அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வியாழன், 28 பிப்ரவரி, 2013

அல்குர்ஆனில் அறிவியல் அற்புதங்கள்


“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்) நூற்கள்: புஹாரி, முஸ்லிம்

அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மனித சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்பினான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்தவித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.

“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது.
(அல்குர்ஆன் 10:37)”

ரஷ்யாவில் விண்கல்லின் பெரிய பாகம் கண்டுபிடிப்பு

ரஷ்யாவின் யூரல் மலைக்கு மேலாகப் பறந்து வந்து உறைந்த செபார்க்குல் ஏரிக்குள் மோதிய விண்கல்லின் பெரிய பாகம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கண்டுபிடிப்பு குறித்து தலைமை ஆய்வாளரான விக்டொர் குரோக்கோவ்ஸ்கி, விண்கல் விழுந்ததால் செபார்க்குல் ஏரியில் ஏற்பட்ட 25 அடி அகலமான குழியில் கண்டெடுக்கப்பட்ட சுமார் 100ற்கும் அதிகமான துண்டுகளில் இதுவே மிகப்பெரியது எனத் தெரிவித்துள்ளார்.

இந்த 1Kg நிறையுடைய பாகம் உட்பட பல விண்கல்லின் சிதறிய பாகங்கள் யூரல் மத்திய பல்கலைக்கழகத்தினால் சுமார் 30 பனிச்சறுக்கு வீரர்களின் உதவியுடன் 50 Km தூரம் வரை பயணித்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.பிப்ரவரி 15ம் தேதி ரஷ்யாவின் செலையாபின்ஸ்க் நகர்ப் பகுதியில் தரையுடன் மோதும் முன் வெடித்துச் சிதறிய எரிகல்லில் இருந்து புறப்பட்ட அதிர்வலைகளால்(Shock waves) 1200 பொது மக்கள் காயமடைந்தனர்.இதனையடுத்து சுமார் 24 000 ஊழியர்களும் 4300 சிறு உபகரணங்களும் பயன்படுத்தப்பட்டு விண்கல் தாக்கத்தால் நிகழ்ந்த சேதத்தைத் துப்பரவாக்கினர்.இதேவேளை நாசாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ரஷ்யாவைத் தாக்கிய விண்கல், 50 அடி விட்டமுடையது எனவும் ஒலியை விடப் பன்மடங்கு வேகத்துடன் இது பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்ததாகவும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.மேலும் பல விஞ்ஞானிகள் இந்த விண்கல் அந்தரத்திலேயே வெடித்துச் சிதறாமல் நேரடியாகப் பூமியின் தரையில் மோதியிருந்தால் அதன் விளைவு தற்போது ஏற்பட்டதை விடப் பன்மடங்கு இருந்திருக்கும் எனவும் பல உயிர்கள் பலியாகியிருக்கலாம் எனவும் ஒருமித்த கருத்தைத் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நன்றி :newsonews

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) - (பகுதி -10)

புகழுக்கு ஆசைப்பட்டார்களா ?

எந்தச் சுயநலனும் இன்றி யாரேனும் பொதுச் சேவை செய்ய முடியுமா? என்று நினைப்பவர்களுக்கு வேறு விதமான சந்தேகம் தோன்றலாம். சுயநலவாதிகளையே பார்த்துப் பழகியதால் இந்தச் சந்தேகம் ஏற்படலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்து சுகம் சேர்க்காவிட்டாலும் பதவியினால் கிடைக்கும் அதிகாரத்துக்காகவும், புகழுக்காகவும் அந்தப் பதவிகளுக்கு ஆசைப்பட்டிருக்கலாம் அல்லவா?
எத்தனையோ வசதி படைத்தவர்கள் புகழுக்காக பெருமளவு செலவு செய்வதைப் பார்க்கிறோம். எனவே பணம் காசுகள் விஷயத்தில் தூய்மையாக நடந்தாலும் பதவியைப் பயன்படுத்தி புகழையும், பாராட்டையும் பெற்றிருக்கலாம் அல்லவா? என்பது தான் அந்தச் சந்தேகம்.

இந்தச் சந்தேகத்தை நாம் அலட்சியப்படுத்த முடியாது. தனக்கு முன்னால் நாலு பேர் கைகட்டி நிற்கும் போதும், நாலு பேர் புகழும் போதும் ஏற்படும் போதை சாதாரணமானது அல்ல.
சொத்து சுகம் சேர்ப்பதற்காக அதிகாரத்துக்கு வர பலர் விரும்புகிறார்கள் என்றால் சில பேர் இந்தப் புகழ்ப் போதைக்காக அதிகாரத்தை விரும்புகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புகழுக்கு ஆசைப்பட்டார்களா? பதவியின் மூலம் கிடைக்கும் மரியாதையைப் பயன்படுத்திக் கொண்டார்களா?நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆன்மீகத் தலைமை, ஆட்சித் தலைமை ஆகிய தலைமைகளில் எந்த ஒன்றையும் அவர்கள் தமது புகழுக்காகப் பயன்படுத்தியதில்லை.ஆட்சித் தலைமையைப் பயன்படுத்தி எந்தப் புகழுக்கும் அவர்கள் ஆசைப்பட்டதில்லை என்பதற்கு அவர்களின் வரலாற்றில் சில நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்.

ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெருவில் நடந்து சென்றனர். அப்போது ஒரே ஒரு பேரீச்சம் பழம் கீழே கிடந்தது. அதைப் பார்த்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இது ஸகாத் வகையைச் சேர்ந்ததாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கு இல்லாவிட்டால் இதை எடுத்து நான் சாப்பிட்டிருப்பேன்' என்று கூறினார்கள். நூல் : புகாரி 2433, 2055, 2431

'கீழே கிடக்கும் ஒரே ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்துச் சாப்பிடுவதில் ஏழைகளுக்கான அரசின் கருவூலத்தைச் சேர்ந்ததாக இருக்குமோ' என்பதைத் தவிர வேறு எந்தக் கூச்சமும், தயக்கமும் இல்லை' என்று அகில உலகமே மதிக்கும் மாமன்னராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருக்கும் சமயத்தில் மக்கள் மத்தியில் பிரகடனம் செய்கிறார்கள். இவ்வாறு கூறினால் கவுரவம் போய் விடுமே என்றெல்லாம் அவர்கள் கருதவில்லை.நமக்குச் சொந்தமான நாலணா கீழே விழுந்து விட்டால் நாலு பேர் பார்க்கும் போது அதை எடுப்பதற்கு நமக்கே கூச்சமாக இருக்கிறது. 'இந்த அற்பமான பொருளைக் கூட எடுக்கிறானே என்று மற்றவர்கள் நம்மைப் பற்றி நினைப்பார்களே' என்று கருதுகிறோம். நம்மைப் போன்ற சாதாரண மனிதன் பார்க்கின்ற கௌரவத்தைக் கூட இம்மாமனிதர் பார்க்கவில்லை.

வானம் பிளந்து போகும்

வானம் பிளந்து மலரைப் போன்று மாறும் என்று கூறும் அல்குர்ஆன்!!!
இதை உண்மை படுத்திய NASAவான்வெளி ஆய்வு நிலையம்

“வானம் பிளந்து எண்ணையை போன்று சிவந்ததாக ஆகும் ” -(55:37)

வானம் பிளந்து போகும். அதாவது வானத்து கட்டுமானப் பொருட்கள்
வெடித்துப் பிளந்து விடும்.அப்போது அதன் தோற்றம் பூ போன்றிருக்கும்.
அந்த பூவும் எண்ணையை தடவி விட்டது போன்றிருக்கும் எனக் கூறுகிறது இந்த வசனம். இந்த நிகழ்வு எவ்வாறு அமையும் என்பது இறைவனே அறிந்த விஷயமாகும். எனினும் இதைப் புரிந்து கொள்ளும் வகையில் எமது வான்வெளியை இறைவனே ஆக்கி வைத்துள்ளான்.

அதாவது இப்போதும் நட்சத்திரங்கள் தமது வாழ்வின் மேற்குறிப்பிட்ட நிலையின் போது வெடித்துச் சிதறுகின்றன.அப்படி வெடித்த நட்சத்திரங்கள் சிலவற்றை 1999ம் ஆண்டு அக்டோபர் 31ல் அமெரிக்க வான்வெளி ஆய்வு நிலையமாகிய ‘நாஸா (NASA)’ புகைப்படமெடுத்து வெளியிட்டது. வெடித்த அந்த ஒவ்வொரு நட்சத்திரத்தின் தோற்றமும் இந்த வசனம் சொல்வதைப் போன்று சிவப்பு ரோஜாவைப் போன்றிருந்தன. விஞ்ஞானிகள் எண்ணை தடவிய சிகப்பு ரோஜாக்கள் என்றே அவற்றை வர்ணித்தனர். இந்த வர்ணனை அல்குர்ஆனின் அதே வசனமாகவே அமைந்துள்ளமை ஆச்சரியத்திற்குரியதாகும். இது போன்று சிறிய சிறிய வசனங்களும் மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து பயன்படுத்தப்பட்டுள்ளதை பார்த்து நாம் ஆச்சரியப்படுகிறோம். நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தை அல்லாது மனிதர்களின் வார்த்தை அல்ல என்பதற்கு இது போன்ற வசனங்கள் நமக்கு சிறந்த உதாரணங்கள் ஆகும்.

(மின்னஞ்சல் தகவல்)
நன்றி : சமீர்

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) - (பகுதி -9)

வாழ்க்கைச் செலவுக்கு என்ன செய்தார்கள்


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரசுக் கருவூலத்திருந்து ஊதியமோ, பரிசோ, அன்பளிப்போ பெறவில்லை என்றால் அவர்கள் வாழ்க்கைச் செலவுக்கு என்ன செய்தார்கள்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆட்சித் தலைமை, ஆன்மீகத் தலைமை ஆகிய இரண்டு தலைமைப் பொறுப்புக்களையும் நிர்வகிக்கவே நேரம் சரியாக இருந்தது.'அரசாங்கத்தில் எந்த உதவியும் பெறக் கூடாது; அடுத்தவரிடத்திலும் யாசிக்கக் கூடாது' என்ற கொள்கையின் காரணமாக வியாபாரம், அல்லது தொழில் செய்தால் மேற்கண்ட இரண்டு பணிகளையும் செய்ய முடியாது.
தாம் ஏற்றுள்ள சமுதாயப் பணியையும் நிறைவேற்றிக் கொண்டு, கொள்கையையும் விட்டு விடாமல் தமது குடும்ப வருமானத்திற்கு ஒரு வழியைக் கண்டார்கள்.

மக்காவிலிருந்து கொண்டு வந்த பணத்தில் பள்ளிவாசலுக்கான இடத்தை வாங்கியது போக மீதமிருந்த பணத்திலிருந்து நூறு ஆடுகள் கொண்ட ஆட்டுப் பண்ணையை அமைத்துக் கொண்டார்கள். அதற்கு ஒரு மேய்ப்பவரையும் நியமித்துக் கொண்டார்கள். நூறு ஆடுகளில் ஒரு ஆடு குட்டி போட்டதும் பெரிய ஆடு ஒன்றைத் தமக்காக எடுத்துக் கொள்வார்கள். எந்த நேரத்திலும் நூறு ஆடுகள் குறையாமல் இருக்கும் படி பார்த்துக் கொண்டார்கள்.இதைப் பின்வரும் நிகழ்ச்சியிலிருந்து அறியலாம்.

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றிருந்தேன். அவர்களின் ஆடு மேய்ப்பவர் அப்போது தான் பிறந்த ஒரு குட்டியைத் தூக்கிக் கொண்டு வந்தார். கிடாய்க் குட்டியா? பெட்டையா?' என்றார்கள். அவர் கிடாய்' என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டை அறுத்து விருந்து சமைக்கச் சொன்னார்கள். பிறகு என்னை நோக்கி 'நான் உனக்காகத் தான் இந்த ஆட்டை அறுத்தேன் என்று எண்ண வேண்டாம். நம்மிடம் நூறு ஆடுகள் உள்ளன. அவற்றில் ஒரு ஆடு குட்டியை ஈன்றால் உடனேயே அதற்குப் பதிலாக பெரிய ஆடு ஒன்றை நாம் அறுத்து உண்போம்' என்று கூறினார்கள். இதை லகீத் பின் ஸபுரா (ரலி) அறிவிக்கிறார். நூல் : அபூதாவூத் 123, அஹ்மத் 17172

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வளவு திட்டமிட்டு தம் வாழ்க்கைச் செலவைச் சமாளித்தார்கள்

வியாழன், 14 பிப்ரவரி, 2013

காதலுக்கு கொண்டாட ஒரு தினமா?

கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன் தினம். பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்துள்ளன.எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது.நமது இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல! மேற்கத்திய கலாச்சாரத்தை இங்கும் கடைபிடிக்கின்றனர்,

இன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை ஊக்கப்படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் அளவிற்கு காதல் சாதரண விஷயம் என்பதையும் தாண்டி ‘அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா? அப்ப நீ வேஸ்ட் என்று கூறும் அளவிற்கு கவுரவமான விஷயமாக மாறி விட்டது.உங்க லவ்வரோட பேர டைப் பண்ணி அப்டி எஸ்.எம் எஸ் அனுப்பு இப்டி எஸ்.எம்.எஸ் அனுப்பு ஒரு எஸ்.எம்.எஸ் க்கு 3 ரூபாய் என்று கூறி காதலர் தினம் என்ற பெயரில் இளைஞர்களிடமிருந்து பணத்தை அபகரிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வருடா வருடம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.
இஸ்லாமிய இளைஞர்களும் இளைஞிகளும் இந்த காதல் எனும் சமூக சீர்கேட்டில் விழுந்து விடுகின்றனர்.இதற்கெல்லாம் காரணம் காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கள் மற்றும் அசிங்கங்கள் பற்றிய விழிப்புணர்வும் இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற அறிவும் நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும், இல்லாமையே.

“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6243 தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக் களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை.
ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும். இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.திருமணத்திற்கு முன்பு பெண்ணைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 

புதன், 13 பிப்ரவரி, 2013

உயிரைப் பறித்த கோகோ கோலா......!

கோகோகோலாவை அளவிற்கு அதிகமாக குடித்து உயிரை பறிகொடுத்துள்ளார் நியூசிலாந்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர். நியூசிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள இவ்னர்கார்கில் பகுதி‌யை சேர்ந்தவர் நடாஷா ஹாரிஸ் (30).
 
 இவர் கடந்த சில ஆண்டுகளாக தினமும் 10 லிட்டர் அளவிற்கு கோக கோலா குடித்து வந்துள்ளார். இதனால் அவருக்கு முதலில் இருதய நோய் தாக்கியது. இதன்பின்னர் மரணத்தை தழுவியுள்ளார் நடாஷா. அந்தப் பெண்ணின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. அதில் உடலில் அளவுக்கதிகமாக கோக கோலா இருந்ததால் அவரது வளர்சிதை மாற்றத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவரது இதயம் பலவீனமாகி இறுதியில் அவரது மரணத்திற்கு காரணமாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 கோக கோலா, பெப்ஸி உள்ளிட்ட குளிர்பானங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அதிகம் உள்ளது என பல்வேறு ஆய்வு முடிவுகள் எச்சரிக்கின்றன. இருந்தாலும் கோகோ கோலா, பெப்ஸி போன்ற குளிர்பானங்கள் குடிப்பதைத்தான் இன்றைய இளம் தலைமுறையினர் விரும்புகின்றனர். இந்த பழக்கம் இளம்பெண்ணின் உயிரையே பறித்துள்ளது என்பதுதான் சோகம்.
 
நன்றி:thatstamil.com

சனி, 9 பிப்ரவரி, 2013

இதயம்

இதய நோய்களிலிருந்து தப்பிக்க வேண்டுமா? எடையை குறையுங்கள், உடற்பயிற்ச்சி செய்யுங்கள், புகைக்காதீர்கள், கொழுப்பு சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ணாதீர்கள், நார்ச் சத்துள்ள காய்கறிகளை அதிகம் உண்ணுங்கள், டென்ஷன் அடையாதீர்கள்! என்று தான் எல்லா டாக்டர்களும் அட்வைஸ் செய்கின்றனர்.தற்போது நீங்கள் உணவு உண்ணும் பழக்கத்தை மாற்றிக் கொள்வதன் மூலம் இதய நோய்க்குரிய சூழலிருந்து தப்பிக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

தினசரி 200ம் அதற்கு மேலும் வைட்டமின் "ஈ" எடுத்துக் கொள்வர்களுக்கு சர்வ தேச அளவில் 77 சதவீதம் இதய நோய்கள் வர வாய்ப்பில்லை என்கின்றனர்.2 ஆயிரம் ஆண்கள் மற்றும் பெண்களை வைத்து ஆராய்ந்த ஹார்வார்டு பப்ளிக் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள். 400 முதல் 600 யூனிட் வைட்டமின் "ஈ" எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு இதய நோய்களே வருவதில்லையாம்.

இளவயதுக்காரர்கள் நோய் எதிர்ப்பு சக்தியுடன் வாழவும், நடு வயதுக்காரர்கள்
இதய நோய் அபாயத்தைத் தவிர்க்கவும், வைட்டமின் "ஈ" உள்ள சோளம், பார்லி, ஓட்ஸ், தவிடு நீக்காத கோதுமை மாவு, முளைவிட்ட தானியங்கள், அவாகோடா பழம், கொட்டை உள்ள உணவுகள் (நிலக்கடலை போன்றவை), கீரைகள், சூரியகாந்தி விதைகள், தாவார எண்ணெய் (சூரியகாந்தி எண்ணெய்), ஆலிவ் எண்ணெய், கடுகு, கேனோலா எண்ணெய் போன்றவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் பி குரூப்பிலுள்ள போலிக் அமிலம் நல்ல இதய நோய் தடுப்பானாக செயல்படுகிறது என்கின்றனர் ஹார்வார்டு யூனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள்.