்"எனக்கு ஏற்ப்பட்ட சோதனைகளும் துன்பங்களூம், துன்பத்தில் வீழ்ந்து கிடக்கின்ற இஸ்லாமியருக்கு ஆறுதல் அளிக்கட்டும் என்று கூறினார்கள்"(அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் இப்னு காசிம்(ரழி)
நூல்: மூஅத்தா)
தியாக பெருமக்கள்
இத்தைகைய இக்கட்டான சூழ்நிலையில்தான் ஒரு கூட்டத்தினர் இஸ்லாத்தை ஏற்றனர். இஸ்லாத்தை ஏற்றால் தங்கள் உயிரே

வெள்ளி, 20 ஜனவரி, 2012

இனி ஹஜ் விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் ஒரிஜினல் வேண்டாம்


புதுடெல்லி:புனித ஹஜ்ஜிற்கான விண்ணப்பத்துடன் ஒரிஜினல் பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்கும் நிபந்தனையை தளர்த்த சேர்மன் முஹ்ஸினா கித்வாய் தலைமையில் விஞ்ஞான் பவனில் நடந்த ஹஜ் கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இனி ஹஜ்ஜிற்கு விண்ணப்பிக்கும் வேளையில் பாஸ்போர்ட்டின் நகலை மட்டும் இணைத்தால் போதுமானது. பின்னர் ஹஜ்ஜிற்கு செல்ல தேர்வு செய்யப்பட்ட பிறகு ஒரிஜினலை சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாண்டு இந்திய ஹஜ் கமிட்டி வழியாக ஹஜ் பயணம் செல்ல விண்ணப்பிக்க கடைசி தினம் ஏப்ரல் 15 ஆம் தேதி ஆகும். விண்ணப்பிக்கு அனைத்து நபர்களின் ஒரிஜினல் பாஸ்போர்ட்டுகளை பெற்றுவிட்டு பின்னர் தேர்ந்தெடுக்காத நபர்களின் பாஸ்போர்ட்டுகளை திரும்ப அளிக்கும் வழக்கம் இதுவரை நடைமுறையில் இருந்தது. இது விண்ணப்பதாரருக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாக புகார் எழுந்தது.ஹரம் ஷெரீஃபிற்கு அருகில் தங்குவதற்கு வசதி கிடைக்கும் ‘க்ரீன் கேட்டகரி’ யின் தூரம் 1500 மீட்டர் ஆக உயர்த்தவும் தீர்மானிக்கப்பட்டது.

1200-2000 மீட்டர் தூரம் கொண்ட ‘வைட் கேட்டகரி’ முற்றிலும் நீக்கப்பட்டது. ஹரமில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அஸீஸியாவில் தங்குமிட வசதிகளில் மாற்றமில்லை.’க்ரீன்கேட்டகரியின்’ கட்டணம் 4000 ஆயிரம் ரியாலில் இருந்து 4500 ரியாலாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஹஜ் கிரியைகளில் ஒன்றான ஆடுகளை பலி கொடுக்க(குர்பான்)  இஸ்லாமிக் டெவலப்மெண்ட் வங்கி வழியாக செய்ய விருப்பமுள்ளவர்கள் அதற்கும் விண்ணப்பிக்கலாம்.

நன்றி : thoothuonline

வெள்ளி, 13 ஜனவரி, 2012

உனக்குக் கீழே உள்ளவர்கள் கோடி

பொருளாதார ரீதியில் தன்னை விட செல்வந்தனாக இருப்பவனைப் பார்த்து மனிதன் தன்னை வேதனையில் ஆழ்த்திக் கொள்கின்றான். அவன் மீது பொறாமைப் பட்டு ஏக்கப் பெருமூச்சு விடுகின்றான். இறுதியில் அந்தப் பணக்காரனை கொலை செய்யக் கூட துணிந்து விடுகின்றான். இது போல் ஒரு எளிய குடும்பம் செல்வந்த குடும்பத்தைப் பார்த்து கவலைப்படுகின்றது.

ஒரு நாடாளும் மன்னன் தனது நாட்டை விட பொருளாதார செழிப்பில் உள்ள நாட்டைப் பார்த்து பொறாமை கொள்கின்றான்.  இதன் இறுதிக் கட்டம் போரில் போய் முடிகின்றது.  இலட்சக்கணக்கான உயிர்கள் மடிகின்றன.

இது போல் உடலமைப்பு ரீதியில் ஒருவன் தன்னை விட அழகானவனைக் காணும் போது அவன் மீது பொறாமை கொள்கின்றான். அந்த அழகின் காரணமாக அவனுக்குக் கிடைக்கும் சிறப்புகளைப் பார்த்தால் இது மேலும் அதிகமாகி இவனது மனதில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகின்றது.  இறுதியில் மனநோயாளியாக மாறி அந்த அழகானவனைக் கொலை செய்யும் நிலைக்குச் சென்று விடுகின்றான்.


இப்படி உலகின் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு இது தான் அடிப்படைக் காரணம் என்று சொன்னால் மிகையாகாது.

இங்கு தான் மனித உளவியலை அறிந்த எல்லாம் வல்ல அல்லாஹ் மனித வாழ்வியலுக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மூலம் ஓர் அற்புத வழிகாட்டலை வழங்குகின்றான். மனிதர்களிடம் குடி கொண்டிருக்கும் இந்தப் புற்று நோய்க்கு சிறந்த மாமருந்தை வழங்குகின்றான். அந்த அருமருந்து இதோ:
 
''
செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால், உடனே (அவற்றில்) தம்மை விடக் கீழானவர்களை அவர் பார்க்கட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)நூல் : புகாரி 6490

அகிலப் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் இந்த அருமருந்து தான் இன்று, உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு   காலில் செருப்பில்லை என்று ஒருவர் கவலையுடன் நடந்து வருகின்ற போது, தன் எதிரே வருகின்ற ஒருவர் காலே இல்லாமல் நொண்டி அடித்துக் கொண்டு ஆனந்தமாகச் செல்வதைப் பார்த்து தன் மனதை ஆற்றியும் தேற்றியும் கொள்கின்றார்.

திங்கள், 9 ஜனவரி, 2012

கடலூர் மாவட்டத்தில் நிவாரணம் தொடர்பான விவரங்களை அறிய இலவச தொலை பேசி எண் 1077

தானே புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் கண்டிப்பாக வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். நிவாரணம் தொடர்பான விவரங்களை அறிய 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும், பொதுமக்களின் மறியலால் நிவாரணப்பணிகள் பாதிக்கப்படும் என்றும் கடலூர் ஆட்சியர் அமுதவல்லி கூறியுள்ளார். நிவாரணம் கேட்டு பொதுமக்கள் மறியல் செய்ய வேண்டாம் என்று கடலூர் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
நன்றி : cuddalore-news

வெள்ளி, 6 ஜனவரி, 2012

பாவத்தை கழுவும் தொழுகை

''உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை நீராடுகிறார், அது அவரது (உடலி­லுள்ள) அழுக்குகள் எதையும் தங்கவிடுமா? என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள்?'' என்று கேட்டார்கள்.''அவரது அழுக்குகள் எதையும் தங்க விடாது'' என்று மக்கள் பதிலளித்தார்கள்.''இதுதான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும்; இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை நீக்குகிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) 
நூல்கள்: புகாரி 528, முஸ்லிம் (1185)

உடலை அழுக்கிலி­ருந்து தூய்மைப்படுத்தும் ஆற்றுக்கு தொழுகையை நபி (ஸல்) அவர்கள் உதாரணம் காட்டியுள்ளார்கள். பாவப் பரிகாரத்திற்கு உடலை வருத்த வேண்டும்; நீண்ட தூரம் பயணம் செய்து பாவக் கடனைத் தீர்க்க வேண்டும் என்றெல்லாம் கூறாமல் வீட்டு வாசலி­ல் ஓடுகின்ற, நமக்கு எளிதில் கிடைக்கின்ற ஆற்று நீர் உடலை தூய்மைப்படுத்துவதைப் போல எந்த விலையும் கொடுக்காமல் மிகப் பெரும் சிரமமும் இல்லாமல் நாம் தொழும் தொழுகை நாம் செய்யக் கூடிய பாவங்களைப் போக்கும் மருந்தாக உள்ளது என்று கூறியுள்ளார்கள். 

தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். (அல்குர்ஆன் 29:45) 

இஸ்லாம் குற்றங்களைத் தடுத்து அதற்குத் தண்டனை வழங்குவதோடு நின்று விடாமல் அதை விட்டும் தவிர்ந்து கொள்வதற்கான வழிமுறைகளை, தொழுகையின் மூலமாக சொல்லி­த் தருகிறது. தொழுபவர்கள் நாம் தொழுகிறோம் என்ற காரணத்திற்காகவாவது மானக்கேடான விஷயங்களை விட்டும் தவிர்ந்திருப்பார்கள். இன்று பெரும்பாலும் தொழக் கூடியவர்களிடம் பெரும் குற்றங்கள் நிகழ்வதைக் காண முடிவதில்லை. பாவங்களி­ருந்து விடுபட அல்லாஹ் நம்மை தொழுகையில் கண்காணிக்கிறான் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். தொழுகையில் அல்லாஹ் நம்மைப் பார்க்கிறான் என்ற எண்ணம், பாவங்கள் குற்றங்கள் செய்யும் போதும் இறைவன் நம்மைக் கண்காணிக்கிறான் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி அவற்றைத் தடுக்கும் கருவியாக ஆகி விடுகின்றது. இது போல் ஐவேளைத் தொழுகையிலும் இந்த எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் பாவங்களுக்கு வழியில்லாமல் போய்விடும். 

இஹ்ஸான் என்றால் என்ன ? என்று நபியவர்களிடத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் கேட்கும் போது, ''(தொழுகையில்) அல்லாஹ்வை நீ பார்க்காவிட்டாலும் அவன் உன்னை பார்க்கிறான் என்று (எண்ணி) நீ அவனை பார்ப்பது போன்று வணங்குவதாகும்'' என்று பதிலளித்தார்கள். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 50

நாம் என்ன செய்தாலும் இறைவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் ஒரு மனிதனிடத்தில் வந்து விட்டால் பாவங்கள் செய்ய அஞ்சுவான். 

மேலும் மறுமை நாளில் வெற்றி பெற்று சொர்க்கத்திற்குச் செல்பவனைப் பற்றி அல்லாஹ் கூறும் போது.... 

தூய்மையாக வாழ்பவன் வெற்றி பெற்றான்.(அவன்)தனது இறைவனின் பெயரை நினைத்துத் தொழுதான். 
அல்குர்ஆன் 87:14, 15 

பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்தும் வழிமுறையாக தொழுகையை இந்த வசனத்தில் இறைவன் விளக்கியிருப்பது தொழுகையின் காட்டுகிறது. 

இஸ்லாமிய மார்க்கம் அது கடவுளுடைய மார்க்கம் (பகுதி - 2)

கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்மார்களும்.

குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்களும் கர்ப்பமாக இருக்கும் பெண்களும் தற்காலிக­மாக நோன்பை விட்டு விட இஸ்லாம் இவர்களுக்கும் அனுமதியளித்திருக்கிறது.

கர்ப்பிணிகளும் பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பி­லிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சலுகையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி­)
நூல்: திர்மிதி (649) அபூதாவூத் (2056) நஸயீ (2237) அஹ்மத் (18270) இப்னுமாஜா.(1657)

கர்ப்பமான காலகட்டத்தில் தாய்மார்கள் எவ்வளவு சிரமப்படுவார்கள் என்பதை நாம் வர்னிக்க முடியாது.கர்ப்பம் தரித்த தாய்மார்கள் சரியாக உணவு உட்கொள்ள முடியாது சாதரண காலத்தில் அவர்கள் படுத்து ஓய்வெடுத்தது மாதிரி கர்ப்பம் தரித்த காலத்தில் ஓய்வெடுக்க முடியாது அளவற்ற அருளாளன் இதை அறிந்து தான் இவர்களுக்கு இந்த சலுகையை வளங்கியிருக்கிறான்.இஸ்லாம் மிக எளிமையான மார்க்கம்

வியாழன், 5 ஜனவரி, 2012

புதுச்சேரியில் பதிவான வாகனங்களை தமிழ்நாட்டில் ஓட்டினால் பறிமுதல்-அரசு உத்தரவு

சென்னை: புதுச்சேரி பதிவு எண்ணோடு தமிழ்நாட்டில் ஓடும் வாகனங்களை பறிமுதல் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான பதிவில் ஏற்படும் முறைகேட்டினை தடுக்கவே இந் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில், 20 லட்சம் ரூபாய்க்கு கீழ் மதிப்புள்ள கார்களுக்கு ஆயுள் வரி 6,000 ரூபாயும், அதற்கு மேல் உள்ள கார்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வரியாக வசூலிக்கப்படுகிறது.

தமிழகத்தில் கார்களின் விலை 10 லட்சம் ரூபாயாக இருந்தால் காரின் மதிப்பில் 10 சதவீதமும், அதற்கு மேல் விலை உள்ள கார்களுக்கு, ஆயுள் கால வரியாக 15 சதவீதமும் வசூலிக்கப்படுகிறது.

இதனால், தமிழகம், புதுச்சேரி வரி விதிப்புக்கு இடையே, பல மடங்கு வித்தியாசம் உள்ளது. எனவே தமிழ்நாட்டில் கார் வாங்குபவர்கள், புதுச்சேரி மாநிலத்தில் போலியாக முகவரி கொடுத்து, நிரந்தர பதிவு செய்கின்றனர். பலர் புதுச்சேரியிலேயே கார்களை வாங்கி பதிவு செய்து, தமிழகத்தில் பயன்படுத்துகின்றனர். இதனால் அரசுக்கு, பல கோடி ரூபாய் வருமானம் குறைகிறது.

வாகனங்கள் பறிமுதல்:

எனவே புதுச்சேரியில் பதிவு செய்து, தமிழகத்தில் ஓடும் வாகனங்கள் குறித்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு நடத்த உள்ளனர். புதுச்சேரியில் போலி முகவரி கொடுத்து, பதிவு செய்த வாகனங்களை பறிமுதல் செய்யவும், அரசு உத்தரவிட்டுள்ளது.

பறிமுதலாகும் வாகனங்களுக்கு, தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள வரியை செலுத்தினால், மீண்டும் வாகனங்கள் இயக்க அனுமதி வழங்கப்படும் என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நன்றி : ஒன்இந்தியா(thatstamil)  

ஒற்றுமைக்கு வழி என்ன?

திருமறைக் குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் மட்டுமே மார்க்கம் என்ற கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டு இக்கொள்கையை ஏகத்துவப் பிரச்சாரத்தின் துவக்க காலத்தில் ஏற்றவர்கள் அதற்காகப் பெரிய விலை கொடுத்தனர்.

- அடி உதைகளுக்கு ஆளானார்கள்.
- ஊரை விட்டு விலக்கி வைக்கப் பட்டனர்.
- பொய் புகார் கூறி சிறையில் அடைக்கப் பட்டனர்.
- சொந்த பந்தங்களுக்குப் பகையாயினர்.
இப்படி ஏராளமான தியாகங்களுக்கு மத்தியில் தான் கொள்கையைக் கடைப்பிடித்தனர்.
இவ்வாறு தியாகம் செய்து கொள்கையை ஏற்றவர்களுக்கு இன்று இருக்கும் ஒரே கவலை “ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்தவர்கள் பிளவு பட்டு நிற்கின்றார்களே?” என்பது தான்.
இது கவலைப் படக் கூடிய விஷயம் என்பதில் சந்தேகமில்லை.  அதே சமயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நேரடியாகவே பாடம் பயின்ற நபித்தோழர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து இருபது ஆண்டுகளுக்குள் ஒருவருக்கு எதிராக மற்றவர் ஆயுதம் தாங்கிப் போரிடும் அளவுக்குப் பகைவர்களாகிப் போயினர்.
ஆயிஷா (ரலி) அவர்களுக்கும், அலீ (ரலி) அவர்களுக்கும் நடந்த போரில் இரு தரப்பிலும் ஏராளமான நபித்தோழர்கள் கொல்லப்பட்டனர்.  இது போல் முஆவியா (ரலி) அவர்களுக்கும் அலீ (ரலி) அவர்களுக்கும் நடந்த போரிலும் பல நபித்தோழர்கள் கொல்லப் பட்டனர்.
இன்றைக்கு ஏகத்துவப் பிரச்சாரகர்களிடையே காணப்படும் பிளவுகள் அந்த அளவுக்கு இல்லை என்று ஆறுதல் பட்டுக் கொள்ளலாம்.
எண்ணிச் சொல்லும் அளவுக்குக் குறைவாக இருக்கும் போது காணப்படும் ஒற்றுமை, அதிகமான மக்கள் ஆதரவைப் பெறும் போது குறைந்து விடுவது சகஜமானது தான் என்பதையும் நபித்தோழர்களிடையே

செவ்வாய், 3 ஜனவரி, 2012

ஏப்ரல் மாதம் 4ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள்

சென்னை: வரும் ஏப்ரல் மாதம் 4ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் துவங்குகிறது என்று பள்ளிக்கல்வி தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

நடப்பு கல்வியாண்டில் அனைத்துப் பள்ளிகளிலும் சமச்சீர் கல்வி அமல்படுத்துவதில் ஏற்பட்ட குளறுபடிகளால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தாமதமாக துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பாடங்கள் முழுமையாக நடத்தப்படாதது தான் அதற்கு காரணம். வழக்கமாக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு மார்ச் மாத இறுதியில் துவங்கும். ஆனால் இந்த ஆண்டு தாமதமாக ஏப்ரல் மாதம் 4ம் தேதி துவங்குகிறது

தேர்வு அட்டவணை விவரம் வருமாறு,

4-4-12 : தமிழ் முதல் தாள்
9-4-12: தமிழ் இரண்டாம் தாள்
11-4-12: ஆங்கிலம் முதல் தாள்
12-4-12: ஆங்கிலம் இரண்டாம் தாள்
16-4-12: கணிதம்
19-4-12: அறிவியல்
23-4-12: சமூக அறிவியல்

இந்த ஆண்டு சுமார் 11 லட்சம் மாணவ, மாணவியர் சமச்சீர் பாடத்திட்டத்தின்படி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : ஒன்இந்தியா(thatstamil)