அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

திங்கள், 28 மே, 2012

லால்பேட்டையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

இன்ஷா அல்லாஹ் நாளை (29.05.2012) கடலூர் மாவட்டம், லால்பேட்டையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.தாங்கள் தங்கள் சுற்றம் மற்றும் நண்பர்களுடன் கலந்து கொண்டு இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துகொள்ள தங்களை அன்புடன் அழைக்கிறது ஆயங்குடிTNTJ

நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருக்கும் சுவரொட்டிகள்

அழைப்புப் பணி

அழைப்புப் பணிக்காக ஆயங்குடி TNTJ மூலம் நான்கு இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் பதாகைஞாயிறு, 27 மே, 2012

அறிவிப்பு பலகை


வெள்ளி, 25 மே, 2012

அடாவடித்தனமான நாடு இஸ்ரேல்: ஜெர்மனி கருத்து

யூத தேசமான இஸ்ரேல் குறித்து ஜேர்மனியில் பலருக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. இஸ்ரேல் வலியச் சென்று பாலஸ்தீனத்துடன் மோதுவதாகப் ஜெர்மனி அரசாங்க பிரதிநிதிகள் உட்பட பலரும் கருதுகின்றனர்.

இஸ்ரேல் குறித்த புதிய கருத்துக்கணிப்பு:

கடந்த 2009ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பை விட 10 சதவீதம் பேர் இஸ்ரேலை அதிகமாகவே வெறுக்கத் தொடங்கியுள்ளனர்.

ஃபோர்ஸா என்ற நிறுவனம் சமீபத்தில் எடுத்த கருத்துக்கணிப்பில் 59 சதவீதம் பேர் இஸ்ரேலை வம்புச் சண்டைக்கு இழுக்கும் நாடாகத்தான் காண்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

70சதவீதம் பேர், மற்ற நாடுகளைப் பற்றி அக்கறைப்படாமல் இஸ்ரேல் தன்னலத்தோடு இருப்பதாகக் கருதுகின்றனர்.

60சதவீதம் பேர் ஜேர்மனிக்கு இஸ்ரேல் மீது தனிப்பட்ட ஆர்வமோ, அக்கறையோ இல்லை என்றனர்.
மே 15, 16 திகதிகளில் 1002 பேரிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் இவ்விபரங்கள் கிடைத்துள்ளன.

ஜெர்மனின் புதிய ஜனாதிபதி ஜோவாக்கிம் கவக், மே 28 முதல் 31 வரை இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளில் சுற்றுப்பயணம் நடத்தத் திட்டமிட்டுள்ளார்.ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல், கிழக்கு ஜெருசலேம் மற்றும் மேற்குக்கரையில் அரசு பின்பற்றும் குடியிருப்புக் கொள்கை, பாலஸ்தீனிய ரோடு சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இடையூறாக இருக்கிறது என்றார்.

நோபல் பரிசு பெற்ற கவிஞர் கூண்டர் கிராஸ், இஸ்ரேலின் அணு ஆயுதப் பரிசோதனை ஈரானிய மக்களை முதல் தாக்குலிலேயே மொத்தமாக அழித்துவிடும் என்றார். மேலும் இஸ்ரேல் நாடு அந்தப் பகுதிக்கே அச்சுறுத்தலாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

நன்றி : newsonews

அல்குர்ஆனும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் (பகுதி - 2)

வஹீயாகவோ அல்லது திரைக்கு அப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பியோ தவிர வேறு வழிகளில் எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. தனது அனுமதியுடன் தான் நாடியதை அவன் அறிவிக்கின்றான். நிச்சயமாக அவன் உயர்ந்தவன். நுண்ணறிவாளன். (அல்குர்ஆன் 42 : 51)

மனிதரிடம் இறைவன் பேசுவதற்கு மூன்று வழிகளைக் கடைப்பிடிக்கிறான் என்பது இவ்வசனத்தி­ருந்து தெரிகின்றது. ஒரு தூதரை அனுப்பி மனிதரிடம் பேசுவான் என்பதை அனைவரும் எளிதாக அறிந்து கொள்ள முடியும். ஜிப்ரீல் போன்ற வானவர்கள் வழியாக வேதங்களை வழங்குவதையும், வானவர்கள் மூலம் வேறு பல செய்திகளை சொல்­ அனுப்புவதையும் தான் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்.

திரைக்கு அப்பால் இருந்து மனிதனிடம் இறைவன் பேசுவான் என்பதையும் ஓரளவுக்கு அறிந்து கொள்ள இயலும்.
மூஸா நபி அவர்கள் தமது குடும்பத்தாருடன் புறப்பட்ட போது தீப்பிளம்பைக் கண்டு அந்த இடத்திற்குச் சென்றார்கள். இதைப் பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

அங்கே அவர் வந்த போது மூஸாவே என்று அழைக்கப்பட்டார். நிச்சயமாக நானே உமது இறைவன். எனவே உமது செருப்புகளைக் கழற்றுவீராக. நிச்சயமாக நீர் பரிசுத்தமான இடத்தில் இருக்கிறீர்கள். மேலும் நான் உம்மைத் தேர்ந்தெடுத்துள்ளேன். எனவே, (வஹீயாக) அறிவிக்கப் படுவதை செவிமடுப்பீராக. நிச்சயமாக நானே அல்லாஹ்! என்னைத் தவிர வணக்கத்துக்கு உரியவன் யாருமில்லை. எனவே என்னை வணங்குவீராக! என்னை நினைவு கூர்வதற்காக தொழுகையை நிலை நாட்டுவீராக.(அல்குர்ஆன் 20 : 11 – 14).

இந்த அத்தியாயத்தின் 11வது வசனம் முதல் 48வது வசனம் வரை மூஸா நபி அவர்களுடன் அல்லாஹ் நடத்திய உரையாடல் இடம் பெற்றுள்ளது. பட்டன. அந்தக் கட்டளைகள் யாவும் வானவர் துணையில்லாமல் நேரடியாகவே பிறப்பிக்கப் பட்டன. ஆனாலும் மூஸா நபி அவர்கள் அல்லாஹ்வைக் காணாமல் காதால் மட்டுமே கட்டளையைக் கேட்டார்கள். எனவே தான் திரைக்கு அப்பால் இருந்துஎன்று இறைவன் கூறுகிறான்.

வெள்ளி, 18 மே, 2012

அல்குர்ஆனும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் (பகுதி - 1)இஸ்லாமிய மார்க்கத்தின் மூல ஆதாரங்களாக திருக்குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் அமைந்துள்ளன. இவ்விரண்டைத் தவிர வேறு எதனையும் முஸ்லிம்கள் மூல ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை நாம் தெளிவாகவே அறிந்து வைத்திருக்கிறோம்.
ஆயினும் சமீபகாலமாக சிலர் விசித்திரமான வினோதமான கேள்விகளை எழுப்பி இரண்டு மூல ஆதாரங்கள் கிடையாது. திருக்குர்ஆன் என்ற ஒரே ஒரு மூல ஆதாரமே போதுமானதாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் தேவையில்லை என்று கூற ஆரம்பித்துள்ளனர்.
ஹதீஸ்களில் முரண்பாடுகள் உள்ளன
குர்ஆனுடன் ஹதீஸ்கள் முரண்படுகின்றன.
ஹதீஸ்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுவோர் பல கூறுகளாகப் பிரிந்து விட்டனர்.
குர்ஆனைப் போல் ஹதீஸ்கள் பாதுகாக்கப்படவில்லை.
என்றெல்லாம் காரணங்கள் கூறி ஹதீஸ்களை நிராகரிக்கச்