அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

சனி, 31 டிசம்பர், 2011

தானே புயல்
மேலும் படங்கள்...............

தானே புயல் காரணமாக சிதம்பரம் - கடலூர் சாலையில் மரங்கள் விழுந்தன

சிதம்பரம்:
       
தானே புயல் காரணமாக சிதம்பரம் கடலூர் இடையேயான 40 கிமீ சாலையில் பெரும்பலான இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. சிதம்பரம் கடலூர் சாலையில் பேருந்து உள்பட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. பலத்த காற்றால் கடலூரில் பெரும்பாலான இடங்களில் வீடுகளின் மேற்கூரை பறந்தது. காலை 8.30 மணி நிலவரப்படி கடலூர் மாவட்டத்தில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
நன்றி : cuddalore-news

வெள்ளி, 30 டிசம்பர், 2011

மண் கேட்ட படலம்

அல்லாஹ், ஆதம் (அலை) அவர்களைப் படைக்க எண்ணிய போது, ஜிப்ரில்(அலை) அவர்களைப் பூமிக்கு அனுப்பி மண் எடுத்து வருமாறு பணிக்கிறான். ஜிப்ரில்(அலை) அவர்கள் பூமிக்கு வந்து மண் எடுக்க முற்பட்டபோது, பூமி மண் தர மறுத்ததாம். தோல்வியோடு ஜிப்ரில்(அலை) திரும்பி விடுகிறார்களாம். அடுத்து மீகாயில்(அலை) அவர்களை அல்லாஹ் அனுப்ப, மீகாயிலும் தோல்வியுடன் திரும்பிச் சென்றார்களாம். மூன்றாவதாக இஸ்ராபீலை அனுப்பியபோது, அவரும் வெறுங் கையுடன் திரும்பி விட்டார்களாம். இறுதியாக மலக்குல்மவ்தை அல்லஹ் அனுப்ப, பூமியின் மறுப்பைப் பொருட்படுத்தாமல் அவர் மண் எடுத்துச் சென்றாராம். அதனால் தான் மனித உயிர்களைப் பறிக்கின்ற பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாம்.

பூமியையும், வானங்களையும் நோக்கி, “நீங்கள் விரும்பிய நிலையிலும் விரும்பாத நிலையிலும் (எனது ஆணைக்குக் கட்டுப்பட்டு) வாருங்கள்!” என்று (அல்லாஹ்) கூறினான், “நாங்கள் (விரும்பி) கட்டுப்பட்டவைகளாக வந்தோம்என்று அவ்விரண்டும் (வானமும், பூமியும்) கூறின.
 (அல்குர்ஆன் 41:11)

அல்லாஹ் பூமிக்கோ, வானத்திற்கோ ஒரு கட்டளையிட்டு விட்டால், அதை அப்படியே பூமியும், வானமும் ஏற்று நடக்கும். அதில் எள்ளளவும் மாற்றம் செய்யாது என்று மேற்கூறிய குர்ஆன் வசனம் ஐயத்திற்கிடமின்றி தெளிவு படுத்துகின்றது. அல்லாஹ் மண் எடுத்து வருமாறு ஆணையிட்டிருக்கும் போது அதற்கு பூமி எப்படி மறுப்புச் சொல்லி இருக்கும்? இந்தக் கதையை நம்பினால், திருக்குர்ஆனின் வசனத்தை நம்பாத நிலை ஏற்படுமே! இறைவனின் வல்லமையைக் குறைத்து மதிப்பிட்டதாக ஆகுமே!எனவே பூமி அல்லாஹ்வின் ஒரு கட்டளைக்கு அடிபணிய மறுத்திருக்கும் என்று அந்த முஸ்லிமும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.


இந்தக் கதையில், அல்லாஹ், மலக்குகளுக்கு ஒரு கட்டளை பிறப்பிக்கின்றான். அதற்கு மாற்றமாக பூமி வேறொரு கட்டளையைப் பிறப்பிக்கின்றனது. ஜிப்ரில், மீகாயில், இஸ்ராபீல் ஆகிய மூவரும் மலக்குகளில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ள மூவரும், உத்தரவை விட பூமியின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு தோல்வியோடு திரும்பினார்கள் என்றால் இதை நம்ப முடிகின்றதா? மலக்குகள் அல்லாஹ்வின் உத்தரவுக்கு எதிராக ஒரு போதும் செயல்பட மாட்டார்கள். மாறு செய்வது அவர்களின் இயல்புக்கே அப்பாற்பட்டது என்றெல்லாம் திருக்குர்ஆன் வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

சனி, 24 டிசம்பர், 2011

சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத ஒதுக்கீடு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

புதுடில்லி: இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக, 27 சதவீத இட ஒதுக்கீட்டில், சிறுபான்மையினருக்கு, 4.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க, மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் வியாழக்கிழமை நடந்தது. இந்தக் கூட்டத்தில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான, 27 சதவீத இட ஒதுக்கீட்டில், 4.5 சதவீதத்தை சிறுபான்மையினருக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டது.

கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், இந்த ஒதுக்கீடு சலுகையை அவர்கள் பெறலாம். முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் மற்றும் பார்சிகள் இந்த சலுகையைப் பெறுவர். இந்த இட ஒதுக்கீடு, ஒரு நிர்வாக உத்தரவு மூலம் அமலுக்கு வரும். 

மதம் மற்றும் மொழி சிறுபான்மையினருக்கான தேசிய கமிஷன் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், இந்த இட ஒதுக்கீடு முடிவை, மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது. மத்திய அமைச்சரவையில், ஏக மனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம் பெற்றுள்ள, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஜாதியினர், இந்த இட ஒதுக்கீட்டால் பலன் பெறுவர். உத்தர பிரதேச மாநில தேர்தலை கருத்தில் கொண்டே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நன்றி : mpm pages

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

படைத்தவனிடம் பாவமன்னிப்பு தேடுவோம்

அல்லாஹ் தனது திருமறையில் 48:2 வசனத்தில் முஹம்மது (ஸல்) அவர்களின் முன் பின் பாவங்களை மன்னித்து விட்டதாகக் கூறுகின்றான். இப்படியொரு பாக்கியத்தைப் பெற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்றாடம் பாவம் செய்து கொண்டிருக்கவில்லை. ஆனால் அதே சமயம் அன்றாடம் பாவமன்னிப்பு தேடிக் கொண்டிருந்தார்கள்.

”அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது தடவைக்கு மேல் ‘அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி’ (பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி அவன் பக்கமே திரும்புகின்றேன்) என்று கூறுகின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 6307

”எனது உள்ளத்தில் கவனக்குறைவு ஏற்படுகின்றது. நிச்சயமாக நான் அல்லாஹ்விடம் ஒரு நாளில் நூறு தடவை பாவமன்னிப்பு தேடுகின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அல்அகர் பின் யஸார் (ரலி), நூல் : முஸ்லிம் 4870

”மக்களே! அல்லஹ்விடம் பாவமன்னிப்பு தேடுங்கள். நான் அவனிடம் ஒரு நாளில் நூறு தடவை பாவமன்னிப்பு தேடுகின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அல்அகர் பின் யஸார் (ரலி), நூல் : முஸ்லிம் 4871

எப்போதும் இறைச் சிந்தனையில் இருக்கும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உள்ளம் கொஞ்சம் அந்தச் சிந்தனையை விட்டு விலகினால் கூட அதற்காக பாவமன்னிப்பு தேடுகின்றார்கள். ஆனால் நாம் சிறு சிறு பாவங்களால் முற்றுகையிடப்பட்டுள்ளோம். அன்றாடம் ஆயிரக்கணக்கான

சனி, 17 டிசம்பர், 2011

முட்டை உருவாகும் விதம்

முட்டை அமைப்பு மிகவும் சிக்கலானது. ஆனால் சீரானது. கருப்பையிலும், முட்டைக் குழாயிலும் முட்டை உருவாகிறது. கோழிக்கு இடதுபுறத்தில் ஒரே ஒரு கருப்பையே உள்ளது. சில நாட்டுப் பறவைகளுக்கு இரு கருப்பைகளும் முட்டைக் குழாய்களும் இருப்பதுண்டு. கோழியில் கருப்பை திராட்சை பழக் கொத்தை போல இருக்கும். ஒரு கோழி தனது ஆயுளில் எட்டு வருட காலத்தில் சுமார் 1515 முட்டைகளை இடுவதாக கூறப்படுகிறது.

ஒரு கோழியின் முட்டை உற்பத்தியாகும் நடைமுறை இரண்டே முக்கால் மணி நேரத்தில் பூர்த்தியாகிறது. கோழி முட்டையிட்டு ஒரு மணி நேரத்துக்குள்ளாக மற்றோர் மஞ்சள் கரு முழுமையாக முற்றி விடுகிறது. அப்போது, அதில் 6 அடுக்குகள் அடங்கியிருக்கும்.

மஞ்சள் கரு முழுமையாக முதிர்ச்சி அடைந்ததும் முட்டைக் குழாய்க்குள் விழுந்து விடுகிறது. முட்டைக் குழாயில் பல பிரிவுகள் உள்ளன. முதிர்ச்சியடைந்த மஞ்சள் கரு முதல் பிரிவில் வளர்த்தப்படுகிறது. இந்தப் பிரிவில் முட்டை சிலநிமிடங்களே தங்குகிறது. பிறகு அடுத்த பிரிவிற்கு செல்கிறது. அங்கு வெளிப்புறத்தில் ஒன்றும் உட்புறத்தில் ஒன்றுமாக இரண்டு மெல்லிய தோல்கள் அல்லது சவ்வுகள் கருப்புறத்தை ஓடாக்குவதற்காக உறைகளைப் போல சேர்க்கப்படுகின்றன.
 
இந்த நடை முறை முடிவதற்கு 1 மணி 10 நிமிடம் ஆகிறது. பிறகு முட்டை கருப்பை அமைந்திருக்கும் சுரபிக்குச் செல்கிறது. அங்கு 19 மணி நேரம் தங்குகிறது. அடுத்த 14 மணிநேரத்தில் முட்டை ஓட்டின் பல அடுக்குகள் சேர்க்கப்படுகின்றன. பின்னர் முட்டைக்கு மெல்லிய தோல் வழங்கப்படுகிறது. இந்தத் தோல் தான் முட்டைக்கு உரிய நிறத்தை தருகிறது. இப்படியாக கோழியின் வயிற்றில் முட்டையின் வளர்ச்சி நடைபெறுகிறது.
நன்றி : ஒரு தகவல்
 
சுப்ஹானல்லாஹ்...(அல்லாஹ் தூயவன்)
 
தான் நாடியதை உமது இறைவன் படைப்பான்.தேர்வு செய்வான்.அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.அல்லாஹ் தூயவன்.அவர்கள் இணைகற்பிப்பவற்றை விட்டும் அவன் உயர்ந்தவன்.
(அல்-குர்ஆன் 28-68)

சென்னை பாஸ்போர்ட் சேவை மையத்தில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய வசதி

வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் பாஸ்போர்ட்டுக்கு நேரடியாக விண்ணப்பிக்கும் வகையில் சென்னை பாஸ்போர்ட் சேவை மையத்தில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு

             முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் பாஸ்போர்ட் அலுவலகத்தில் நேரடியாக பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வகையில் சென்னை சாலிகிராமம் பானுமதி ராமகிருஷ்ணா சாலையில் இயங்கி வரும் பாஸ்போர்ட் சேவை மையத்தில் புதிய வசதி செய்யப்பட்டு உள்ளது. இங்கு பாஸ்போர்ட் தொடர்பான அனைத்து சேவைகளையும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெற முடியும்.

            பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள்  இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்து, விண்ணப்ப எண்ணை பெற்று அசல் சான்றிதழ்களுடன் சாலிகிராமம் பாஸ்போர்ட் சேவை மையத்தை அணுகலாம். இந்த புதிய சேவை இங்கு மட்டுமே செய்யப்பட்டு உள்ளது. அலுவலக வேலைநாட்களில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

           இதேபோல், அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட்டுக்கு நேரடியாக விண்ணப்பிப்பதற்காக சிறப்பு வசதி ஏற்கனவே தாம்பரம் பாஸ்போர்ட் சேவை மையத்தில் ஏற்படுத்தப்பளட்டு உள்ளது. எனவே, அரசு ஊழியர்கள் தங்கள் வாழ்க்கை துணை, 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆகியோருக்கு பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். புதுப்பிக்கவும், தாம்பரம் துரைசாமி ரெட்டி சாலையில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் முன்பதிவு எதுவும் இல்லாமல் நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம்.


            பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வருவோர் காவல்துறை சான்று (பி.சி.சி.), இ.சி.என்.ஆர். மனைவி அல்லது கணவன் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம், திருமணத்திற்குப் பிறகு பெயர் சேர்ப்பு, கூடுதல் பக்கங்கள் இணைப்பு, 3 வயதுக்கு குறைவானவர்களுக்கு பாஸ்போர்ட்டு (பெற்றோர் முறையான இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும்) ஆகிய சேவைகளுக்கு நேரடியாக அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
நன்றி :  cuddalore-news

வெள்ளி, 16 டிசம்பர், 2011

இஸ்லாமிய மார்க்கம் அது கடவுளுடைய மார்க்கம் (பகுதி - 1)

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இஸ்லாமிய மார்க்கம் அது கடவுளுடைய மார்க்கம் என்று சொல்கிறோம் இஸ்லாம் கடவுளுடைய மார்க்கம் என்பதற்கு நிறைய சான்றுகள் இருக்கிறது.

இஸ்லாம் விதித்திருக்கிற ஒவ்வொரு கடமையான வணக்கங்கள் கடமையில்லாத வணக்கங்கள் இவற்றில் கூட இஸ்லாம் கடவுளுடைய மார்க்கம் என்பதற்கு சான்றுகள் இருக்கிறது.
முஸ்­ம்கள் கடைபிடிக்க கூடிய நோன்பு கூட இஸ்லாம் கடவுளுடைய மார்க்கம் என்பதற்கு நிறைய சான்றுகள் இருக்கிறது.இஸ்லாம் இந்த இஸ்லாமிய சமுதாயத்திற்கு தொழுகை நோன்பு ஹஜ் போன்ற கடமைகளை விதித்திருக்கிறது விதித்தது மட்டுமில்லாமல் இந்த சமுதாயத்தினுடைய  பலவீனம் அவர்களுடைய உணர்வு போன்றவற்றை அறிந்து இந்த சமுதாயம் பின்பற்ற தகுந்தார்போல் மிக எளிமையாக விதித்திருக்கிறது.

எளிமையான சட்டங்களை மனித சமுதாயம் அப்படியே பின்பற்றக்கூடிய சட்டத்தை விதித்ததின் காரணமாகத்தான் இஸ்லாம் கடவுளுடைய மார்க்கம் என்று சொல்கிறோம்.
இஸ்லாம் நோன்பு எனும் கடமையை எல்லோருக்கும் விதித்தாலும் சிலருக்கு விதிவிலக்கு அளித்திருக்கிறது.

தள்ளாத வயதினர்.
இவர்கள் நிரந்தரமான விதிவிலக்கு பெற்றவர்கள் முதுமையின் காரணமாக நோன்பு நோற்க இயலாத நிலையில் உள்ளதால் எதிர்காலத்தில் நோன்பை களாச் செய்ய இவர்களால் இயலாது ஏனெனில் எதிர்காலத்திலும் மேலும் அதிகம் முதுமையில் இருப்பார்கள்.இதை கவனித்து இவர்கள் நோன்பை

மண்ணறை வாழ்வை நாசப்படுத்தும் கல்லறை வழிபாடு.

சிந்திக்கும் சமுதாயம் !

முதிர்ந்த அறிவு பெற்ற சமுதாயம் !

சிறந்த இறைத்தூதைப் பெற்ற சமுதாயம் !

உலகின் சிறந்த வழிகாட்டியான இஸ்லாத்திற்கு சொந்தம் கொண்டாடும் ஒரே சமுதாயம் ! என்றெல்லாம் பல வகையான பெயர்களையும், பெருமைகளையும் தன்னகத்தே கொண்டவர்கள் தான் முஸ்லீம்கள் என்று உலகம் முழுவதும் பேசப்படுகிறார்கள்.

உண்மையில் மேலே சொன்ன எந்த வர்ணனையும் பொய்யானது அல்ல. இட்டுக் கட்டப்பட்டதும் அல்ல. சுய இலாபத்திற்காக சேர்த்துக் கொள்ளப்பட்டதும் அல்ல. முஸ்லீம்கள் என்றால் மேலே சொன்ன அனைத்து செயல்பாடுகளும் உரிமை கொண்டாட தகுதி பெற்றவர்கள் தான்.

ஆனால் இன்றைய முஸ்லீம்கள் அதற்குத் தகுதியானவர்களா என்று பார்க்கும் போது கேள்விக் குறிதான் நம் கண்முன் நிற்கிறது.

அல்லாஹ்வை வணங்கவேண்டிய சமுதாயம், அவ்லியாக்களை (?)  வணங்குகிறது.

நபியைப் பின்பற்ற வேண்டிய சமூகம் நாதாக்களை (?) வழிகாட்டி என்கிறது.

இணை துணை இல்லாமல், தாய், தந்தை இல்லாமல், குழந்தை, வாரிசுகள் யாரும் இல்லாமல் அனைத்து வல்லமையும் பொருந்திய இந்த உலகத்தை படைத்துப் பரிபாலிக்கும் வல்ல அல்லாஹ்வை வணங்க வேண்டியவர்கள் அவ்லியாக்கள், நாதாக்கள் என்று சொல்லிக் கொண்டு கல்லரைகளில் அடங்கப்பட்டிருக்கும் மரணித்த உடல்களை புஜை செய்து தூய ஏகத்துவக் கொள்கையை விட்டும் தடம் புரண்டு கல்லரைக்கு காணிக்கை போடும் கப்ரு வணங்கிகளாக மாறியிருப்பதைப் பார்க்கிறோம்.

மண்ணரை வாழ்வையே நாசப்படுத்தும் இந்தக் கல்லரை வழிபாட்டை விட்டும் உண்மை முஃமின்கள் விலகியவர்களாக, தூய ஏகத்துவத்தின் பக்கம் மாத்திரம் தலை சாய்க்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.

காது கேட்காதவர்களிடம் காவல் தேடுவதா?

நாம் ஒருவரிடம் நமது தேவைகளை முன்வைப்பதாக இருந்தால் அவர் சுய புத்தியுள்ளவராக, நமது தேவையை தெரிந்து கொள்ளக் கூடியவராக, இல்லாத சுய புத்தியற்ற, காது கேட்காத, எந்த விதமான தொடர்பும்  வைக்க முடியாதவரிடத்தில் நமது தேவையை முன்வைப்பதில் ஏதாவது நன்மை கிடைக்க முடியுமா?

பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 8-ந் தேதி தொடக்கம்:தேர்வுத்துறை அறிவிப்பு

சென்னை,டிச.15-
 
பிளஸ்-2 தேர்வுகள்  மார்ச் 8-ந் தேதி தொடங்குவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்வு கால அட்டவணை பின்வருமாறு:-
 
மார்ச்-8-மொழித்தாள் ஒன்று.
 
மார்ச்-9-மொழித்தாள் இரண்டு.
 
மார்ச்-12-ஆங்கிலம் முதல் தாள்.
 
மார்ச்-13-ஆங்கிலம் இரண்டாம் தாள்.
 
மார்ச்-16-  இயற்பியல்,பொருளியல்,உளவியல்.
 
மார்ச்-19-கணிதம்,விலங்கியல்,நுண்ணுயிரியல்.நியூட்ரிசியன்.
 
மார்ச்-20-வணிகவியல்,புவியியல்,மனையியல்.
 
மார்ச்-22- வேதியியல்,கணக்குப்பதிவியல்,சுருக்கெழுத்து.
 
மார்ச்-26- உயிரியியல்,வரலாறு,தாவரவியல்,அடிப்படை அறிவியல்,வணிகக் கணிதம்.
 
மார்ச்-28- கணினி அறிவியல்,உயிரி வேதியியல்,இந்திய கலாச்சாரம், தொடர்பு ஆங்கிலம், தட்டச்சு,சிறப்பு மொழி.
 
மார்ச்-30- தொழில்கல்வி தியரி, அரசியல் மற்றும் அறிவியல் தேர்வுகள், நர்சிங், மற்றும் புள்ளியியல்.
 
நன்றி : மாலைமலர்

வியாழன், 15 டிசம்பர், 2011

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் தவறு செய்யும் எம்.பி.க்களை திரும்பப் பெறும் மசோதா தாக்கல்

கடுமையான தவறு இழைக்கும் இங்கிலாந்து எம்.பி.க்களை திரும்பப்

பெறும் உரிமையை அளிப்பதற்கான வரைவு மசோதா, இங்கிலாந்து

பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை

பாராளுமன்றம் பரிசீலித்து ஒப்புதல் அளித்தால், இந்த சட்டம் அமலுக்கு

வரும். இதன்படி, ஒரு வருடத்துக்கும் குறைவான ஜெயில் தண்டனை

பெற்றாலும், அத்தகைய எம்.பி. கடுமையான குற்றம் இழைத்ததாக

கருதப்படும். அந்த எம்.பி.க்கு எதிராக அவரது தொகுதி வாக்காளர்களில் 10

சதவீதம் பேர் கையெழுத்திட்டு மனு அளித்தால், அந்த எம்.பி. பதவி இழக்க

வேண்டி இருக்கும். அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும்.

நன்றி : தாளம் நியூஸ்

இராக்கிலிருந்து வெளியேறின அமெரிக்கப் படைகள்- 9 ஆண்டு போர் முடிந்ததாக அறிவிப்பு!

பாக்தாத்: இராக்கில் அமெரிக்கா நடத்தி வந்த 9 ஆண்டு காலப் போர் அதிகாரப்பூர்வமாக இன்றுடன் முடிவுக்கு வரவுள்ளது. இதையடுத்து பாக்தாதில் அமெரிக்கா அமைத்த ராணுவ மையத்தில் இன்று அமெரிக்கக் கொடி இறக்கப்படவுள்ளது.

இராக்கில் அதிபர் சதாம் ஹூசேன் அணு ஆயுதம் தயாரிப்பதாக பொய் கூறிக் கொண்டு 2003ம் ஆண்டு மார்ச் மாதம் போர் தொடுத்தார் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ். ஆனால், அங்கு எந்த அணு ஆயுதமும் சிக்கவில்லை.

இந்தப் போரில் சதாமின் ஆட்சி தூக்கி எறியப்பட்டு, 2003ம் ஆண்டு டிசம்பரில் கைது செய்யப்பட்டு, பின்னர் தூக்கில் போட்டு கொலையும் செய்யப்பட்டார் சதாம். அவரது மகன்கள், மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளும் கொன்று குவிக்கப்பட்டனர். சதாமின் மனைவி, மகள் உள்ளிட்டோர் மட்டும் தப்பி ஜோர்டானில் தஞ்சம் புகுந்தனர்.

2007ம் ஆண்டு போர் மிக உச்சத்தில் இருந்தபோது மிக அதிகபட்சமாக சுமார் 1.7 லட்சம் அமெரிக்கப் படைகள் இராக்கில் இருந்தன. இந்தப் போரில் சுமார் 1 லட்சம் அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
மேலும் 4,500 அமெரிக்க வீரர்களும் பலியாயினர். 30,000 வீரர்கள் காயமடைந்தனர்.

இந்தப் போருக்காக அமெரிக்கா செலவிட்ட தொகை ரூ. 45 லட்சம்

துனீசியா-புதிய அதிபர் பதவி ஏற்பு

துனீஸ்:அரபுலக புரட்சியின் பிறப்பிடமான துனீசியாவில் முன்ஸிஃப் மர்ஸூகி புதிய அதிபராக உறுதிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.நாட்டின் விருப்பங்களும், சட்டங்களும் பாதுகாக்கப்படும் என உறுதி அளிப்பதாக திருக்குர்ஆனின் மீது கைவைத்தவாறு சட்டமியற்றும் அவையில் நடந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:நாட்டிற்காக இரத்த சாட்சிகளாக மாறியவர்களிடம் கடமைப்பட்டிருக்கிறோம். அவர்களின் உயிர் தியாகம்தான் என்னை இப்பதவியில் அமர வைத்துள்ளது. புரட்சியின் லட்சியம் முழுமை அடைவதற்காக செயல்படுவேன். அரபுலக புரட்சிக்கு வித்திட்ட பூமியில் ஏகாதிபத்திய யுகத்திற்கு பிறகு முதல் அதிபராக பதவியேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு மர்ஸூகி கூறினார்.

துனீசியாவின் முன்னாள் சர்வாதிகாரி பின் அலியின் ஆட்சி காலக்கட்டத்தில் 10 ஆண்டுகள் வெளிநாட்டில் வசித்துவந்தார் மர்ஸூகி. 217 உறுப்பினர்களை கொண்ட அவையில் 153 உறுப்பினர்களின் ஆதரவுடன் மர்ஸூகி அதிபராக தேர்வுச் செய்யப்பட்டார்.

202 உறுப்பினர்கள் அவையில் இருந்த வேளையில், மூன்று பேர் மட்டுமே எதிர்த்து வாக்களித்தனர். 44 எதிர்கட்சி உறுப்பினர்கள் வாக்குச்சீட்டில் எதுவும் நிரப்பாமல் அளித்தனர்.

பிரான்சில் டாக்டர் பட்டம் பெற்ற மர்ஸூகி 1989-ஆம் ஆண்டு முதல் 1994-ஆம் ஆண்டு துனீசியாவை விட்டு வெளியேறும் வரை துனீசியன் லீக் ஃபார் டிஃபன்ஸ் ஆஃப் ஹியூமன் ரைட்ஸின் தலைவராக பதவி வகித்தார்.
பிரஞ்சு மற்றும் அரபி மொழிகளில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு வருகை தந்துள்ளார். மர்ஸூகியின் காங்கிரஸ் பார்டி ஃபார் தி ரிபப்ளிக் கட்சிக்கு 29 இடங்கள் உள்ளன. மர்ஸூகி ஆளுங்கட்சியான அந்நஹ்ழாவின் கைப்பாவை என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின.

இஸ்லாமிய கட்சியான அந்நஹ்ழாவின் தலைவர் ஹமதி ஜபலியை பிரதமராக நியமிப்பது மர்ஸூகியின் முதல் பணியாகும்.

நன்றி : தூதுஆன்லைன்

புதன், 14 டிசம்பர், 2011

அடுத்த கல்வியாண்டில் இருந்து முப்பருவ கல்வித் திட்டம் அமல்

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், அடுத்த கல்வியாண்டு முதல், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி திட்டத்தை அமல்படுத்த, நேற்று அரசாணை வெளியிடப்பட்டது.
நடைமுறையில் உள்ள தேர்வு முறையால் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை தருவதை தவிர்க்கவும், உடலியல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கவும், புதிய முறையிலான தேர்வு திட்டம் மற்றும் கல்வித் திட்டத்தை, கடந்த ஆக., 26ம் தேதி, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதன் படி, "பாடப் புத்தகங்கள், மூன்று பகுதிகளாக பிரிக்கப் பட்டு, மூன்று பருவங்களாக தனித்தனியே கற்பிக்கப்படும்; ஒவ்வொரு பருவத்தின் முடிவிலும் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை, தொடர் மதிப்பீட்டு முறை மூலம் மதிப்பீடு செய்யப்படும்,' என, அறிவித்து இருந்தார். மேலும், புதிய முறையில் மாணவர்களின் இதர திறன்களை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் என்றும் தெரிவித்து இருந்தார்.
செயல் வடிவம் : இந்த அறிவிப்பிற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், பள்ளிக்கல்வித் துறை செயலர் ஸ்ரீதர், நேற்று அரசாணை வெளியிட்டுள்ளார். அரசாணையில், செயலர் கூறியிருப்பதாவது: சட்டசபையில், முதல்வர் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, அடுத்த கல்வியாண்டில் (2012-13) இருந்து, 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறையை அமல்படுத்தலாம் என்று, பள்ளிக்கல்விக்கான மாநில பொது வாரிய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக, பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த முடிவை அமல்படுத்துவதற்காக, இயக்குனர் அனுப்பியுள்ள பரிந்துரையை அரசு பரிசீலனை செய்து, வாரியத்தின் முடிவை அமல்படுத்த அரசு உத்தரவிடுகிறது.
முப்பருவ முறையால், வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் கற்பதற்கான நேரம் கிடைக்கும். புத்தகங்களில் படிப்பதை, செயல்பூர்வமாக, நேரடியாக சம்பந்தபட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிடும் திட்டம், மாணவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும். மனப்பாடத்திற்கு அப்பாற்பட்டு, கல்வி சார்ந்த புரிதல்களுக்கு இத்திட்டம் மிகவும் உதவியாக இருக்கும்.
ஒவ்வொரு வகுப்பிலும், மாணவர்கள் கலந்துரையாடல் செய்வதற்காக, போதிய நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். மாணவர்களின் செயல் திறன்களின் வளர்ச்சி, அவ்வப்போது மதிப்பீடு செய்யப்படும்.


ஒரு பருவத்திற்கான சிறிய பகுதிகளை மட்டும் ஆசிரியர்கள், பொறுமையாக கற்பிக்கலாம். ஆசிரியர்கள் - மாணவர்கள் ஒருங்கிணைந்து, நண்பர்கள் போன்று வகுப்பறைகளில் செயல்படவும் வகுக்கும்.
முப்பருவ கல்வி திட்டம் மற்றும் தொடர் மதிப்பீட்டு தேர்வு முறை, 2013-14ம் கல்வியாண்டு முதல், 9,10 வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு பள்ளிக்கல்வித் துறை செயலர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
முப்பருவமுறை

*
முதல் பருவம் - ஜூன் முதல் செப்டம்பர் வரை
*
இரண்டாம் பருவம் - அக்டோபர் முதல் டிசம்பர் வரை
* 
மூன்றாம் பருவம் - ஜனவரி முதல் ஏப்ரல் வரை

நன்றி : அமானுஷ்யம்