அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வெள்ளி, 29 ஜூன், 2012

அல்குர்ஆனும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் (பகுதி - 5)


அல்லாஹ் தன் அருளினால் மனிதர்களுக்கு வழங்கியவற்றின்மீது இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? இன்னும் நாம் நிச்சயமாக இப்றாஹீமின் சந்ததியினருக்கு வேதத்தையும், ஹிக்மத்தையும் கொடுத்தோம். அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம். 
(அல்குர்ஆன் 4 : 54)
இவ்வசனத்தில் இப்றாஹீம் நபிக்கும் அவரது வழித் தோன்றல்களாக வந்த நபிமார்களுக்கும் கிதாபையும் ஹிக்மத்தையும் வழங்கியிருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். பொதுவாக எல்லா நபிமார்களுக்கும் குர்ஆனுடன் ஹிக்மத்தும் அருளப்பட்டதாகக் கூறும் இறைவன் இதே முறையில் தான் இதே மாதிரியாகத் தான் நபிகள் நாயகத்துக்கும் வஹீ அருளியிருப்பதாகக் கூறுகிறான்.
(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்றாஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம். இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம். (அல்குர்ஆன் 4 : 163)
இந்த நபிமார்களுக்கு எவ்வாறு வஹீ அருளப்பட்டதோ அந்த வழி முறைக்கு மாற்றமாக புது முறையில் குர்ஆன் அருளப்படவில்லை. மாறாக குர்ஆனுடன்

IAS தேர்வு விவரம் அறிய தனி இணையதளம்


        


       நன்றி : mpmpages

புதன், 27 ஜூன், 2012

அர்த்தமுள்ள கேள்விகள்


வினா: 'அனைத்து செயல்களும் இறைவனால் செய்யப் படுகிறது என்றால், மனிதன் செய்யும் தீய செயலும் இறை வனால் தான் செய்யப்படுகிறது. அப்படி இருக்கும் போது அவனுக்கு நரகம் கொடுப்பது எவ்வகையில் நியாயம்?' என்று ஒரு மாற்று மத நண்பர் என்னிடம் கேட்டார்.
- எஸ். ஷேக் பீர் முஹம்மது, மேலப்பாளையம்.

விடை: விதியை நம்புவதால் நீங்கள் கூறுவது போன்ற கேள்விகள் எழுகின்றன. விதியை நம்பவில்லை என்று வைத்துக் கொள்வோம். அப்போது வேறு விதமான கேள்விகளை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும்.ஒவ்வொரு மனிதனும் தனது முடிவின் படி தான் செயல்படுகிறான். இதில் இறைவனின் தலையீடு ஏதுமில்லை என்று நம்பினால் நீங்கள் கேட்டுள்ள கேள்வியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
ஆனால், கடவுள் என்பவன் பலவீனனாக, கையாலாகாதவனாகக் கருதப்படும் நிலை இதனால் ஏற்படும்.

'நடந்தது, நடந்து கொண்டிருப்பது, இனி நடக்கவிருப்பது அனைத்தையும் அறிந்தவன்' என்பது கடவுளின் பண்பாகும். அந்தப் பண்பு இல்லாதவன் கடவுளாக இருக்க முடியாது.நாளைய தினம் நீங்கள் சென்னை வரவிருக்கிறீர்கள். இது இன்றைக்கே இறைவனுக்குத் தெரியுமா என்று கேட்கப்படும் போது தெரியாது என்று நீங்கள் கூறினால் அப்படி ஒருவனை இறைவனாக ஏற்கத் தேவையில்லை. நாளை நடப்பது எப்படி எனக்குத் தெரியாதோ அது போல இறைவனுக்கும் நாளை நடப்பது தெரியாது என்று ஆகிறது.நாளை நீங்கள் சென்னை வருவது இன்றைக்கே இறைவனுக்குத் தெரியும் என்பது உங்கள் விடையாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.எது நடக்கும் என்று இறைவன் அறிந்து வைத்திருக்கிறானோ அது நடந்து தீர வேண்டும்.நாளை எது நடக்கும் என்று இறைவன் அறிந்து வைத்துள்ளானோ அதைத்தான் உங்களால் செய்ய முடியுமே தவிர அதை மீற முடியாது என்பதும் இந்த விடைக்குள் அடங்கியுள்ளது.அதாவது நாளை என்ன நடக்கும் என்பது இறைவனுக்குத் தெரியும் என்று நீங்கள் நம்பினால் விதியின் நம்பிக்கையும் அதனுள் அடங்குகிறது.அவனுக்குத் தெரியாது என்று நம்பினால் அப்படி ஒரு இறைவன் தேவையில்லை என்று ஆகிறது. இரண்டு நம்பிக்கைகளிலுமே சில சங்கடங்கள் உள்ளன.
இதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'விதியைப் பற்றி மட்டும் சர்ச்சை செய்யாதீர்கள்! உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயத்தினர் அழிந்தது விதியில் சர்ச்சை செய்த காரணத்தினாலேயே' என்று கூறியுள்ளார்கள். (நூல்: அஹ்மத் 6381)

இஸ்லாத்தின் கொள்கை, கோட்பாடு, சட்டத் திட்டம் பற்றி என்ன கேள்வி கேட்கப்பட்டாலும் அதற்கு அறிவுப்பூர்வமான விடை இஸ்லாத்தில் உண்டு.

செவ்வாய், 26 ஜூன், 2012

கல்வி உதவித்தொகை பெறுவது எப்படி?


தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று, உயர்கல்வி படிக்க இடம் கிடைத்துள்ள ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி உதவிக்கரம் நீட்டுகின்றன அரசு அமைப்புகள். தேவையும் தகுதியும் உள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கல்வி உதவித் தொகை பெறலாம். இந்த உதவித் தொகைகள் பற்றிய தகவல்கள் இதோ...!

முதல் தலைமுறை பட்டப் படிப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை
அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள், வேளாண்மைக் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகளில் ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கை மூலம் அட்மிஷன் பெறும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தமிழக அரசே வழங்கி வருகிறது. இதுவரை பட்டதாரிகளே இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தொழில் கல்வி படிப்பதை ஊக்குவிக்கும் வகையில் சாதி வேறுபாடின்றி, பெற்றோரின் வருமானத்தைக் கணக்கில் கொள்ளாமலும் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது. 

ஒற்றைச்சாளர முறை மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கும் இந்தக் கல்விக் கட்டணச் சலுகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தையும் பல்கலைக்கழகங்கள் நடத்தும் படிப்புகளுக்கு பல்கலைக்கழகங்கள் நிர்ணயிக்கும் கட்டணத்தையும் தனியார் தொழிற் கல்லூரிகளில் கட்டண நிர்ணயம் செய்வதற்காக நிபுணர் குழு நிர்ணயித்துள்ள கட்டணத்தையும் அரசு வழங்கும். இச்சலுகை பெற தங்களது குடும்பத்தில் பட்டதாரிகளே இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் மாணவர் வசிக்கும் பகுதியின் வருவாய்த் துறையின் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தகுதிக்குக் குறையாத அலுவலரிடம் சான்றிதழ் பெற்று அளிக்க வேண்டும். மாணவர்கள் தொழிற்கல்வி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்போதே, குடும்பத்தில் முதன் முதலாக பட்டப் படிப்பு படிக்கும் மாணவர் என்ற சான்றிதழையும் அதற்கான உறுதிமொழிப் பத்திரத்தையும் அளிக்க வேண்டும்.

ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை...

கல்வி நிறுவனங்களில் படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்குகிறது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம். இந்த மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்கவேண்டும். கல்வி நிலையத்துடன் இணைந்த விடுதிகளில் தங்கி பட்ட மேற்படிப்பு, மருத்துவம், பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு உயர் கல்வித் தொகை வழங்கப்படும். இந்தக் கல்வி உதவித்தொகையைப் பெற விரும்பும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனத்தின் மூலமாக அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு சென்னையிலுள்ள ஆதிதிராவிடர் நல ஆணைய அலுவலத்தை அணுகலாம்.

தொலைபேசி எண்: 044-28594780

சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

பள்ளிகளில் பிளஸ் ஒன், பிளஸ் டூ, ஐடிஐ, பாலிடெக்னிக்,. நர்சிங் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ, இளநிலைப் பட்டப் படிப்பு, முதுநிலைப் பட்டப் படிப்பு, எம்பில், பிஎச்டி படிக்கும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு (முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சிக்கள்) மத்திய அரசின் சிறுபான்மையின அமைச்சகம் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தின்

பர்தாவை அகற்றாததால் பெண்ணுக்கு கல்லூரியில் அனுமதி மறுப்பு


பர்தாவை அகற்றாத காரணத்தினால் லண்டன் கல்லூரியில் முஸ்லிம் பெண் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
லண்டனில் மான்செஸ்டரின் வேலி ரேஞ்ச் பகுதியில் வசிப்பவர் அப்துல்(வயது 40). இவர் ஒரு தொழிலதிபர், இவரது மனைவி மரூன் ரபிக்(வயது 40).
இவர்களுக்கு அவைஸ்(வயது 18), மற்றும் இப்ராகிம்(வயது 12) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதே பகுதியில் உள்ள கல்லூரியில் அவைஸ் படிக்கிறான்.
இந்த கல்லூரியில் பெற்றோர் சந்திப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்துக்கு அழைக்கப்பட்டதால் மரூன் ரபிக், பர்தா அணிந்து வந்தார்.
இவரை தடுத்த கல்லூரி காவலர்கள் பர்தாவை அகற்றினால் தான் கல்லூரிக்குள் அனுமதிப்போம்,என்றனர்.
கடைசி வரை மரூன் ரபிக் பர்தாவை அகற்ற மறுத்ததால் அவர் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை.
இதுகுறித்து மரூன் ரபீக், பிரிட்டனில் பிறந்து வளர்ந்த நான், கல்லூரிக்கு அடிக்கடி வருகிறேன். இருப்பினும் என்னை பர்தாவை அகற்றச் சொல்லி வருத்தமடைய செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

நன்றி:newsonews

சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி


அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்தமதத்தினர், சீக்கீயர் மற்றும் பார்சி வகுப்பைச்சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2012-13 ஆம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவிகளின் பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு இலட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாணவ, மாணவிகள் இந்த ஆண்டின் இறுதித் தேர்வில் [1 ஆம் வகுப்பு நீங்கலாக] 50 விழுக்காடு மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்று தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் இதர துறைகள், நல வாரியங்கள் மூலம் 2012-13 ம் ஆண்டில் கல்வி உதவித்தொகை பெறுதல் கூடாது. குடும்பத்தில் அதிகபட்சம் 2 பேருக்கு மட்டும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தில் உள்ள மாணவ மாணவியருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வெள்ளி, 22 ஜூன், 2012

அல்குர்ஆனும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் (பகுதி - 4)


(நபியின் மனைவியரே!) உங்கள் வீடுகளில் ஓதிக் காட்டப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும் ஹிக்மத்தையும் நினைவு கூருங்கள். (அல்குர்ஆன் 33 : 34)
ஹிக்மத் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்கப் பட்ட ஞானம் தான் என்பது முற்றிலும் தவறானது என்பதை இவ்வசனம் விளக்குகிறது. இவ்வசனத்தில் அல்லாஹ்வின் வசனங்கள் எவ்வாறு ஓதிக் காட்டப்படுகிறதோ அதுபோலவே ஹிக்மத்தும் ஓதிக் காட்டப்படுவதாக அல்லாஹ் கூறுகிறான். நபியின் மனைவியர் வீட்டில் ஓதிக் காட்டப்படுகிறது என்றால் ஓதிக் காட்டியவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான். நபி (ஸல்) அவர்கள் தமக்கு அருளப்பட்ட அல்லாஹ்வின் வசனங்களையும் ஓதிக் காட்டியுள்ளார்கள். மேலும் ஹிக்மத்தையும் ஓதிக் காட்டியுள்ளார்கள் என்பது தெளிவாகிறது.
திலாவத் – ‘ஓதிக் காட்டுதல்என்பது பிறரது வார்த்தையை ஒருவர் எடுத்துக் கூறுவதைக் குறிக்கும் சொல்லாகும். எனவே அல்லாஹ்வின் வசனங்கள் எப்படி நபியின் சொந்த வார்த்தை இல்லையோ அது போலவே ஹிக்மத்தும் அவரது சொந்தக் கருத்தல்ல. இரண்டுமே அல்லாஹ்வுக்குச் சொந்தமாகவுள்ளதால் தான் இரண்டையும் நபி (ஸல்) ஓதிக் காட்டியுள்ளார்கள் என்று அல்லாஹ் இங்கே கூறுகிறான்.
குர்ஆன் அல்லாத வஹீ உள்ளது என்பதற்கு இன்னும் ஏராளமான ஆதாரங்கள் குர்ஆனிலேயே உள்ளன. அவற்றை மேலும் பார்ப்போம்.
அல்லாஹ் எந்த நபியை அனுப்பினாலும் அவருக்கு வேதப்புத்தகத்தை மட்டும் கொடுத்து இதை மட்டும் மக்களுக்குப் படித்துக் காட்டுங்கள் என்று கூறி அனுப்புவதில்லை. மாறாக வேதத்தில் எழுகின்ற சந்தேகங்களுக்கு

வெள்ளி, 8 ஜூன், 2012

அல்குர்ஆனும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் (பகுதி - 3)

குர்ஆன் அல்லாத வேறு வஹீயும் உள்ளன என்பதற்கு இன்னும் பல வசனங்கள் சான்றுகளாக உள்ளன.
திருக்குர்ஆன் எப்படி இஸ்லாத்தின் மூலாதாரமாக அமைந்துள்ளதோ அது போலவே ஆதராரப்பூர்வமான ஹதீஸ்களும் இஸ்லாத்தின் மூலாதாரங்களாக அமைந்துள்ளன. இந்த உண்மையை குர்ஆனிலிருந்தே நாம் அறிந்து கொள்ள இயலும்.
கடந்த இரண்டு தொடர்களில் குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீ இருக்கிறது என்பதையும், அவற்றையும் பின்பற்றியாக வேண்டும் என்பதையும் திருக்குர்ஆனின் இரண்டு வசனங்களை ஆதாரமாகக் கொண்டு அறிந்து கொண்டோம்.அல்லாஹ்வின் தூதர்களாக அனுப்பப்படும் நபிமார்களுக்கு அல்லாஹ் வேதத்தை மட்டும் கொடுத்து அனுப்புவதில்லை. இன்னொன்றையும் சேர்த்துக் கொடுத்து அனுப்பி இருக்கிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் இவ்வாறே அல்லாஹ் கொடுத்து அனுப்பியுள்ளான்.
அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருட்கொடையையும் உங்கள் மீது அவன் இறக்கிய கிதாபையும் ஹிக்மத்தையும் நீங்கள் நினைவு கூருங்கள்! இதன் மூலம் அல்லாஹ் உங்களுக்குப் போதனை செய்கிறான். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! மேலும் அல்லாஹ் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் அறிந்தவன் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 2 : 231)
மேலும் அல்லாஹ் உம்மீது கிதாபையும் ஹிக்மத்தையும் இறக்கியுள்ளான். மேலும் நீர் அறியாதவற்றை உமக்குக் கற்றுத் தந்தான். உமக்கு அல்லாஹ் செய்திருக்கும் அருள் மகத்தானதாக உள்ளது. (அல்குர்ஆன் 4 : 113)
இவ்விரு வசனங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது கிதாபையும், ஹிக்மத்தையும் அருளியதாக அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வின் வேதத்தில் தேவையற்ற வீணான ஒரு வார்த்தையும் இருக்காது. இருக்க முடியாது. இருக்கக் கூடாது. அல்லாஹ் தனது இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அருளியது வேதம் மட்டுமே, அதாவது அல்குர்ஆன் மட்டுமே என்றிருந்தால் கிதாபை உம்மீது இறக்கினான் என்று கூறுவதே போதுமானதாகும். ஆனால் கிதாபையும் ஹிக்மத்தையும் உம்மீது இறக்கியுள்ளேன் என்று அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ் இரண்டு வகையான செய்திகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளியதாகக் கூறும் போது கிதாபை மட்டும் தான் அல்லாஹ் அருளினான் என்று வாதிடுவது இவ்விரு வசனங்களையும் மறுப்பதாகத் தான் அமையும்.

வியாழன், 7 ஜூன், 2012

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்-லால்பேட்டை

கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் கடந்த வாரம், 29.05.2012 அன்று தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத் நடத்திய இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத்தின் மாநில தலைவர் சகோதரர் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு கேட்கப்பட்ட வினாக்களுக்கும் விமர்சனங்களுக்கும் விடையளித்தார்.

கூட்டதில் கலந்து கொண்ட மக்களில் ஒரு பகுதியினர்


10.05.2012 முதல் 20.05.2012 வரை லால்பேட்டை தவ்ஹீத் மர்கஸில் நடந்த கோடைக்கால பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சகோதரர் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்கினார்.


மாவட்டத் தலைவர் முத்து ராஜா அவர்கள் நன்றியுரை கூற நிகழ்ச்சி நிறைவுற்றது.

அல்ஹம்துலில்லாஹ்......!


புதன், 6 ஜூன், 2012

ஜிப்மரில், ஒன்பது புதிய மருத்துவ சிறப்பு படிப்புகள்

புதுச்சேரி ஜிப்மரில், ஒன்பது புதிய மருத்துவ சிறப்பு படிப்புகள், இந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

ஜிப்மரில் எம்.பி.பி.எஸ்., இடங்கள், இந்தாண்டு, 75லிருந்து 145 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த அதிகரிப்பால், 20 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்த புதுச்சேரிக்கு, தற்போது, 40 இடங்கள் கிடைத்துள்ளன. இதேபோல் முதுநிலை மருத்துவ படிப்பு இடங்கள், 88லிருந்து 124 ஆக உயர்த்தப்பட்டுள்ளன.

டி.எம்., நெப்ரோலஜி, டி.எம்., மெடிக்கல் ஆங்காலஜி, எம்.சி.எச்., பிளாஸ்டிக் சர்ஜரி, எம்.சி.எச்., குழந்தை மருத்துவ அறுவை சிகிச்சை, இதயம் மற்றும் நரம்பு உணர்வு அகற்றியல், எம்.எஸ்.சி., எம்.எல்.டி., எம்.எஸ்.சி., மெடிக்கல் சைகாலஜி உட்பட, ஒன்பது புதிய மருத்துவ சிறப்பு படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

படிப்பு கால ஆராய்ச்சி நிதியாக, 20011-12 ஆண்டில், இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு, 33.67 லட்சமும், முதுநிலை மருத்துவர்களுக்கு, 52.61 லட்சமும் ஒதுக்கப்பட்டது. இந்தாண்டு, இத்திட்டத்திற்கான தொகை, 3.25 கோடி ரூபாயாக ஒதுக்கிடப்பட்டுள்ளது.

நன்றி : Thaalamnews


EPL - ஆட்டநாயகன் பரிசு நிராகரிப்புநம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.


லகின் பிரசித்திப்பெற்ற கால்பந்தாட்ட போட்டிகளில் (tournament) இதுவும் ஒன்று. முக்கிய ஆட்டம். 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற அணியில் அந்த இரண்டு கோல்களையும் போட்டதால் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்படுகின்றார் ஒருவர். ஆனால் பரிசாக கொடுக்கப்பட்ட பெரிய ஷாம்பைன் (மது) பாட்டிலை ஏற்க மறுத்துவிடுகின்றார்.இது எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை சற்றே சிந்தித்து பாருங்கள். இன்று உலக ஊடகங்கள் பலவும் இந்த செய்தியை பெரிய அளவில் பேசுகின்றன. கால்பந்தாட்ட உலகின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவராக கருதப்படும் இந்த வீரர், தன்னுடைய இந்த செயலால் பலரது பாராட்டுகளையும் பெற்று மக்கள் மனதில் சூப்பர்ஸ்டாராக உட்கார்ந்துவிட்டார்.

யார் இவர்?
எந்த போட்டி அது?
என்ன காரணம் கூறி பரிசை நிராகரித்தார்

கடந்த மே மாதம் நடந்த இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் (EPL) போட்டிகளில் தான் இந்த சம்பவம் நடந்தேறியது. இந்த வீரரின் பெயர் யாயா டோரே (Yaya toure). ஐவரி கோஸ்ட் நாட்டை சேர்ந்த இவர் தற்போது மான்செஸ்டர் சிட்டி அணிக்காக ப்ரீமியர் லீக்கில் விளையாடி வருகின்றார். கடந்த 44 வருடங்களாக எந்தவொரு முக்கிய tournament-டையும் வென்றதில்லை மான்செஸ்டர் சிட்டி. தற்போது யாயா டோரே போன்றவர்களின் சிறப்பான ஆட்டத்தால் மகுடம் கிடைக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது..

யாயா டோரே - இந்த மனிதர் கால்பந்தாட்ட ஹீரோக்களில் ஒருவராக பார்க்கப்படுகின்றார். மிகச் சிறந்த மத்தியகள ஆட்டக்காரரான இவர் பந்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும், நீண்ட தூரம் லாவகமாக பாஸ் செய்வதிலும், போட்டியில் ஆதிக்கம் செலுத்துவதிலும் கில்லாடி.

ஆப்பிரிக்காவின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்று விருதை (African Footballer of the Year) 2011-ஆம் ஆண்டு பெற்ற இவர், தேவைப்பட்டால் முன்னேறிச்சென்று தாக்குவதிலும் வல்லவர். இதனாலேயே இவருக்கு box-to-box player என்ற செல்லப்பெயரும் உண்டு.

கடந்த மே மாதம்  newcastle அணியுடன் நடந்த முக்கிய போட்டியில் தன் அணிக்காக இரண்டு கோல்களை போட்டு வெற்றி தேடித்தந்தார் டோரே. இதற்காக ஆட்டநாயகனாக தேந்தேடுக்கப்பட்ட அவருக்கு பெரிய ஷாம்பைன் (champagne) பாட்டில் பரிசாக கொடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ள மறுத்து தன் பக்கத்தில் இருந்த சக வீரரிடம் கொடுத்துவிட்டார் டோரே.

என்ன காரணம்?

இதற்கு அவர் கூறிய காரணம், "நான் குடிப்பதில்லை. ஏனென்றால் நான் ஒரு முஸ்லிம்.

(I don't drink because I am a Muslim)"

அல்ஹம்துலில்லாஹ்........! 

நன்றி : எதிர்க்குரல்