அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்)-(பகுதி -16)

ஆன்மீகத் தலமையாலும் பலனடையவில்லை

ஆன்மீகத் தலைவர்களாக இருப்போர் எல்லா வகையிலும் மனிதர்களாகவே இருக்கின்றனர். மற்றவர்களைப் போலவே அவர்களுக்கும் பசிக்கிறது; தாகம் எடுக்கிறது; நோய் ஏற்படுகிறது; மலஜல உபாதை ஏற்படுகிறது; முதுமை ஏற்படுகிறது. சாதாரண மனிதர்கள் அளவுக்குக் கூட துன்பங்களைத் தாங்க முடியாத அளவுக்கு அதிக பலவீனம் உடையவர்களாகவும் அவர்கள் இருக்கின்றனர்.அவ்வாறு இருந்தும் தங்களிடம் கடவுள் அம்சம் இருப்பது போல் மக்களை நம்ப வைக்கின்றனர். தாங்கள் ஆசி வழங்கினால் காரியம் கைகூடும் எனவும் நம்ப வைப்பதில் வெற்றி பெறுகின்றனர். நடை, உடை, பாவனை, பழக்க வழக்கங்கள் அனைத்திலும் தங்களைத் தனித்துக் காட்டிக் கொள்கின்றனர். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை விட அதிக மோசடிக்காரர்களாகவும் இவர்களே திகழ்கின்றனர்.

* தம்மைக் கடவுளின் அம்சமென வாதிடுவது

* சாபமிடுவதாக அச்சுறுத்துவது

* ஆசி வழங்குவதாகக் கூறி ஏமாற்றுவது

* புலனுக்குத் தெரியாதவை பற்றி புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுவது

* கட்டளைகள் யாவும் மற்றவர்களுக்குத் தானே தவிர தனக்குக் கிடையாது என்று நடந்து கொள்வது

* வயிறு வளர்க்கவும், சொத்து சேர்க்கவும் மக்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொள்வது

* மக்களால் நெருங்க முடியாத உயரத்தில் இருப்பது


என்றெல்லாம் பலவிதமான மோசடிகள் காலங்காலமாக ஆன்மீகத்தின் பெயரால் அரங்கேறி வருகின்றன. இவற்றில் எதையும் செய்யாதது மட்டுமின்றி இவற்றைக் கடுமையாக எதிர்த்த ஒரே ஆன்மீகத் தலைவராக நபிகள் நாயகம் (ஸல்) திகழ்ந்தார்கள்.ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் மோசடிகளைக் கண்டு ஆன்மீகத்தை முழுமையாக எதிர்த்துப் போராடிய தலைவர்கள் கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அளவுக்கு ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் மோசடிகளை எதிர்த்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு மோசடிகளை எதிர்த்தார்கள்.ஆன்மீகத் தலைவர்களுக்கு அளவு கடந்த மரியாதை செய்யப்படுவதைக் கண்டு அதை எதிர்த்த எத்தனையோ தலைவர்கள் அது போன்ற மரியாதை தமக்குச் செய்யப்படுவதை இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டனர். இதற்கு வரலாற்றில் அநேக சான்றுகள் உள்ளன. நாமே இத்தகையவர்களை இன்றளவும் சந்தித்து வருகிறோம்.

ஆனால், ஆன்மீகத் தலைவராக இருந்து கொண்டே ஆன்மீகத் தலைவர்களுக்குச் செய்யப்படும் அளவு கடந்த மரியாதையை நபிகள்

புதன், 17 ஏப்ரல், 2013

எஸ்.எஸ்.எல்.சி. கணித வினாக்கள் கடினம்: மாணவர்களுக்கு 10 மார்க் போனஸ்

சென்னை: 10ம் வகுப்பு கணித தேர்வில் கடினமாக வினாக்கள் கேட்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து மாணவர்களுக்கு 10 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க அரசு தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது. 
தமிழகத்தில் கடந்த 5ம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்கள் கணித தேர்வு எழுதினர். தேர்வில் ப்ளூ பிரிண்ட்டுக்கு மாறாக வினாத்தாள் இருந்ததால் அதைப் பார்த்து மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 5 மதிப்பெண்களுக்கான மேட்ரிக்ஸில் வழக்கமாக ஒரு வினா கோட்கப்படும். ஆனால் இம்முறை 2 வினாக்கள் கேட்கப்பட்டன. மேலும் அல்ஜீப்ராவில் வழக்கமாக கேட்கப்படும் 3 வினாக்களுக்கு பதில் 2 வினாக்கள் மட்டுமே கேட்கப்பட்டன. இது தவிர 5 மதிப்பெண்கள் பிரிவில் 2 வினாக்கள் கடினமாக இருந்ததால் அவற்றுக்கு விடை எழுத கூடுதல் நேரம் தேவைப்பட்டது. இதனால் கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. 

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

அண்டார்டிகாவில் வேகமாக பனிக்கட்டிகள் உருகுகிறது! ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

அண்டார்டிகாவில் கடந்த 1000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன.ஸ்திரேலியா  மற்றும் பிரிட்டனை சேர்ந்த ஆராய்ச்சி குழு இதனை கண்டுபிடித்து அறிவித்துள்ளது.
அண்டார்டிகாவில் கடந்த 600 ஆண்டுகளில் வெப்பத்தின் அளவு 1.6 டிகிரி சென்டிகிரேட் உயர்ந்துள்ளது. அதிலும் கடந்த 50 ஆண்டுகளில் தான் வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளது.

அண்டார்டிகாவின் வட முனைப் பகுதியில் உள்ள ஜேம்ஸ் ராஸ் தீவில் 1,197 அடிக்கு பனிக்கட்டிகளை டிரில் செய்து, குடைந்து இந்தப் பகுதியின் கடந்த கால வெப்பத்தையும் தற்போதைய வெப்பத்தையும் ஒப்பிட்டுப் பார்த்துள்ளது இந்த ஆராய்ச்சிக் குழு.இதில் கடந்த 50 ஆண்டுகளில் தான் அண்டார்டிகாவில் பனி உருகுவது 10 மடங்கு அளவுக்கு அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இது ஒட்டுமொத்தத்தில் பூமியின் வெப்பநிலை அதிகரித்து விட்டதையே உறுதிப்படுத்துகிறது என்கிறார் ஆராய்ச்சிக் குழுவின் தலைவரான நெரில் ஆப்ராம்.

நன்றி  : newsonews

 

பற்பசை(thooth paste)...! அபாயம்...!!

அன்றாடம் நாம் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டில் ப்ளோரைடு இருப்பதாக விளம்பரங்கள் வரிசை கட்டுது. அதுவும் தெரியும். ஆனால், தெரியாதது....
புகையிலையில் புதைந்து கிடக்கும் நிக்கோட்டின் என்கிற கொடிய ரசாயனத்தை டூத் பேஸ்ட் டூத் பவுடர்களில் சேர்க்கிறார்கள் என்பது. புதுதில்லியை சேர்ந்த இன்ஸ்டிடியூட் ஆப் பார்மாசூட்டிகல்ஸ் அண்ட் ரிசர்ச் நிறுவனம் இதனை உறுதி செய்திருக்கிறது. இதில் அதிர்ச்சியான விஷயம் நாட்டில் பிரபலமான பத்தில் ஆறு நிறுவனத் தயாரிப்புகளில் இந்த ரசாயனம் சேர்க்கப்படுவதாக வரும் தகவல்களால் மக்களிடையே பீதி, பயம்.

சிகரெட் தயாரிப்புக்கு அடிப்படை புகையிலை புகைபிடிப்பவர்கள் அந்த பழக்கத்துக்கு தொடர்ந்து அடிமையாக முழுமுதற் காரணமான நிக்கோட்டின் ஒரு கொடிய விஷம். அதனால் உதடு, வாய், நுரையீரலில் கேன்சர் ஏற்படுவது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டிருக்கு. பொதுவாக பற்களில் வரும் பாதிப்புகளை தடுக்க டூத் பேஸ்ட் பவுடர்களில் அவ்வப்போது புதிய ரசாயனங்கள் சேர்க்கப்படுவது உண்டு. அதனடிப்படையில் ப்ளோரைடு இருக்கும் டூத் பேஸ்ட், பவுடரை தொடர்ந்து பயன்படுத்தியபோது பல்லின் மேல்பூச்சு (எனாமல்) கரைந்து, பற்களில் கூச்சம் வருவதாக புகார்கள் வந்தன. அதானல் பேஸ்ட், பவுடர்களில் ப்ளோரைடின் அளவுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
அந்த வரிசையில் புதிதாக நிக்கோட்டின் சேர்க்கப்படுவதாக சொல்கிறார்கள்.

ஆபாச தளங்களை தடை செய்வது தொடர்பாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

இந்தூரை சேர்ந்த வக்கீல் கமலேஷ் வாஸ்வானி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள ஒரு மனுவில், இணையதளத்தில் ஆபாச வீடியோ படங்களை பார்ப்பது குற்றமல்ல, ஆனால் இது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என்று கூறியிருந்தார்.

இது தொடர்பான புகாரை சைபர் சட்டப்படி பதிவு செய்வதால் இதற்கு தீர்வு காண முடியாது. அதில் உள்ள சில குறிப்பிட்ட பகுதிகள் இந்திய அரசியல் சாசனத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டதாக உள்ளது என்று அவர் கூறினார். இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையிலான பெஞ்ச் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முக்கிய காரணமாக விளங்கும் இணையதளங்களில் உள்ள ஆபாச தளங்களை (சைட்டுகளை), குறிப்பாக குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்கும் காட்சிகளை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். இதற்காக ஒரு ஆபாச படங்களுக்கு எதிரான ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை, தகவல் ஒளிபரப்பு மற்றும் உள்துறை அமைச்சர்களுக்கும், இந்திய இணையதள சேவை வழங்குவோர் சங்கம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் வழங்கவும் நீதிபதி அல்டமாஸ் கபீர் உத்தரவிட்டார்.

நன்றி : maalaimalar

"திண்ணமாக அல்லாஹ் நீதி செலுத்தும் படியும் நன்மை செய்யும்படியும் உறவினர்களுக்கு ஈந்துதவும்படியும் கட்டளையிடுகிறான். மேலும், மானக்கேடான, வெறுக்கத்தக்க, அக்கிரமமான செயல்களை விலக்குகிறான்.." (குர்ஆன் 16:90).

விபச்சாரத்திற்கு  நெருங்காதீர்கள், அது வெட்கக்கேடாதனாகவும், தீய வழியாகவும் இருக்கிறது.(குர்ஆன் 17:32)

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்)-(பகுதி -15)

அவர்களைப் பொருத்தவரை  பிரமுகர்களும், சாமான்யர்களும் சமமாகவேத் தோன்றினர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்யும் வேலையை ஒரு கறுப்பு நிற மனிதர் செய்து வந்தார். அவர் திடீரென இறந்து விட்டார். அவரை அற்பமாகக் கருதிய நபித் தோழர்கள் அவரது மரணத்தை நபிகள் நாயகத்திடம் தெரிவிக்காததால் அவர் இறந்ததை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறியவில்லை. ஒரு நாள் அவரைப் பற்றி நினைவு வந்து 'அவர் எங்கே?' என விசாரித்தனர். அவர் இறந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 'அப்போதே எனக்கு இதைத் தெரிவித்திருக்க மாட்டீர்களா?' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். பின்னர் 'அவரது அடக்கத் தலத்தை எனக்குக் காட்டுங்கள்' என்றனர். அவரது அடக்கத் தலத்தைக் காட்டி யதும் அங்கே சென்று அவருக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.  
நூல் : புகாரி 1337

'இறந்தவர் பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்குபவர் என்பதால், இவரைப் போன்ற மதிப்பற்றவர்களின் மரணத்தை ஏன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்க வேண்டும்?' என எண்ணி நபித் தோழர்கள் அவரை அடக்கம் செய்கின்றனர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இதை ஏற்க முடியவில்லை. 'எனக்கு ஏன் அப்போதே தெரிவிக்கவில்லை?' எனக் கேட்கிறார்கள்.அறிவித்திருந்தால் அவரை நல்லடக்கம் செய்யும் பணியில் நானும் ஈடுபட்டிருப்பேனே என்ற எண்ணத்தில் இவ்வாறு கேட்கிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒப்புக்காக இவ்வாறு கூறவில்லை. மாறாக அவரை நல்லடக்கம் செய்த இடம் எதுவென விசாரித்து அறிந்து அங்கே சென்று அவருக்காகப் பிரார்த்தனை செய்வதைக் காண்கிறோம். அவர்களைப் பொருத்தவரை பிரமுகர்களும், சாமான்யர்களும் சமமாகத் தோன்றியதால் தான் இவ்வாறு அவர்களால் நடந்து கொள்ள முடிந்தது.

அனஸ் (ரலி) அவர்கள் நபிகள் நாயகத்தின் பணியாளராக இருந்தார். அவரது பாட்டி முளைக்கா (ரலி) தமது இல்லத்துக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விருந்துக்கு அழைத்து வருமாறு கூறினார். அங்கே சென்று அவர் அளித்த விருந்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கொண்டார்கள். முளைக்கா (ரலி) வசதி படைத்தவர் அல்லர். சமூகத்தில் செல்வாக்குப் பெற்றவரும் அல்லர். மிக மிகச் சாதாரண நிலையில் உள்ளவர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கே சாப்பிட்டு முடித்ததும் அங்கேயே தொழுதார்கள். தொழுவதற்குத் தகுதியான பாய் கூட அவ்வீட்டில் இருக்கவில்லை. நீண்ட நாட்கள் பயன் படுத்தியதால் கறுப்பு நிறமாக மாறிவிட்ட பாய் தான் அங்கே இருந்தது. அதில் தான் தொழுதார்கள். நூல் : புகாரி 380, 860

பாய் கூட இல்லாத அளவுக்குப் பரம ஏழை தான் முளைக்கா (ரலி). அவர் அளித்த விருந்து எத்தகையதாக இருந்திருக்கும் என்பதை இதிலிருந்து ஊகிக்கலாம். நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் கூட ஒதுக்கித் தள்ளும் நிலையில் இருந்த ஏழைக் குடிசையின் விருந்தை ஆட்சித் தலைவராகவும், ஆன்மீகத் தலைவராகவும் உள்ள நபிகள் நாயகம் (ஸல்) ஏற்றுள்ளனர். அவர்கள் எல்லா மனிதர்களின் உணர்வுகளையும் மதிப்பவர்களாக இருந்தார்கள். சாதாரண மனிதனும் கூட தன்னை விட அற்பமானவர்களை ஒதுக்கித் தள்ளுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் போது மிக உயர்ந்த நிலையில் இருந்த இந்த மாமனிதர் இதிலும் வெற்றி பெறுகிறார்கள்.ஆன்மீகத் தலைவர்களானாலும், அரசியல் தலைவர்களானாலும், அதிகாரம் படைத்தோராக இருந்தாலும் பிரமுகர்களையும், சாமானியர்களையும் பாரபட்சமாக நடத்துவதைக் காண்கிறோம்.அதிகாரம் படைத்தோர், அரசியல்வாதிகள் இவ்வாறு நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது என்றாலும், 'நாங்கள் பக்குவம் பெற்றவர்கள், துறந்தவர்கள்' என்றெல்லாம் அவர்கள் தம்மைப் பற்றி கூறிக் கொள்வதில்லை. எனவே அவர்கள் சாமான்யர்களையும், பிரமுகர்களையும் பாரபட்சமாக நடத்துவதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

உலகின் மிக ஆழமான பகுதி

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள மரியானா டிரன்ச் ( Mariana Trench) தான் உலகின் மிக ஆழமான பகுதியாகும். இது ஜப்பான் அருகில் உள்ள பதினான்கு மரியானா (Mariana) தீவுகூட்டங்களுக்கு அருகில் அமைந்துள்ளது (11″21′ North latitude and 142″ 12′ East longitude ). இதுதான் உலகின் ஆழமான கடல் பகுதி என்பது நாம் எல்லாருக்கும் தெரிந்திருக்கும், ஆனால் இது தான் பூமியிலேயே மிகவும் ஆழமான பகுதியாகவும் இருக்கிறது. இந்த பகுதியின் ஆழம் சுமார் 11,033 மீட்டர்  (36,201 feet). மிகவும் அழுத்தம் அதிகமாக உள்ள இந்த பகுதி சுமார் 2, 542 கீ.மீ  நீளமும் 69 கீ.மீ  (43 miles) அகலமும் உடையதாகும். 


நன்றி : தமிழன் சுவடு

வியாழன், 11 ஏப்ரல், 2013

வெயில் கால நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க....!


தகுந்த காலங்களில் தடுப்பூசி போடாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மைத் தொற்றுக்கு ஆளாகிறார்கள். அதனால் பெற்றோர்கள் குழந்தைக்கான தடுப்பூசிகளிலும் அக்கறை செலுத்த வேண்டும்.
வெயில் காலங்களில், ஈரத்தன்மையுள்ள பொருட்களில் கிருமிகள் மிக வேகமாக வளரும் என்பதால், பழம், காய்கறி நறுக்கிய கத்திகள், சமைக்கும் பாத்திரங்களை ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்.
வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரங்களில், குழந்தைகளை வெளியில் விளையாடுவதை தடுத்து, கேரம், செஸ், போன்ற கேம்களை வீட்டில் அமர்ந்து விளையாடச் சொல்லலாம்.

வேர்க்குருவை தவிர்க்க ஒரு நாளில் இருமுறை குளிப்பதும், விளையாடிய பின்பு கை கால்களை நன்கு சோப்பு போட்டு கழுவுவதும் உடல் தூய்மையை அதிகரித்து நோய் தாக்கத்தை குறைக்கிறது.வெளியில் செல்லும்போதோ அல்லது விளையாடும்போதோ தலையில் தொப்பியும், குழந்தைகளின் கண்களைப் பாதுகாக்க, கண் கண்ணாடி (வெப்பத் தடுப்பு) அணியச் செய்வதும் அவசியம்.வெயில் காலங்களில் குறிப்பாக, ஆண் குழந்தைகளுக்கு சிறுநீர் கடுப்பு நோய் ஏற்பட வாய்ப்புண்டு. காரணம் விளையாடும் குஷியில் சிறுநீர் கழிக்கக்கூட மறந்துவிடுவார்கள். அதனால், அவர்களை இந்த விஷயத்திலும் கண்காணிக்க வேண்டியது பெற்றோரின் கடமை.

உணவுகளை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து பின்னர் அதை எடுத்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தால், அந்த உணவு வகைகளை நன்றாக சூடாக்கி பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கும் வயிற்றுக்கும் நல்லது. இதனால் வயிற்றுப்போக்கு பிரச்சினைகளை தடுக்கலாம். அதுவும் வெயில் காலத்தில் வயிற்றுபோக்கு பிரச்சினைகள் வந்துவிட்டால், குழந்தைகளின் உடம்பில் நீர்ச்சத்து குறைந்து விரைவில் சோர்ந்து விடுவார்கள்.

வெளியில் செல்லும் போது, வணிக நோக்கத்தை மையமாகக் கொண்ட சுகாதாரமற்ற முறையில் இருக்கும் சில கடைகளை தவிர்த்து, எளிய எலுமிச்சை சாறு பானத்தை வீட்டிலேயே தயாரித்து எடுத்துச் செல்வது நல்லது. தண்ணீரை மாற்றி மாற்றி குடிப்பதால் ஏற்படும் தொண்டை சம்மந்தப்பட்ட நோய்களைத் தவிர்க்கலாம்.

வெயில் காலத்தில் குழந்தைகள் அணியும் ஆடைக்கும் முக்கியத்துவம் தந்து, அரிப்பு ஏற்படுத்தாத, வியர்வையை உறிஞ்சக்கூடிய பருத்தி ஆடைகளை அணிவிக்கலாம்.சாதாரண பவுடர்களுக்கு பதில் வேர்க்குருவைத் தடுக்கும் பவுடர்களை குழந்தைகளுக்குப் பயன்படுத்துவது நல்லது.

நன்றி  : கூடல்

திங்கள், 8 ஏப்ரல், 2013

உண்மை பேசுவது நன்மைக்கு வழி வகுக்கும்.


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اتَّقُواْ اللّهَ وَكُونُواْ مَعَ الصَّادِقِينَ {119}
9:119. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உண்மையாளர்களுடன் ஆகுங்கள்! 
அஸ்ஸலாமு அலைக்கும்வரஹ்...
 
இஸ்லாத்தை வெறுத்த மக்களுடைய உள்ளங்களிலும்கூட உண்மையாளர் என்ற நன்னம்பிக்கையை விதைத்தவர்கள் ஏகஇறைவனின் இறுதித்தூதர்(ஸல்) அவர்கள்.இஸ்லாத்தை வெறுத்ததுடன் அதை வேறெருக்க தருனம் பார்த்து காத்துக் கொண்டிருந்தவர் அபூ சுஃப்யான் அவர்கள். சத்தியத் தூதர்(ஸல்) அவர்களைப் பற்றிய உண்மையான விபரங்களை ஹிர்கல் மன்னன் அரசவையில் கூறுவதற்கான வாய்ப்பு அபூ சுஃப்யான் அவர்களுக்கே கிடைத்தது. அபூஜஹ்லும், அபூஜஹ்லைப் போன்ற பெருந்தலைவர்களும் அதிகமானோர் பத்ரில் கொல்லப்பட்டப் பின்னரும் சிறிதும் தயங்காமல் தலைமைப் பொறுப்பை ஏற்று துரிதமாக செயல்பட்டவர். முஸ்லீம்களுக்கெதிரான பல போர்களை தலைமை தாங்கி வழிநடத்தியவர்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடைய முகத்தில் பயங்கர காயத்தை ஏற்படுத்தி கடைவாய் பல் உடைந்து இரத்தத்தை ஓட்டச்செய்த உஹது யுத்தத்தில் எண்ணிலடங்கா முஸ்லீம்களின் சடலங்களின் மீது நடந்து சென்று லாத் வாழ்க ! உஸ்ஸா வாழ்க ! மனாத் வாழ்க ! என்று கைகளை உயர்த்தி விண்ணதிர முழங்கிய பயங்கர இஸ்லாமிய எதிர்ப்பாளர்.அப்படிப்பட்ட பயங்கர இஸ்லாமிய எதிர்ப்பாளர் ஒருநாள் இஸ்லாத்தை தழுவியதாக பிரகடனம் செய்தார்.

முஸ்லீம்களுடன் நடந்த எந்த யுத்தத்திலும் வாள் முனையில் அவர் இஸ்லாத்தை ஏற்க வில்லை ! அல்லது தோல்வியைத் தழுவி இஸ்லாத்தை ஏற்க வில்லை ! மாறாக அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் உண்மைப் பேசும் நற்குணம் அவருடைய  வாழ்க்கையை ஒருநாள் தலைகீழாகப் புரட்டி எடுத்து ரலியல்லாஹீ அன்ஹீ என்ற அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்குரியவரானார்.

அன்றொரு நாள் !!

ரோம பேரரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிய ஃபலஸ்தீனத்து சந்தை ஒன்றில் வியாபாரம் நிமித்தம்  அபூசுஃப்யான் அவர்கள் அமர்ந்திருந்தப் பொழுது அரசவைக் காவலர்களில் சிலரால் ரோமாபுரி மன்னர் ஹிர்கல் அவர்களின் அவைக்கு அழைத்து செல்லப்பட்டார். 

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்)-(பகுதி -14)

மக்களுடன் கலந்து மக்களில் ஒருவராக இருப்பதையே தேர்வு செய்து கொண்டார்கள்.

ஆன்மீகத் தலைவராகவும், மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் அதிபராகவும் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த உயர் பண்பின் காரணமாகவே மாமனிதர் எனக் குறிப்பிடப்படுகிறார்கள்.நாகரீகம் வளர்ந்து விட்ட இந்தக் காலத்தில் கூட ஆன்மீகத் தலைவரோ, அரசியல் தலைவரோ, பெரிய தலைவரோ, சிறிய தலைவரோ இவ்வளவு சகஜமாக சாதாரண மக்களுடன் நடப்பதில்லை என்பதைக் கவனிக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அப்பழுக்கற்ற நம்பகத் தன்மை நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்துகிறது.

மற்றொரு நிகழ்ச்சியைப் பாருங்கள்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடந்து செல்லும் வழியில் சிலர் அம்பெய்யும் போட்டி நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இஸ்மாயீன் வழித் தோன்றல்களே! அம்பெய்யுங்கள்! உங்கள் தந்தை இஸ்மாயீல் அம்பெய்பவராக இருந்தார். நான் இந்த அணியில் சேர்ந்து கொள்கிறேன்' என்று கூறினார்கள். மற்றொரு அணியினர் அம்பெய்வதை உடனே நிறுத்திக் கொண்டனர். ஏன் நிறுத்தி விட்டீர்கள்? என்று அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். 'நீங்கள் அந்த அணியில் இருக்கும் போது உங்களுக்கு எதிராக நாங்கள் எப்படி அம்பெய்வோம்?' என்று அவர்கள் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'நான் உங்கள் அனைவருக்கும் பொதுவாக இருக்கிறேன். எனவே நீங்கள் அம்பெய்யுங்கள்' என்றார்கள். நூல் : புகாரி 2899, 3507, 3373

இரண்டு அணிகள் அம்பெய்து விளையாட்டில் ஈடுபடும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டு கொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டிருக்கலாம். அவ்வாறு ஒதுங்காமல் அவர்களை ஊக்குவிக்கிறார்கள். தாமும் ஒரு அணியில் சேர்ந்து சாதாரண மனிதர் நிலைக்கு இறங்கி வருகிறார்கள். எதிரணியினரின் மனம் ஒப்பாததன் காரணமாகவே அதிருந்து விலகிக் கொள்கின்றனர்.

மற்றொரு நிகழ்ச்சியைப் பாருங்கள்.

மிக்தாத் (ரலி) என்னும் நபித்தோழர் அறிவிக்கிறார்கள். நானும், எனது இரு நண்பர்களும் பசியின் காரணமாக செவிகள் அடைத்து, பார்வைகள் மங்கிய நிலையில் (மதீனா) வந்தோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்களிடம் எங்களின் நிலையை எடுத்துச் சொன்னோம். எங்களை ஏற்று தங்க வைத்து உணவளிக்க யாரும் முன் வரவில்லை. பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நாங்கள் சென்றோம். அவர்கள் எங்களைத் தமது வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கிருந்த மூன்று ஆடுகளைக் காட்டி 'இந்த ஆடுகளில் பால் கறந்து நம்மிடையே பங்கு வைத்துக் கொள்வோம்' என்று கூறினார்கள். எனவே நாங்கள் பால் கறந்து எங்களில் ஒவ்வொருவரும் தமது பங்கை அருந்தி விட்டு நபிகள் நாயகத்தின்