அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) - (பகுதி -1)

பதிப்புரை

நபிகள் நாயகம் (ஸல்காலத்தில் வாழ்ந்த நாகரீகமில்லாத சமுதாயத்தினர் இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர்.உலகில் உள்ள எல்லா மதங்களையும் ஆராய்ச்சி செய்து இது தான் சரியான மார்க்கம் என்று முடிவு செய்து அவர்களில் யாரும் இஸ்லாத்தை ஏற்கவில்லை.நபிகள் நாயகம் (ஸல்அவர்களை இறைவன் தூதராக நியமித்ததைக் கண்ணால் கண்டு விட்டு அவர்களை இறைத் தூதர் என்று நம்பினார்களாஎன்றால் அதுவும்இல்லை.திருக்குர்ஆனை அலசி ஆராய்ந்து பார்த்து விட்டு இது இறைவனின் வேதமாகத் தான் இருக்க முடியும் என்று முடிவு செய்து இஸ்லாத்தை ஏற்றார்களாஎன்றால்அப்படியும் இல்லைதிருக்குர்ஆன் வசனங்களில் நூறில் ஒரு பகுதி அருளப்படுவதற்கு முன்பே பலர் இஸ்லாத்தை ஏற்று விட்டனர். மாறாக அவர்கள் முஹம்மதுநபியைத் தான் கண்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் தமது நாற்பது வருட வாழ்க்கையில் ஒரே ஒரு பொய் கூட சொல்லி அவர்கள் கண்டதில்லை.நபிகள் நாயகம் (ஸல்அவர்கள் யாரையும் ஏமாற்றியதாகவோயாருக்கும் அநீதி இழைத்ததாகவோ அவர்கள் அறிந்ததில்லை.

ஊரில் மிகப் பெரும் செல்வந்தராக இருந்தும் அதனால் ஏற்படும் செருக்கு எதனையும் நபிகள் நாயகம் (ஸல்அவர்களிடம் அம்மக்கள் கண்டதில்லைமாறாக தமதுசெல்வத்தைப் பிறருக்கு வாரி வழங்குவதில் இன்பம் காண்பவராகவே அவர்களைக் கண்டார்கள்.சுயநலனில்லாத அவர்களின் பரிசுத்த வாழ்க்கையைத் தான் அம்மக்கள் கண்டார்கள்.'நூறு சதவிகிதம் இவரை நம்பலாம்என்று நபிகள் நாயகத்தின் மீது அவர்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கை தான் இஸ்லாத்தை அவர்கள் ஏற்பதற்கு முதல் காரணமாகஇருந்தது.

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

ஆவியின் பெயரால் நிகழும் அட்டூழியங்கள்


ஏகஇறைவனின் திருப்பெயரால்....

حَتَّى إِذَا جَاء أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ {99} لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ كَلَّا إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا وَمِن وَرَائِهِم بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ {100}

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது "என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.
(குர்ஆன்23:99, 100)

ஷேக்பாபுஅல்லாபி என்ற முஸ்லீம் தம்பதிகள் நள்ளிரவு நேரங்களில் சென்று கிராமத்தின் இடுகாட்டில் மண்டை ஓடுகளை சேகரித்துக் கொண்டு வந்து பில்லி சூனியம் செய்வதை பிழைப்பாகக் கொண்டவர்கள். சம்மந்தப்பட்ட கிராமத்தில் எதிர்பாராமல் தொடர் மரணங்கள் நிகழவே இவர்கள் மண்டை ஓடுகளை சேகரித்து பில்லி,சூனியம் செய்வதால் ஏற்பட்ட விளைவு தான் தொடர் மரணம் என்று முடிவு செய்த ஊர் மக்கள் அவர்களை நையப்புடைத்து இருவரின் பற்களையும் நிற்க வைத்து கதற கதற பிடுங்கி எடுத்துள்ளனர்.  

42 வயதையுடை முருகன் என்ற மந்திரவாதி நர்சிங் கல்லூரியில் பயிலும் மாணவியையும், 7ம் வகுப்புப் படிக்கும் மாணவியையும் இறந்த ஆவியை விரட்டுவதற்கு தனி அறையில் பூஜை செய்ய வேண்டும் என்றுக் கூறி தாய். தந்தை அனுமதியுடன் கதவைத் தாழிட சிறிது நேரத்தில் அலறி அடித்து கதவைத் திறந்து கொண்டு இரண்டு மகள்களும் ஓடிவந்து மந்திரவாதி தவறாக நடக்க முயற்சித்ததாகக் கூற ஊர் மக்கள் கூடி நையப்புடைத்துள்ளனர். இது மற்றொரு சம்பவம்.

படிப்பினை பெற வேண்டாமா ?
தொலைகாட்சிகளைத் திறந்தால்செய்தித் தாள்களைப் புரட்டினால் மேற்காணும் செய்திகள் வராத நாளே இல்லை எனும் அளவுக்கு ஃப்ளாஷ் நியூசாக வந்து கொண்டிருக்கிறது.  

சட்டத்தின் பிடியில் சிக்கிய சங்கராச்சாரியாவிலிருந்து நித்யானந்தா வரை உள்ள சாமியார்கள் பாலியல் பலாத்காரம்மற்றும் கொலை கொள்ளைகளை கடவுளின் பெயரால் நடத்தினர்மந்திரவாதிகள் இறந்தவர்களின் ஆவியின் பெயரால் நடத்துகின்றனர்.

வீட்டுக்கு வீடு டிவி வந்து விட்டாலும் நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை மக்கள் அவ்வளவாக காண்பதில்லைகாண முடியாத அளவுக்கு சினிமாவும்,சீரியல்களும்காமெடி காட்சிகளும் நேரத்தை ஆக்ரமித்துக்கொண்டு விட்டதால் இன்னும் கிராமப் புற மக்கள் நாட்டு நடப்புகளை தெரிந்து கொண்டு பொது அறிவை வளர்த்துக் கொள்ள முடியாதவர்களாகவே இருக்கின்றனர்.  

இதில் கிராமப் புறத்து மக்கள் மட்டும் விதிவிலக்கல்ல பட்டணத்து ஆபீஸர்களும் கூட இதில் அடங்குவர்.

சமூகவிரோத செயல்களுக்காக.
சில பாழடைந்த கட்டடங்களில் ஆவி உலாவுவதாக கூறி அந்த கட்டடத்தை யாரும் விலைக்கு வாங்க முடியாத அளவுக்கு, யாரும் குடி இருக்க முடியாத அளவுக்குஅவ்வழியே நடமாட முடியாத அளவுக்கு சில சமூக விரோதிகள் கோயபல்ஸ் ஸ்டைலில் பரப்பி விடுவார்கள் அதனால் அக்கட்டடம் சிதிலமடைந்து கிடக்கும்.

ஆனால் இரவானதும் அதற்குள் அனைத்து விதமான சமூக விரோத செயல்களும் தாராளமாக நடக்கும். சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவோரை மட்டும் ஆவி விட்டு வைப்பதெப்படி என்பதை பொது மக்கள் சிந்திக்க மறுப்பது ஏன் ?  

பேரரசர் ஷாஜகானின் மனைவி மும்தாஜ் ஒரு பிரசவத்தில் இறந்ததும் முதலில் புர்ஹாம்பூரில் உள்ள புலாரா மஹாலில் தான் அடக்கம் செய்யப்பட்டார்.

புதன், 29 ஆகஸ்ட், 2012

திருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன்?


கேள்வி: உலகம் முழுவதும் எத்தனையோ மொழிகள் பேசப்படுகின்றன. அத்தனை மொழிகளையும் விட்டுவிட்டு உங்கள் வேதமாகிய குர்ஆனைஏன் இறைவன் அரபி மொழியிலே இறக்கி வைத்தான்என்று மாற்று மத நண்பர்கள் கேட்கிறார். 
                                                                              - எஸ்.எம்.ஹெச். கபீர்கீழக்கரை.

பதில்: மனிதர்களிலிருந்து தூதர்களைத் தேர்வு செய்து அவர்கள் மூலமே இறைவன் வேதங்களை வழங்கியுள்ளான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னர் ஏராளமான தூதர்கள் அனுப்பப்பட்டனர். அத்தூதர்களின் தாய்மொழி எதுவோ அம்மொழியில் அவர்களுக்கு வேதங்கள் அருளப்பட்டன.
எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம். தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். அவன் மிகைத்தவன்ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 14:4)

ஈஸா என்னும் இயேசு நாதரும் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் என்று குர்ஆன் கூறுகிறது. அவருக்கு இஞ்சீல் என்னும் வேதம் வழங்கப்பட்டதாகவும் கூறுகிறது. அந்த வேதம் அரபு மொழியில் அருளப்படவில்லை. இயேசுவின் தாய்மொழியில் தான் அருளப்பட்டது.

அந்த அடிப்படையில் தான் நபிகள் நாயகத்துக்கு அரபு மொழியில் வேதம் அருளப்பட்டது. நபிகள் நாயகத்துக்கு அரபு மொழி தான் தெரியும். அவர்களுக்குத் தெரிந்த மொழியில் வேதம் அருளப்பட்டால் தான் அவர்களால் அதற்கு விளக்கம் கூற முடியும்

இந்தியாவின் செவ்வாய்கிரக ஆராய்ச்சி திட்டம்


செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக மார்ஸ் ஆர்பிட்டர் என்ற விண்கலத்தை இந்தியா அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் விண்ணில் செலுத்துகிறது. ரூ.450 கோடி செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த விண்கலம் பி.எஸ்.எல்.வி & எக்ஸ்.எல். ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
 
இந்தியாவின் செவ்வாய்கிரக ஆராய்ச்சி திட்டம் குறித்து இஸ்ரோவின் முன்னாள் தலைவரும் மூத்த விண்வெளித்துறை விஞ்ஞானியுமான யு.ஆர்.ராவ் கூறியதாவது:
 
'இந்தியாவின் செவ்வாய் கிரக ஆராய்ச்சி திட்டத்தின் முக்கிய நோக்கமே செவ்வாய் கிரகத்தின் மீத்தேன் வாயு மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதுதான்.
சந்திரயான்-1 திட்டத்தை நாம் முதலில் தொடங்கியபோது சந்திரனில் தண்ணீர் இருப்பதை நாம் கண்டுபிடிக்கப்போகிறோம் என்று நமக்கு தெரியாது. இன்னும் சொல்லப்போனால் சந்திரன் பற்றிய ஆராய்ச்சியை நாம் தாமதமாகவே தொடங்கினோம் என்றாலும் சந்திரனில் தண்ணீர் இருக்கிறது என்ற அரிய உண்மையை நாம்தான் முதலில் கண்டு பிடித்தவர்களானோம்.
 
அந்த வகையில் தற்போது செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கான குறிக்கோளையும் நாம் எடுத்துக்கொண்டு இருக்கிறோம். இது உள்ளபடியே ஒரு நல்ல ஆராய்ச்சி ஆகும். செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் மீத்தேன் வாயு உள்ளது. இந்த வாயு எப்படி உருவாகிறது. எது இந்த மீத்தேன் வாயுவை உருவாக்குகிறது என்ற மர்ம முடிச்சை அவிழ்ப்பதுதான் நமது மார்ஸ் ஆர்பிட்டரின் நோக்கம் ஆகும்.
 

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

இஸ்லாம் மார்க்கமா? மதமா?


கேள்வி: நான் நேரான பாதையில் செல்ல விரும்பு கிறேன். ஆகையால்இஸ்லாத்தின் வழி நடக்க எனக்குச் சில சந்தேகங்கள் உள்ளன. இந்து மதம்கிறித்தவ மதம்சீக்கிய மதம்பிராமண மதம் எனப் பல வகையான மதங்கள் உண்டு. ஆனால்இஸ்லாமிய மதம் என்று கூறாமல்இஸ்லாமிய மார்க்கம் என்று கூறுவது ஏன்? - 
டி. பாலுகோவை.

பதில்: முஸ்லிம்கள் இஸ்லாத்தை மதம் என்று கூறாமல் மார்க்கம் என்று கூறி வருகின்றனர். மற்ற மதத்தவர்கள் தங்கள் மதங்களை மதங்கள் என்று தான் கூறிக் கொள்கின்றனர். மார்க்கம் எனக் கூறிக் கொள்வதில்லை.

மார்க்கம் என்றால் பாதைவழி என்பது பொருள். மனிதன் உலகில் வாழும் போது எந்தப் பாதையில் சென்றால் வெற்றி பெறலாம்அவன் வாழ்க்கையில் சந்திக்கின்ற எண்ணற்ற பிரச்சனைகளின் போது எந்த வழியில் செல்வது தீர்வாக அமையும்என்பதற்கெல்லாம் விடை இருந்தால் அதை மார்க்கம் எனக் கூறலாம்.

மலஜலம் கழித்தல் முதல்மனைவியுடன் தாம்பத்தியம் கொள்வது வரை அனைத்து விஷயங்களுக்கும் இஸ்லாத்தில் வழிகாட்டல் உள்ளது. அரசியல்,பொருளாதாரம்குற்றவியல் சட்டங்கள்சிவில் சட்டங்கள்விசாரணைச் சட்டங்கள்உள்ளிட்ட எல்லாப் பிரச்சினைகளுக்கும் இஸ்லாத்தில் வழிகாட்டுதல் உள்ளது.

உலகில் உள்ள ஏனைய மதங்கள் கடவுளை வழிபடும் முறைகளையும்புரோகிதர்கள் தொடர்புடைய சடங்குகளையும் மட்டுமே கூறுகின்றன. இதன் காரணமாகத் தான் இஸ்லாம் மார்க்கம் எனவும் ஏனையவை மதங்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றன.

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

நோன்புப் பெருநாள்

அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்லாஹ்வின் பேரருளால் 20.08.2012 அன்று நோன்புப் பெருநாள் தொழுகை ஆயங்குடி தவ்ஹீத் பள்ளிவாசலில் நடைபெற்றது.ஆண்கள் பள்ளிவாசல் சாலையிலும் பெண்கள் பள்ளியின் வெளி வராந்தாவிலும் தங்கள் தொழுகையை நிறைவேற்றினர்.

மவ்லவி T.சபியுல்லாஹ் அவர்கள் பெருநாள் தொழுகையை நடத்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

சதகத்துல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் தர்மம்

அஸ்ஸலாமு அலைக்கும்.


அல்லாஹ்வின் பேரருளால் கடலூர் மாவட்டம் ஆயங்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மூலம் ஃபித்ரா வசூல் செய்யப்பட்டு, 19.08.2012 அன்று ஏழை மக்களுக்கு தொகுத்து வழங்கப்பட்டது.

ஊரில் வசூல் செய்யப்பட்ட தொகை                 ரூ.20380,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில
தலைமை மூலம் கொடுக்கப்பட்ட தொகை   ரூ.10000, 

ஆக மொத்தம்                                                              ரூ.30380

இந்த தொகை மூலம் 107 பயனாளிகள் ஓவ்வொருவருக்கும் கோழி, அரிசி, சமையல் பொருட்கள்ஆகியவை வழங்கப்பட்டது.

இதர செலவுகள் போக மீதமுள்ள தொகை ரூ.1010, இரு குடும்பங்களுக்கு ரூ.500, மற்றும் ரூ.510, என பகிர்ந்தளிக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

சனி, 11 ஆகஸ்ட், 2012

அஸ்ஸாம் கலவரம் கொன்று குவிக்கப்படும் முஸ்லிம்கள்!‎


கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அஸ்ஸாமில் முஸ்லிம்களின் மீதான ‎தாக்குதல் கொடூரமாக நடந்து வருகின்றது. போடா லேண்ட் ‎பகுதியிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியே தீருவோம் என ‎திட்டமிட்டு முஸ்லிம்களை கொன்றொழித்துக் கொண்டிருக்கின்றனர், ‎தனி நாடு கேட்டு ஆயுதம் ஏந்தி போராடும் போடோ தீவிரவாதிகள். ‎இதுவரை பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சத்திற்கும் ‎மேற்பட்ட முஸ்லிம்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். 
போடோ ‎தீவிரவாதிகளின் இந்த வெறிச்செயலை வேடிக்கை பார்க்கின்றது மத்திய, மாநில அரசுகள். இவர்களின் இந்த தீவிரவாதத் தாக்குதல் ஒடுக்கப்படவில்லை என்றால் போடோ லேண்ட் பகுதில் வசிக்கும் ‎லட்சக்கணக்கான முஸ்லிம்களின் நிலைமை மிகவும் ‎மோசமாகிவிடும்.

கலவரத்தின் பின்னணி :‎
போடோ லேண்ட் சிறுபான்மை மாணவர் பேரவையின் தலைவர் ‎முஹிப்புல் இஸ்லாம் மற்றும் அஸ்ஸாம் சிறுபான்மை மாணவர் ‎பேரவையைச் சேர்ந்த அப்துல் சித்தீக் சேக் ஆகியோர் போடோ ‎தீவிரவாதிகளால் ஜூலை 20 அன்று கொல்லப்படுகின்றனர். இந்த ‎போடோ தீவிரவாதிகள்தான் முஸ்லிம்களைக் கொலை செய்து ‎கலவரத்திற்கு வித்திட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக போடோ ‎தீவிரவாத குழுவைச் சேர்ந்தவர்கள் மறுநாள் கொல்லப்படுகின்றனர். ‎இதனால் இரு சமூகங்களுக்கிடையே பயங்கர கலவரம் ஏற்படுகின்றது.‎
போடா லேண்ட் பகுதியின் கொக்ரஜ்ஹர், சிராங், பக்ஸா ‎மாவட்டத்திலும் மற்றும் துப்ரி மாவட்டத்திலும் கலவரம் காட்டுத்தீ ‎போல் பரவுகின்றது. இதுவரை இந்த கலவரத்திற்கு 58க்கும் ‎மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.‎
1,70,000 பேர் தங்களுடைய இருப்பிடங்களை விட்டுவிட்டு அகதிகளாக ‎அண்டை மாவட்டங்களிலும், அண்டை மாநிலமான மேற்கு ‎வங்கத்திலும் குடிபெயர்ந்துள்ளனர்.‎

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

நோன்பின் சட்டங்கள்